வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்
"வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்" என்று ஒரு தனியான வகைப்பாடினை ஏற்படுத்தி, அவ் வகைப்பாட்டில் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஏற்றுக்கொண்டு, பரிசு பெறுபவர்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கி வருகின்றது. விதிமுறைகள் 19 மற்றும் 24 இல் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்குரிய தகவல் தரப்பட்டுள்ளது.
கடந்த 2008.01.16 அன்று சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் 2006 ஆம் ஆண்டிற்கான பரிசுகள் வழங்கப்பட்டன. 2006 இற்குரிய வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் வகைப்படுத்தலில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறையின்படி இல்லாததால் பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை என்பதால் பரிசுகள் வழங்கப்படவில்லை. பல வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இப்பரிசுத் திட்டம் பற்றிய விதிமுறைகள், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்காமையே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என நாம் எண்ணுகிறோம்.
தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய தகவல் தளமான விருபாவில் பலர் இத்தகவலை எதிர்பார்ப்பதால், நாம் இதனை எமது தளத்தில் சேர்த்துள்ளோம், கூடவே இதுவரை தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களை ஒரே பார்வையில் பார்க்கக்கூடியாவறு ஒர் தனிப் பக்கத்தையும் புதிதாக அமைத்துள்ளோம்.
இதுவரை காலமும் இவ்வாறு தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடித் தொகுத்துத் தர முயற்சி செய்கிறோம்.
ஓர் எழுத்தாளர் அல்லது பதிப்பகம் எத்தனை முறை பரிசு பெற்றுள்ளது என்பதையும் ஆண்டுவாரியாக எந்த எந்தப் புத்தகங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதையும் இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
"தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்" பற்றிய
1. விதிமுறைகள்
2. விண்ணப்பப்படிவம்
3. உறுதிமொழி
Disclaimer :
மேற்படி விவரங்கள் 2008 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் (2008-01-16) தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்பக்கத்தில் உள்ள தட்டச்சுத் தவறுகள் தவிர்ந்த ஏனைய விவரங்களை நேரடியாக தமிழ் வளர்ச்சித்துறையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். விருபா இணையதளம் எந்த நிலையிலும் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாகாது. தகவலுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தகச் சந்தை
தேடல் மிக்க தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பில் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்துகின்றோம். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, நன்மதிப்பைப் பெற்ற ஒரு வலைப்பதிவாளர், தமிழ் இணைய ஆர்வலர் இதனை வடிவமைக்கும்/நிர்வகிக்கும் ஆலோசகர் பொறுப்பில் உள்ளார்.
வாசகர்கள் தங்களுக்குள் தேவைப்படும் பழைய அரிதான புத்தகங்களை பரிமாறிக்கொள்ள வகை செய்ய இத்தளம் முனைகிறது. நடந்து முடிந்த 2008 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய பல பதிவுகளை ஒருங்கே சேர்த்துள்ளது. வாசக-படைப்பாளி-விற்பனையாளர் இடையே ஒரு பாலமாக இருக்க முனையும் இத்தளத்தின் இதர பணிகளை, நோக்கங்களை வாசகர்கள் நேரடியாக தமிழ் புத்தகச் சந்தை தளத்திற்கு சென்று பார்வையிட கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் புத்தகச் சந்தை வெற்றி பெற விருபா மனதார வாழ்த்துகிறது.
2008 புத்தகத்திருவிழா - தமிழினி
\\தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வழித்துணை வருகின்ற பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்றி வைக்கவும் 'தமிழினி' தன்னை நேர்ந்து கொள்கிறது. கேளிக்கயன்று இதன் பொதுநோக்கு;சமூக நலன்\\
என்ற வாசகத்துடன் புதிதாகக் களம் இறங்கியுள்ளது 'தமிழினி' என்னும் கலை இதழ்.
ஆசிரியர் : நா.விஸ்வநாதன்
தொடர்புமுகவரி : 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014
தொலைபேசி : +91 9884196552
விலை : ரூ 20.00
- ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை - கரு. ஆறுமுகத்தமிழன்
- வலைப்பதிவுலகம் : வலைக்கும்மி - ஹரன் பிரசன்னா
- ஆய்வுக் கட்டுரை : உலகமயமாக்கல் ; அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்
- 89362 : அகில்
- நாடோடித் தடம் : குஜராத் நினைவுகள் - ராஜ சுந்தரராஜன்
- மோடி விலாசம் - அகில்
- கட்டுரை : 2000 நாட்கள் ; பழங்குடி மக்களின் சமர் - அ.முத்துக்கிருஷ்ணன்
- விளையாட்டு : மின்னல் வீரன் - எம்.கோபாலகிருஷ்ணன்
- நாஞ்சில் நாடன் 60
- ஆளுமைச் சித்திரம் : தாடகை மலை அடிவாரத்தில் - ஜெயமோகன்
- சிறுகதை : யாம் உண்பேம் - நாஞ்சில் நாடன்
- ஆய்வுக் கட்டுரை : கூத்தில் ஓர் தோய்வு - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
- தமிழறிஞர் வரிசை : ஆ.முத்துசிவம் ; விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் - அ.கா.பெருமாள்
- விமர்சனம் : இயல் விருதின் மரணம் - ஜெயமோகன்
- இலையுதிர் காலத்தில் ஒரு விருது - தேவசகாய குமார்
- சிற்பவியல் : ரதி - செந்தீ நடராஜன்
- நூல் விமர்சனம் : வெண்ணிலையும் வேணுகோபாலும் - தேவதேவன்
- நகுதற் பொருட்டன்று : காரோடும் வீதி - மகுடேஸ்வரன்
- உரைவிளக்கம் : கவிதையின் பன்முகப் பரிமாணங்கள் - இரா.குப்புசாமி
- திரை விழிவு : ராஜ சுந்தரராஜன்
- மனநிழல் : எச்சரிக்கை ; இது பொதுவழி அல்ல - பாதசாரி
2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்
இந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது. இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது.
அடிமை முறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன.
இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை... ஆகியவற்றை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில் : பி.ஆர்.பரமேஸ்வரன்
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
2.குழந்தைகளை கொண்டாடுவோம்
இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும்.
எழுத்தாளர் : ஷ.அனமஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
பக்கம் : 158
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
3.கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்
தன் பிறப்பு தனக்குரிய சமூக வாழ்க்கை இவற்றைக் கடந்து தனக்காக தன் சொந்த முயற்சியால் இன்னொரு உலகதைதைப் படைத்துக் கொள்ள விரும்பிய ஒரு பழங்குடி இளைஞனின் கதை. புதுப்பிறப்பெடுக்க விரும்பிய அவனது முயற்சியை சமகால சமூகம் முறியடித்த கதை.
எழுத்தாளர் : மகாசுவேதா தேவி
தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி
பக்கம் : 176
விலை : 90.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
4.கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி
மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச் சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரம்ப கல்விக்கு கொடுக்கப்படுவதில்லை.
தமிழகத்தில் முதல்தலைமுறையினராக இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்விமுறை கல்வியின் உள்ளடக்கம் மற்றும் பயிற்று முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காணக்கூடிய மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.
எழுத்தாளர் : வசீலி சுகம்லீன்ஸ்கி
தமிழில் : முனைவர் அ.வள்ளிநாயகம் & வ.அம்பிகா
பக்கம் : 144
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
5.புதிய உலகம்
இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.
எழுத்தாளர் : முத்து மீனாட்சி
பக்கம் : 88
விலை : 35.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
6.மலர்ந்து மலராத
விடலைப் பருவத்தினருக்கான வழிகாட்டி.
பழமையான கலாச்சாரத்தில் ஊறியவர்கள் இப்புத்தகத்தை அவ்வளவாக வரவேற்காமலிருக்கக் கூடும். அவர்களது எண்ணங்களை மதித்து நாம் அவர்களுக்கு கூற விரும்புவது."இப்புத்தகம் அறிவியல் ரீதியானதே. இதில் கொடுக்கப்ட்டுள்ள உண்மைகள் யாவும் இயற்கை நிகழ்வுகள் பற்றியனவே. இந்த உண்மைகளைப் பற்றி விடலைப் பருவத்தினர் ஆரோக்கியமான முறையில் அறிவது நல்லதல்லவா?, அதுமட்டுமன்று பல பாலியல் பற்றிய விவரங்களை, திரித்தும் கவர்ச்சியூட்டும் வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதத்தில் சிறு புத்தகங்களாக வெளியிட்டு பல்வேறு சமூக விரோதிகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது நடைமுறையில் இருக்கும் வருந்தத்தக்க ஒன்றாகும்."
மேற்கூறிய காரணங்களால் அறிவியல் பூர்வமாக இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து வெளியிட்டுள்ளோம்.
ஆக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழுவினர்
பக்கம் : 80
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
2008 புத்தகத்திருவிழா - குமரன் புத்தக இல்லம்
கலாநிதி க.கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. இவை 1967 ஆம் ஆண்டுமுதல் 1981 ஆம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வுநூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை. இலக்கிய ஆர்வலர்களால் நீண்டகாலம் நினைவிற்கொண்டு போற்றப்படும் சிறந்த முன்னிரைகளை அவ்வப்போது கைலாசபதி எழுதி வழங்கினார். நாவல் என்ற இலக்கிய வகையின் இயல்புகள் பற்றியும், யதார்த்தவாதம் பற்றியும் கோட்பாடு முறையிலான ஆய்வுகள் வெளிவராத காலத்தில் "செவ்வானம்" (1967) போன்ற நாவல்களுக்கு அவர் வழங்கிய முன்னுரைகள் அவரிற்கு தமிழ் இலக்கிய உலகில் நிலையான ஓர் இடத்தை தேடிக்கொடுத்தன. இந்நூலில் இடம்பெறும் முன்னுரைகளிற் சில அவரது நெருங்கிய நண்பர்களதும், மாணாக்கர்களினதும் நூலிற்கு அவர் எழுதி வழங்கியவை.பெரும்பாலானவை இலக்கியப்பிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்ற பெருவட்டத்தைச் சேர்ந்த பலரின் ஆக்கங்களிற்கு அந்நூல்களை ஆக்கியோரது வேண்டுகோளின்படி எழுதி வழங்கப்பட்டவை. குறித்த இலக்கியவகையின் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் முறையிலும் சமூக வரலாற்றுப் பின்னணியில் குறித்த ஆக்கத்தை மதிப்பிடும் வகையிலும் இம்முன்னுரைகள் அமைந்துள்ளன.
எழுத்தாளர் : க.கைலாசபதி
பக்கம் : 202
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
2.தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா (பாடவிமர்சனவியல் நோக்கு)
தமிழ்நூற் பதிப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவரான உ.வே.சாமிநாதையவர்களை மையப்படுத்தி அவரது பணிகளையும், அவர் காலத்திலே முக்கிய இடம் பெற்றிருந்த சி.வை.தாமோதரம்பிள்ளை பற்றியும் இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஆறுமுகநாவலரின் பதிப்புப் பணி பற்றியும் இச்சிறு நூல் எடுத்துரைக்க முயல்கிறது. அத்துடன் தமிழ்நூற்பதிப்புப் பணியினை இவர்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் இவர்களுக்குப் பின் தமிழ்நூற் பதிப்புப் பணியிற் பேரிடம் பெறவேண்டிய வையாபுரிப் பிள்ளையின் பதிப்புப் பணிகளையும் இது குறிப்பிட்டுச் செல்கிறது. "Testual Critisim" எனும் பதத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பு 'பாடவிமர்சனவியல்' என்பதே என நிறுவி அத்துறையின் வரையறைக்குள் நின்றுகொண்டு மேற்கூறிய அறிஞர்கள் பற்றிய சிற்றாய்வினை இந்நூல் மேற்கொள்கிறது.
எழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பக்கம் : 58
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
3.தொல்காப்பியமும் கவிதையும்
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதைப்பற்றி (பா) கூறுவனவும் அவை தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளன என்பது பற்றியும் விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகளை இந்நூலிலே காணலாம். தமிழிற் கவிதை வளர்ச்சிப்பற்றிய தொடக்க நிலைச் சிந்தனைகளை இந்நூல் ஆராய்கின்றது.
எழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பக்கம் : 58
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
4.ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்
தமிழ் நாடகத்துறையிலே ஏறத்தாழ ஐம்பது வருடங்களாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தலைசிறந்த வானொலி நடிகர், மேடை நடிகர், நாடக நெறியாளர், தயாரிப்பாளர், நாடகப் பதிப்பாளர், நாட்டுக்கூத்தின் மீட்சிக்காக பேராசிரியர் வித்தியானந்தனுடன் சேர்ந்து உழைத்தவர். நாடகத்தை தனது மேற்படிப்புக்கான கற்கையாகத் தெரிவு செய்து கற்றவர். நாடகத்தை பல்கலைக்கழக உள்வாரி மாணவருக்கும் பாடசாலைக்கும் உரிய கற்கை நெறியாக ஆக்கி அவற்றுக்கான பாடத்திட்டத்தை தயாரித்தவர். அந்தவகையிலே ஈழத்து அரங்கத்துடனும் அரங்க வரலாற்றுடனும் இணைந்துகொண்டவர். இன்றைக்கு இலங்கையிலே நாடகத்தைப் பற்றிப் பேசுகின்ற எழுதுகின்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவரோடு ஆசிரிய - மாணவத் தொடர்பு அல்லது நட்புத் தொடர்பினை உடையவர்களே. அவரோடு முரண்படுபவர்களும் இதில் அடக்கம். இவ்வாறாக நீண்டகாலமாக நாடக அரங்கில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் , ஈழத்திலெழுந்த தொண்ணூறு வீதமான நாடகம் பற்றிய நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். எழுதும்படி வேண்டப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக அவர் எழுதிய முன்னுரைகள் ஈழத்துத் தமிழ் அரங்கின் வளர்ச்சியையிம் அதில் உழைத்தவர்களையும் பற்றிப் பேசுவனவாய் உள்ளன. எனவே ஈழத்து அரங்க வரலாறு பற்றியறிவதற்கு இவை மிகுந்த பயனளிப்பன. நாடகம் என்றால் என்ன? எனத்தொடங்கி, கற்கைநெறியாக 'அரங்கு' என்ற நூலுக்கான முன்னுரைவரை வெளிவந்த இருபது முன்னுரைகளையும் பேராசிரியர் சிவத்தம்பியின் நாடகப்பணிகள், பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகப் பணிகள், மலையக அரங்கு பற்றிய ஒரு சிந்திப்பு ஆகிய கட்டுரைகளையும் தொகுத்து வாசிக்கும்மோது இதனை அறிந்து கொள்ளமுடியும்.
தொகுப்பாசிரியர் : கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
பக்கம் : 180
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
2008 புத்தகத்திருவிழா - தமிழ்மண்
"தமிழர் வரலாறு" என்னும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய ( History Of The Tamils ) நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளை சுருக்கித் தந்தும், அறிஞர் பி.இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். மூலநூல் ஆங்கிலத்தில் இருப்பதனால், தமிழ் ஆய்வாளர்கள் தாம் ஆய்வு செய்யும் போது, இத்தகைய நூல்களையும் கற்றறிந்து, தக்க சான்றுகளுடன் எழுதாமல் தவிர்த்து விடுகின்றனர்.
இக்குறையைப் போக்கும் வகையில், தக்கார் ஒருவரைக்கொண்டு தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 270
விலை : 185.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
2.தொன்மைச் செம்மொழி தமிழ்
தமிழ், முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும் வகையில் அதன் தொன்மையையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கியுள்ள இந்நூல், செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களைத் தாங்கியுள்ளது.
நூலாசிரியர் பி.இராமநாதன் மொழியல், வரலாறு, அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்.
எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
3.நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்
நா.மு.வே.நாட்டார் அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களும் 24 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது
எழுத்தாளர் : நா.மு.வேங்கடசாமி நாட்டார்
விலை : 4800.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
2008 புத்தகத்திருவிழா - NCBH
1930-2004 வரையிலான 75 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் தேர்த்தெடுத்த கதைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டுள்ள இந்நூல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தமிழின் முதல் வரலாற்று ஆவணமாகும்.
நவீன தமிழ் இலக்கியத்தின் புது ஊற்றாகப் புறப்பட்டிருக்கும் பெண்ணிய படைப்புக்களில் உற்சாகம் பீறிடுகிறது. இளைய தலைமுறையினரின் உத்வேகம் இலக்கிய வெளிக்குப் புதுமுகத்தைத் தருகிறது. இப்புது உத்வேகத்தால் உந்தப்படும் இளைய படைப்பாளிகள் தங்கள் வேர்களைத் தேடிப் பயணிக்கிறார்கள். அப்படியான தீராத் தேடலின் மிகச் சிறிய பதிவே இத்தொகுப்பு.
உரத்து ஒலிக்கும் தமிழ்ப் பெண் கவிதைகளில் அ.வெண்ணிலாவின் குரல் தனித்துவமானது. மனிதத்திற்கான பேரன்பு சுரக்கும் ஈரத்துடன் புனையும் அ.வெண்ணிலா, இத்தொகுப்பின் மூலம் தொகுப்பாசிரியராகி உள்ளார்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் :
விலை :
வெளியீடு : NCBH
2.என் இனிய ஹைக்கூ
தமிழ் ஹைக்கூ கவிஞர்களில் முக்கியமானவர் மு.முருகேஷ். கால் நூற்றாண்டாக கவிதைத் தளத்தில் இயங்கிவரும் ஆர்வமிக்க கவிப்பயணி."இனிய ஹைக்கூ" கவிதை இதழின் வழி தமிழ் ஹைக்கூவை உலகெங்கும் கொண்டு சென்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் 'நிலா முத்தம்' என்னும் பெயரில் மலையாளத்தில் நூலாக வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் : மு.முருகேஷ்
பக்கம் :
விலை :
வெளியீடு : NCBH
( NCBH நிறுவனம் பல புதிய புத்தகங்களைக் 2008 கண்காட்சிக்காக பதிப்பித்துள்ளது, அவற்றின் தகவல்கள் இன்னமும் எமக்குக் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் இதே பக்கத்தில் சேர்த்துக்கொள்ளபடும்.)
2008 புத்தகத்திருவிழா - சாளரம் இலக்கிய மலர்
பொன்னி பதிப்பகத்தின் பதிப்பாளர் வைகறை அவர்களை ஆசிரியராகக்கொண்டு சாளரம் இலக்கிய மலர் இரண்டாவது ஆண்டாக 2008 புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழியல் சார்ந்த பல கட்டுரைகளும், அறிவியல் தொடர்பான அறிவுசார் கட்டுரைகளுடனும் சாளரம் இலக்கிய மலர் மலர்ந்துள்ளது.
"புத்தகப் பதிப்புத் துறையின் திசைவழி என்ன?" என்ற ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புச் சூழலில் இன்றைய நிலமையை கூறுகிறது. அரசு நல்லெண்ணத்தில் நாட்டுடமையாக்கிய நூல்கள் பல பதிப்பாளர்களால் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்படுதலால் ஏற்படும் தனித்துவ இழப்பையும் சுட்டிக்காட்டுகிறது.
- அன்பினுக்கு நிவேதனமாய் (நூல் காணிக்கைகள் பற்றிய குறிப்பு) - பழ.அதியமான்,
- என்றும் கிழியாது என் பாட்டு - குட்டி ரேவதி
- நமது பண்பாட்டில் மருத்துவம் - முனைவர் தொ.பரமசிவம்
- செ குவெரா : மற்றொரு வெற்றி - எஸ்.வி.ராஜதுரை
- நிழல்களில் கரையும் நிஜங்கள் (திரைப்படத்தில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய பார்வை) - ஓவியா
- வாட்சன் : தோட்டத்தொழிலாளர்களின் நண்பன் - டி.கே.ரகுநாதன்
- ஆவிகளும் ஆண்டைகளும் - பாமா
- காணாமற் பொகும் கடற்குதிரைகள் - பொ.ஐங்கரநேசன்
- ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் - ந.முருகேசபாண்டியன்
- மாதவியின் பதினோராடலில் கொடுகொட்டி : கூத்தின் அடித்தளங்களை முன்வைத்து... - முனைவர் த.கனகசபை
- ஜீவாவின் முதல் நூல் வெளியிட்ட கோவை ஆர்.கிசன் - செந்தலை ந.கவுதமன்
- சோசலிசம் வேர்பிடித்துவிடாமல் தடுக்கும் முதலாளித்துவம் (வெனிசுலேவாதேர்தலும் : ஊடகப் பொய்களும்) - அமரந்தா
- குறடு - அழகிய பெரியவன்
- சிலப்பதிகாரத்தில் அறிவுத்திற மேம்பாடு - பேரா க.பஞ்சாங்கம்
- மலைத்தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை குறித்த நாட்டார் பாடல்கள் - ஆ.சிவசுப்பிரமணியன்
- பாரதிதாசன்-ஞானபீடப் பரிசு தொடர்பாக ஒரு பதிவு - கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- வள்ளலாரின் மொழிக் கோட்பாடு - ப.சரவணன்
- தாஸ்தாயேவ்ஸ்கியின் "கரமஸோவ் சகோதரர்கள்" - தமிழில் வண்ணநிலவன்
- "ஸீ ஷோனகனின் தலையணைப்புத்தகம்" - தமிழாக்கம் தஞ்சாவூர்க் கவிராயர்
- இருந்துபார் தெரியும் வலி - புதுவை இரத்தினதுரை
- வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் - கி.பாரத்திபராஜா
- 'மொழியில் வாழ்தலும்' 'மொழிச் சலவை'யும் - பொதிகைச் சித்தர்
- மோருக்குச் சோறில்லை - கார்முகில்
- காடு எரிந்துகொண்டிருக்கிறது - இளம்பிறை
- மறுமலர்ச்சி இதழ்களின் முன்னோடி : சீர்திருத்தச் செம்மல் சொ.முருகப்பா - ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி
- ஆழ்கடலில் ஒர் வரலாற்றுத் தேடல் - பேராசிரியர் வி.அ.இளவழகன்
- வரலாற்றின் குரல்களும் குரல்களின் வரலாறும் - முனைவர் செ.சோ.பிலிப்சுதாகர்
- நாட்டுப்புற வழக்காற்றியலில் கன்னியாகுமரி மாவட்டம் - அ.கா.பெருமாள்
- கேரேன் ப்ரெஸ் & அன்டயெ க்ரோக் : இரு தென்னாபிரிக்கப் பெண் கவிஞர்கள் - தமிழில் வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
- தொல்காப்பியத்தில் மணமும் சாதியும் - சி.அறிவுறுவோன்
- எது அறிவியல்? - பா.ஸ்ரீகுமார்
- மனுதர்மமும் தமிழ் அறமும் - ஞானி
- கண்ட்ரோல் - வே.இராமசாமி
- "கற்றல் நன்றே" பண்டைத் தமிழகத்தில் கற்றல் என்பது யாது? - மே.து.ராசு குமார்
- 2007 சில நினைவுகள் - அ.மார்க்ஸ்
- வடமொழி இலக்கியக் கோட்பாடுகள் - பேராசிரியர் வ.ஜெயதேவன் & கி.காவேரி
- ஈழம்-மலேசியா : ஈழத்து இலக்கிய சாட்சியம் - கி.பி.அரவிந்தன்
- கடமை தவறும் ஊடகங்கள் - பைந்தமிழ்
- மாசேதுங் படைப்புகள் - மயிலை பாலு
- மற்றும் சில கவிதைகள்....
248 பக்கங்களுடன் A4 அளவுதாளில் உறுதியான கட்டமைப்புடன் வெளிவந்துள்ள சாளரம் இலக்கிய மலரின் விலை ரூ 125.00 ஆகும்
2008 புத்தகத்திருவிழா - உங்கள் நூலகம்
New Century Book House வாசகர் சங்கத்தின் இதழாக வெளிவரும் 'உங்கள் நூலகம்' சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது.
சிறப்பு இதழின் ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புத்தொழில் தொடர்பில் பல ஆக்கபூர்வமான விடயங்களை பேசுகிறது. வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நன்மைகருதி தமிழக அரசிற்கும் பப்பாசி அமைப்பிற்கும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகவும், கட்டுரையாளராகவும் கலந்துகொள்ளும் முனைவர் இராம.சுந்தரம் அவர்களின் 'மொழியில் எதையும் சொல்ல முடியும்' என்ற தலைப்பில் அமைந்த நேர்காணலுடன் தமிழின் சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் கட்டுரைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.
எஸ்.வி.ராஜதுரை, சுகுமாரன், இன்குலாப், மு.ராமசாமி, தொ.பரமசிவன், பாவண்ணன், பெ.மணியரசன், ச.சுபாஷ், சந்திரபோஸ், தேவ.பேரின்பன், இராசேந்திரசோழன், ஜெயமோகன், பெருமாள் முருகன், தேவதேவன், அ.கா.பெருமாள்,
அ.ராமசாமி, பொ.வேல்சாமி, அ.மங்கை, வீ.அரசு, க.மோகனரங்கன், ச.பாலமுருகன், பா.வீரமணி, இரா.காமராசு, பா.ஆனந்தகுமார், கமலாலயன், உதயை மு.வீரையன், சுதந்திர முத்து, மணிகோ பன்னீர்செல்வம், கோபால்தாசன்,
தமிழ்மகன் ஆகியோரின் கட்டுரைகள், ஆக்கங்கள் இச்சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளன.
120 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பிதழின் விலை In Rs 20.00
2008 புத்தகத்திருவிழா - புதிய புத்தகம் பேசுது
சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது புதிய புத்தகம் பேசுது.
இச்சிறப்பு மலரில் தமிழ் கலை, பண்பாடு மற்றும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒன்பது பேருடைய நேர்காணல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இந்நேர்காணல்கள் சமூகம் சார்ந்து இயங்கும் இவர்களின் முழு ஆளுமையையும், இயங்கு தளத்தையும் வாசகர்களுக்கு விரிவாக எடுத்து வைக்கின்றன.
1. டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி - இரா.நடராசன் & அ.வெண்ணிலா
2. பத்ம ஸ்ரீ கமலஹாசன் - அ.வெண்ணிலா
3. சங்கரய்யா - ரமேஷ் பாபு
4. பிரபஞ்சன் - முருகேச பாண்டியன்
5. ஆ.இரா.வெங்கடாசலபதி - ச.தமிழ்ச்செல்வன்
6. பேராசிரியர் நா.தர்மராஜன் - சே.கோச்சடை & அமரந்தா
7. உஷா சுப்பிரமணியம் - அ.வெண்ணிலா
8. பெருமாள் முருகன் - கோவை வாணன்
9. டிராஸ்கி மருது - ராகுல சங்கமி
2007 இல் வெளியான 50 சிறந்த புத்தகங்களுக்கு மதிப்புரைகளையும் வழங்கியுள்ளார்கள்.
118 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பு மலரின் விலை : ரூ 60.00 ஆகும்.
2008 புத்தகத்திருவிழா - எதிர்
அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டமே கவனம் குவித்து அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சச்சார் குழுவின் ஆய்வு முறை, முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 140
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு
2.காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு
இந்து மதத்திற்கென அடிப்படையான சாத்திர நூல் எதுவும் இல்லை. இந்து மத மரபு என்பதற்காக பகுத்தறிவிற்கு பொருந்தாத எதையும் ஏற்க இயலாது. சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிடமுடியும் எனக் கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது.
இந்து சனாதனத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியில் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார் அ.மார்க்ஸ்.
காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்தியபொழுது, அதற்கு எதிராக தமிழ்ச்சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்தி எழுதிய 'தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)' இங்கே முழுமையான மீள்வெளியீடு செய்யப்படுகிறது.
எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 160
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு
2008 புத்தகத்திருவிழா - யாழினி முனுசாமி
சிற்றிதழ், குறும்படம், கவிதை என இயங்கிக்கொண்டிருக்கும் யாழினி முனுசாமி, இந்நூலில் பல்வேறு தலித் கவிஞர்களின் தலித் கவிதைகள் குறித்தும், முனைவர் கோ.கேசவன் மற்றும் அ.மார்க்ஸ் போன்றோரது தலித்திய சிந்தனைகள் குறித்தும், எழுத்தாளர் சிவகாமியின் 'பழையன கழிதலும்...' நாவல் குறித்தும், கே.ஏ.குணசேகரனின் 'வடு' குறித்தும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து 'தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : இருவாட்சி
2.தேவதையல்ல பெண்கள்
நஙீன கவிஞர்களில் தனித்துவமான குறிப்பிடத்தக்க கவிஞர் யாழினி முனுசாமி. வாழ்வின் முரண்பாடுகள் போதாமைகள் சார்ந்து துக்கம் இக்கவிதைகளில் ததும்பி நிற்கின்றது.
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 72
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : உயிர்மை
The Jaffna Public Library Rises From Its Ashes
தன்னைச் சுற்றியுள்ள சமூக மக்களின் வாசிப்புத்தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன், க. மு.செல்லப்பா என்ற சமூக அக்கறையுள்ள ஒரு தனிமனிதன் 1933 இல் ஆரம்பித்த முயற்சிகளை முதல் அடியாகக் கொண்டு எழுப்பப்பட்டது யாழ்ப்பாண பொது நூலகம்.
ஆயிரத்திற்கும் குறைவான அரிய புத்தகங்களுடனும் முப்பது இதழ்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நூலகம், 1953 இல் மக்களின் தேவைகளுக்கேற்ப, புதிய வடிவமும் அதிக வசதிகளும் பெறவேண்டிய அவசியம் எழுந்தது. புதிய இடத்தில் புதியபொலிவுடன் நூலகம் அமைப்பது என்று நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் கிடைத்தன. அமெரிக்க தூதுவர் அலுவலகம் அதிக அளவில் தனது பங்களிப்பாக 104,000.00 ரூபாவையும், இந்திய தூதுவர் அலுவலகம் 10,000.00 ரூபாவையும் தர யாழ் வணிகர்களும் மக்களும் நன்கொடைகள் கொடுத்து நிதி சேகரிக்கப்பட்டது.
நூலகத் தந்தை S.R.ரங்கநாதனின் ஆலோசனையுடனும், சென்னை அரசின் திராவிட கட்டக் கலை நிபுணர் V.M.நரசிம்மனின் வடிவமைப்புடன் உலகத்தரத்தில் யாழ்பாண பொதுநூலகம் 1959 இல் கட்டியெழுப்பப்பட்டது. யாழ்பாண மக்களிடம் இருந்த அரிய ஓலைச்சுவடிகள், நூல்கள் பலவும் சேகரிக்கப்பட்டு நூலகத்தில் சேர்க்கப்பட்டது.
யாழ்ப்பணத் தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக, அறிவுக்களஞ்சியமாக யாழ்ப்பாண பொது நூலகம் கருதப்பட்டது. பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றது.
இவ்வாறு பெயர் பெற்ற நூலகம் 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவில், சிங்கள காடையர்களினால் தீயிடப்பட்டு சாம்பலானது. 97ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தனர். தமிழர்களின் அடையாளச்சின்னம் சாம்பலானது.
உலக மக்களும் நூலகங்களும் இதனை ஒரு படுகொலையாகவே கணித்தன, காட்டுமிராண்டித்தனமான செயலிற்கு கண்டனங்கள் தெரிவித்தன.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் சிரத்தையுடன் பணியாற்றிய கட்டிடக்கலை நிபுணர் துரைராஜா ( V.S.Thurairajah ) அவர்கள் யாழ்பாண நூலகத்தின் பதிவுகளாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை தொகுத்துள்ளார். பல அரிய படங்களும், வரைபடங்களும் தகவல்களும் அடங்கிய "The Jaffna Public Library Rises From Its Ashes" என்று பெயரிடப்பட்ட இப்புத்தகத்தின் சர்வதேச வெளியீட்டு நிகழ்ச்சி 2008.01.19 அன்று அவுஸ்ரேலியா சிட்ணி நகரில் நடைபெறவுள்ளது.
"The Jaffna Public Library Rises From Its Ashes" புத்தகத்தினை சென்னையில் உள்ள மித்ர வெளியீடு நிறுவனத்தினர் பதிப்பித்துள்ளனர். பல அரிய படங்களும், வரைபடங்களும் தகவல்களும் அடங்கிய இப்புத்தகம் கெட்டி அட்டையில் தரமான தயாரிப்பில் வந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் 243 இலக்க கடையில் உள்ள தற்பொழுது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
The Internatinal launch :
Strathfield Town Hall, 65, Homebush Road, Strathfield
Order your book, Please contact :
Dr.Pon Anura - 0438103307
V.S.Thurairajah - 97449599
2008 புத்தகத்திருவிழா - அகநி
பெண்வெளியில் புதிய அலையென எழும் பெண் எழுத்தின் பதிவாக சமூகம், கலை, இலக்கியம், பெண்ணியம் என சிந்தனைத்தளத்தில் மீள்சிந்தனைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கட்டுரைகள்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : அகநி வெளியீடு
2008 புத்தகத்திருவிழா - 'தை'
2006 ஆம் ஆண்டு தை மாதத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கவிஞர் அறிவுமதி அறிமுகப்படுத்திய கவிதைகளுக்கான "தை" இதழின் மூன்றாவது வெளியீடு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளிவந்துள்ளது. கண்காட்சியில் அன்னம் - அகரம் (கடை எண் :157-158) பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
கவிதைகள்
- அ.அருள்மொழி
- அப்துல் கதீம்
- அப்துல் ரகுமான்
- அமுதினி
- அழகுநிலா
- அன்பன் சிவா
- ஆகாசம்பட்டு சேஷாசலம்
- ஆசிப் மீரான்
- ஆதவன் தீட்சண்யா
- இசாக்
- இந்திரன்
- இரா.ஆனந்தி
- இரா.தனிக்கொடி
- இளம்பிறை
- இளையபாரதி
- ஈரோடு தமிழன்பன்
- எழில்பாரதி
- எஸ்.ஏ.ராஜ்குமார்
- கண்மணி குணசேகரன்
- கமலாதாஸ் (தமிழில் சமீரா)
- கரிகாலன்
- கல்யாண்ஜி
- கலாப்பிரியா
- கலைஞர்
- கவிமதி
- கவின்
- கி.சரவணகுமார்
- கோசின்ரா
- கோபு
- சசி
- சிற்பி
- சிறீ.நான்.மணிகண்டன்
- சுபவீ
- செல்வகுமாரி
- செழியன்
- சேர பட்டணம் அ.மணி
- சோ.பத்மநாதன்
- சோதியா
- தணிகைச் செல்வன்
- தமிழச்சி
- தமிழ்த் தம்பி
- தாமரைதேவதச்சன்
- தேவேந்திரபூபதி
- நண்பன்
- நந்தலாலா
- நா.முத்துக்குமார்
- நீலமணி
- நெல்லை ஜெயந்தா
- பழ.புகழேந்தி
- பழனிபாரதி
- பிரேம் ரமேஷ்
- ம.மதிவண்ணன்
- மாலதி மைத்ரி
- மு.சத்யா
- முனி.சிவசங்கரன்
- யாழ்மதி
- யூமா.வாசுகி
- ரவி சுப்பிரமணியம்
- ரா.பார்த்திபன்
- ரோகிணி
- லாவண்யா பாரதி
- லிங்குசாமி
- வ.ஐ.ச.ஜெயபாலன்
- வே.இராமசாமி
- ஜெ.பிரான்சிஸ் கிருபா
- ஜெஸிலா ரியாஸ்
கட்டுரைகள்
- கோபயாஷி இஷா ; கனவு காணும் பட்டாம்பூச்சி - எஸ்.ராமகிருஷ்ணன்
- கோஃபி அவூனோர் ; குறிப்பும் மொழிபெயர்ப்பும் - பிரம்மராஜன்
- புதுவை இரத்தினதுரையின் பூவரசம்வேலியும் புலூனிக்குஞ்சுகளும் கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி சில குறிப்புகள் - யதீந்திரா
- வாழ்வேன் என் எழுத்தில் ; கவிஞர் சு.வில்வரத்தினம் - வீ.அரசு
தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2006
பரிந்துரைக்கப்படவில்லை. தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு ரூ 10,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 2000.00வும் பரிசாக திருவள்ளுவர் தினத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.
இவற்றில் ஒரே எழுத்தாளர் ம.லெனின் அவர்களுடைய இரண்டு புத்தகங்கள் சிறந்த பரிசினைப் பெற்றுள்ளன, கே.ஆர்.நரசய்யா தொடர்ந்து மூன்றாவது ஆண்டு சிறந்த புத்தகத்திற்கான பரிசினைப் பெற்றுள்ளார். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் பதிப்பித்த நான்கு புத்தகங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.
1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை
புத்தகம் : புத்த மகா காவியம்
எழுத்தாளர் : வலம்புரி சோமநாதன்
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை
புத்தகம் : உதய நகரிலிருந்து
எழுத்தாளர் : இரா.மீனாட்சி
பதிப்பகம் : கபிலன் பதிப்பகம்
3.புத்தகப் பிரிவு : புதினம்
புத்தகம் : நீர்வலை
எழுத்தாளர் : எஸ்.ஷங்கரநாராயணன்
பதிப்பகம் : அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்
4.புத்தகப் பிரிவு : சிறுகதை
புத்தகம் : வெண்ணிலை
எழுத்தாளர் : க.வேணுகோபால்
பதிப்பகம் : யுனைடெட் ரைட்டர்ஸ்
5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )
புத்தகம் : அரவான்
எழுத்தாளர் : எஸ்.இராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
புத்தகம் : மணக்கும் பூக்கள்
எழுத்தாளர் : கவிஞர் செல்லகணபதி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
7.புத்தகப் பிரிவு : திறனாய்வு
புத்தகம் : சிலம்பொலியார் அணிந்துரைகள்
எழுத்தாளர் : சிலம்பொலி செல்லப்பன்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
புத்தகம் : படகு : ஒரு திராவிட மொழி
எழுத்தாளர் : டாக்டர் இரா.கு.ஆல்துரை
பதிப்பகம் : நெலிகோலு பதிப்பகம்
9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
புத்தகம் : முறிந்த மனங்கள்
எழுத்தாளர் : டாக்டர் டி.ஆர்.சுரேஸ்
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)
வரப்பெற்ற நூல்கள் விதிமுறையின்படி இல்லாததால் பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை
11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
புத்தகம் : சைவத் தொகையகராதி
எழுத்தாளர் : முனைவர் சிவ.திருச்சிற்றம்பலம்
பதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம்
12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்
புத்தகம் : சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்
எழுத்தாளர் : சாந்தகுமாரி சிவகடாட்சம்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
புத்தகம் : கவியரசு கண்ணதாசன்
எழுத்தாளர் : வணங்காமுடி
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
புத்தகம் : மதராசப்பட்டினம்
எழுத்தாளர் : கே.ஆர்.நரசய்யா
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
15.புத்தகப் பிரிவு : கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல்
புத்தகம் : ஒலி நூறு
எழுத்தாளர் : முனைவர் தி.சே.சுப்பராமன்
பதிப்பகம் : மீனாட்சி மொழியகம்
16.புத்தகப் பிரிவு : பொறியியல், தொழில்நுட்பம்
புத்தகம் : நிலநீர் அறிவியல் (பாகம் 1 & 2)
எழுத்தாளர் : கே.ஆர். திருவேங்கடசாமி
பதிப்பகம் : நியூ செஞ்சிரி புக் ஹவுஸ்
17.புத்தகப் பிரிவு : மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல்
புத்தகம் : தமிழரின் அடையாளங்கள்
எழுத்தாளர் : முனைவர் க.நெடுஞ்செழியன்
பதிப்பகம் : பாலம்
18.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்
புத்தகம் : தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006
எழுத்தாளர்கள் : ஆர்.சண்முகராஜன்,
ஜி.சுந்தரராஜன்,
வி.கோவிந்தராஜன்,
வி.கண்மணி
பதிப்பகம் : ரவிசுப்பிரமணியம் பப்ளிகேஷன்ஸ்
19.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
புத்தகம் : நிறுவன அமைப்பில் வளர்ச்சி
எழுத்தாளர்கள் : வே.குருமூர்த்தி,
ஷீலா ஈஸ்வரமூர்த்தி
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
20.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்
புத்தகம் : காக்க காக்க இதயம் காக்க
எழுத்தாளர் : டாக்டர் கே.பாலசந்தர்
பதிப்பகம் : கவிநயா பதிப்பகம்
21.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
புத்தகம் : புற்றுநோயும் சித்த மருத்துவமும்
எழுத்தாளர் : டாக்டர் டி.சதீஷ்குமார்
பதிப்பகம் : தாமரை நூலகம்
22.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்
புத்தகம் : மார்க்சியம் பெரியாரியம்
எழுத்தாளர் : ஞானி
பதிப்பகம் : காவ்யா பதிப்பகம்
23.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்
புத்தகம் : கல்வியியல் மதிப்பீடு புள்ளியியல் ஆராய்ச்சி
எழுத்தாளர் : டாக்டர் க.ராஜாம்பாள் ராஜகோபால்
பதிப்பகம் : சாந்தா பப்ளிஷர்ஸ்
24.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்
புத்தகம் : சுயதொழில் முனைவோருக்கான வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பங்கள்
எழுத்தாளர்கள் : ஜோ.ஜான்.குணசேகர்,
மு.ரா.லதா,
சு.சுந்தரலிங்கம்,
சி.சிவகுமார்,
எம்.மாரிமுத்து,
வை.பிரபாகரன்,
இரா.சுதா,
க.முத்துக்கிருஷண்ன,
க.கவிதா,
குரு அரங்கநாதன்
பதிப்பகம் : நியூ செஞ்சிரி புக் ஹவுஸ்
25.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்
புத்தகம் : நிகழ் காலத்திற்கு முன்பு
எழுத்தாளர் : சா.கந்தசாமி
பதிப்பகம் : நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை
26.புத்தகப் பிரிவு : கணிணியியல்
புத்தகம் : ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்
எழுத்தாளர் : ம.லெனின்
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
27.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
புத்தகம் : தமிழர் வழிபாட்டு மரபுகள்
எழுத்தாளர் : முனைவர் ஆறு.இராமநாதன்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
28.புத்தகப் பிரிவு : வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம்
வரப்பெற்ற நூல்கள் விதிமுறையின்படி இல்லாததால் பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை
29.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு
புத்தகம் : எல்லாம் தரும் இதழியல்
எழுத்தாளர் : ம.லெனின்
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
30.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்
புத்தகம் : பரவசமூட்டும் பறவைகள்
எழுத்தாளர் : வாண்டு மாமா
பதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம்
31.புத்தகப் பிரிவு : விளையாட்டு
புத்தகம் : சாதனை படைத்த நட்சத்திர வீரர்கள்
எழுத்தாளர் : டி.வி.சுப்பு
பதிப்பகம் : ஸ்ரீ லஷ்மி பப்ளிகேஷன்ஸ்.
2008 புத்தகத்திருவிழா - நேர்நிரை
பன்னெடுங்கால பாரம்பரியமுள்ள தமிழ் யாவற்றையும் தன்னுள் ஜீரணித்துக் கொள்வதற்கு ஏதுவான சக்தியைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு படைப்பாளனின் பதிவுகளையும் சேமித்து சேமித்து தானியக் கிடங்குபோல தமிழ் தன்னையொரு இலக்கியக் கிடங்காக்கிக் கொண்டுள்ளது. திரையிசைப் பாடலாசிரியராக சிறந்த கவிஞராக தன்னை முன்நிறுத்தும் யுகபாரதி உரைநடைத் தமிழுக்கும் உழைத்திருக்கிறார் எனக் காட்டும் தொகுப்பு இது. இலக்கியபீடம் மாத இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் நுனிப்புல் மேய்ந்தவையல்ல. விஷயங்களை வேராகவும் வேரடி மண்ணாகவும் அலசிப்பார்த்த ஆதாரம்.
- வசந்தா பரமசிவம்
எழுத்தாளர் : யுகபாரதி
பக்கம் :
விலை :
பதிப்பகம் : நேர்நிரை வெளியீடு
2.ஒரு மரத்துக் கள்
கவிதையின் சாத்தியாமான அத்தனை வடிவங்களிலும் எழுதிப் பார்க்கும் கவிஞரின் அறுசீர் விருத்தப் பாக்கள்.
அழகியலும் ஓசை நயமும் ஒருங்கே அமைந்த இந்நூல், உண்மையில் மரபுக் கவிதைகளின் மீட்டுருவாக்கம் போல அமைந்துள்ளது.
நவீன கவிஞர்கள் மரபுப் பயிற்சி அற்றவர்கள் என்பதை பொய்யாக்குவதைப்போல் வெளிவரும் இக்கவிதைகள் தேர்ந்த புலமையின் தெளிவான சாட்சி. புதுமையும் மரபும் கைகோர்த்து நடந்துவரும் ஆறுகால் மண்டபம்.
எழுத்தாளர் : யுகபாரதி
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : நேர்நிரை வெளியீடு
2008 புத்தகத்திருவிழா - KK Books
"தென்திசை"
அரசியல், சமூகம், வரலாறு... நூல்வரிசைகள் தென்திசையில் கிடைக்கும். தமிழக அரசியலின் மறைக்கப்பட்ட பகுதிகள் தொடர்புத்தகங்களாக வெளிவர உள்ளன.
'தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற தொகுப்பு நூல் வரலாற்று நோக்கத்தையும் தாண்டி அரசியல் உள்நோக்குடன் வெளிக் கொணரப்படுவதாக சொல்கிறார் அதன் ஆசிரியர், விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள் புரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ப.திருமா வேலன்.
1.இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? (தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 1)
1930களின் தொடக்கத்தில் சமதர்ம கொள்கைகளை பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பீதியை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சியை இந்திய மண்ணில் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பமாக இதை அரசாங்கம் கணித்தது. அதற்கு முட்டுக்கட்டை போடவும் முடக்கவும் நினைத்து. இதன்படி குடியரசு தலையங்கத்தை சட்டவிரோதமானதாக அறிவித்து பெரியாரையும், கண்ணம்மாவையும் கைது செய்தது. வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கும் அளவுக்கு எழுதிய தலையங்கத்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சப்பையான காரணம் காட்டுகிறார்களே என்று பெரியார் கிண்டலடித்த காலமே இந்நூல்.
எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 144
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
2.காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும். (தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 2)
இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச் சட்டை போடாத ஈ.வெ.ராமசாமியாக சில பத்திரிகைகளால் முத்திரை குத்தப்பட்டவர். இதையே காரணம் காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ் பிரமுகர்களாலேயே அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதை விமர்சித்து திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கம் அரசாங்கத்தால் ஜாமீன் கேட்கப்பட்டது. நீதிமன்றத்தின் படியேறிய அண்ணா, தனது எழுத்தில் வகுப்புவாதம் இல்லை எனத் தீர்ப்பு பெற்ற காலத்தை விவரிக்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 144
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
3.காந்தியார் சாந்தியடைய (தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 3)
காந்தி ஒழிக்கப்பட்ட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதிவந்தவர் பெரியார். ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே "இருந்தது ஆரிய காந்தி; இறந்தது நம் காந்தியார்" என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக, ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்பு வாதத்தை தூண்டக்கூடியதாக தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.
எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 176
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
4.சூரிய நடனம்(விளிம்புநிலைப் பிரதிகள்)
எழுத்தாளர் : சா.தேவதாஸ்
பக்கம் : 192
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
5.உலக சினிமா வரலாறு
மௌனயுகம் : டிசம்பர் 1895 முதல் அக்டோபர் 1927 வரையிலான காலப்பகுதியில் உலக சினிமாவைப்பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் நூல்.
சினிமாவைப் பற்றிப் பல நூல்களை தமிழுக்குத் தந்திருக்கும் அஜயனின் இன்னும் ஒரு முக்கியமான நூல்தான் உங்கள் கையிலிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள, மிகமிகப் பிரயோஜனமான அற்புதமான புத்தகம்.
- பாலு மகேந்திரா -
எழுத்தாளர் : அஜயன் பாலா
பக்கம் : 176
விலை : 150.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
6.சந்திப்பு
அரசியல் அரங்கம் விசித்திரங்களின் வேதாள உலகம். அங்கே சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்ய நிருபர்கள்தான் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த உலகின் இரும்புக் கதவை அன்பின் சாவியால் திறந்து புதிர்களையெல்லாம் பூங்கொத்தாக வாங்கி வந்தவர் மைபா. வாடாத முகம், வீழாத குணம் அவர் வழக்கம். அத்தனை தலைவர்களும் மைபா பேனாவுக்கு பழக்கம்.
எழுத்தாளர் : மைபா (மை.பா.நாராயணன்)
பக்கம் : 128
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
7.பறவையியல் அறிஞர் சாலிம் அலி
சில இளம் இயற்கை விரும்பிகளாலும், முதிர்ந்த இயற்கை நேயர்களாலும் மட்டுமே உணரப்பட்ட சாலிம் அலியை,பொதுப்பரப்பிற்கு விரிவுபடுத்தும் நோக்குடன், அவரைப்போலவே காணுயிர்களோடு ஓருயிராக வாழ்ந்துவரும் ச.முகமது அலி செய்துள்ள அறிமுகம் - தமிழ்ச்சூழலில் இயற்கையியலை வளர்த்தெடுக்கும்.
எழுத்தாளர் : ச.முகமது அலி
பக்கம் : 80
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
8.அரவானிகள் சமூக வரைவியல்
பொதுவெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப்பிறந்து உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வை உணர்ந்து பெண்ணாகிப் போன அரவானிகளை அடையாளப்படுத்துகிறார் பிரியா பாபு.
எழுத்தாளர் : பிரியா பாபு
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
"படையல்"
ஆன்மீகம், ஓவியம், கலைகள் தொடர்பான புத்தகங்கள் "படையல்" மூலம் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆளுமைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
9.இஸ்லாமிய ஃபக்கீர்கள்
தெருக்களில் மக்களிடத்து இரவல் கேட்டு வாங்கி உண்ணுகின்ற இரவலர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களுள் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்கள் சற்று வேறுபட்ட, தம் சமயம் சார்ந்த நீதிக் கருத்துக்களை மக்களுக்கு நினைவூட்டும் பொருட்டு தெருக்களில் பாடிச் சென்று இரப்பவர்களாக இருக்கிறார்கள். தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை, செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு, எடுத்துச் செல்வதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ஃபக்கீர் பாடல்கள் அமையும். அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ரஹ்மத்துல்லாவின் உழைப்பு நீக்குகிறது.
எழுத்தாளர் : வ.ரஹ்மத்துல்லா
பக்கம் : 144
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : படையல் - KK Books Pvt Ltd
"காதை"
தமிழக எழுத்துச் சூழலை ரம்யமானதாக்கும் படைப்பாளிகளின் புதிய படைப்புகள் "காதை"யில் கிடைக்கும். பெண் எழுத்துக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.
10.ஒளிரும் நீரூற்று
படைப்பாக்கத்தின் ஒரு ஆகச்சிறிய கணத்தில் அனுபவம் தன்னைத் தானே புனைந்துகொள்ளும் கவிதையில். கவிதையின் ஒரு வரியாய், ஒரு பொறியாய், அல்லது முழுக்கவிதையாய், கனவுக்குச் சட்டகங்கள் ( Frame of Reference) இல்லாததுபோல் கவிதையும் சட்டக வரையறைக்கு உட்படாதது. அது ஒரு கணத்திலிருந்து மூன்று காலங்களுக்கும், ஒரு தளத்திலிருந்து வெளியின் எந்தத் திக்குக்கும் பயணிக்கும், அழைத்துச் செல்லும். அப்படி அழைத்துப் போகின்ற கவிதைகளாக தாரா கணேசனின் கவிதைகள் அமைந்துள்ளன.
-கலாப்ரியா
எழுத்தாளர் : தாரா கணேசன்
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
11.ஆதிராவின் அம்மாவை நான் தான் ஏன் காதலித்தேனோ?
எங்கு இழந்தோமோ அல்லது எங்கு அவமானப்படுத்தப்பட்டோமோ அங்கிருந்தே துவங்கும் கவிதைகள் காலபைரவனுடையது. தொன்மையான உறவின் வழியாக ஏற்படும் சங்கடங்களையும் துக்கங்களையும் நேரடியாக அர்த்தப்படுத்த முடியாத தொனியில் எழுதப்பட்டிருப்பவை. பொதுப்பார்வைக்கு தனிமையின் குரலாகக் கூடியதும், நுட்பமான வழியில் நாம் எளிமைப்படுத்தவோ மறுக்கவோ முடியாத ஒரு கலைஞனின் பதிவாக காலபைரவனின் கவிதைகள் இருப்பது அவருடைய படைப்பின் உச்ச நிலையாகக் கருதமுடிகிறது.
-கண்டராதித்தன்
எழுத்தாளர் : காலபைரவன்
பக்கம் : 64
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
12.ஒரு அமர கதை - ஸ்ரீகுமார் .... நான் அறிந்தவரை நிகழ்கால வாழ்க்கையை தாந்த்ரீக மரபுடன் தொடர்புபடுத்தி இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் தாந்த்ரீக நாவல் என்று ஸ்ரீகுமாரின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்.
-மலையாள முன்னுரையில் ராமச்சந்திரன்
தமிழில் : குளச்சல் யூசுப்
பக்கம் : 256
விலை : 140.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
13.கருவறை - எம்.சுகுமாரன்
கருவறை, இறுதிச் சடங்கு ஆகிய இரண்டு குறுநாவல்களிலும் கேரள கம்யூனிஸ்ட் கட்சி குறித்து எம்.சுகுமாரன், சில கனத்த விமர்சனங்களை எழுப்புகிறார். இவர் கம்யூனிசத்திற்கு எதிரி அல்ல. அதற்கு எதிரான கட்சிகளின் அனுதாபியோ, ஆதரவாளரோ அல்ல. கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு கண்மூடித்தனமான விமர்சனங்களை முன்வைக்கவும் இல்லை. இதை முழுக்க முழுக்க கற்பனை என்றோ, முழுக்க யதார்த்த வாழ்வியல் மற்றும் நடைமுறை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கற்பனையும் யதார்த்தமும் பிரித்தறிய முடியாத விதத்தில் ஒன்றிக் கலந்திருப்பதாலேயே இந்தக் குறுநாவல்கள் தனித்தன்மை பெறுகிறது.
தமிழில் : சிவன்
பக்கம் : 160
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
14.இருள்வ மௌத்திகம்
எழுத்தாளர் : கோணங்கி
பக்கம் : 383
விலை : 212.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
15.கனவைப் போலொரு மரணம்
உறவுகளின் இடைவெளியில் நழுவியோடும் புரிதலின்மையை கடக்கும் முயற்சியாய் மனிதர்கள் மீது துளிர்ந்துகொண்டேயிருக்கும் அன்பில் செழிக்கின்றன் அ.வெண்ணிலாவின் கவிதைகள். முரண்களையும், சிக்கல்களையும் தீரா அன்பில் உயிர்ப்பித்துவிட முடியும் என இடைவிடாமல் வலியோடு சொல்லிக்கொண்டேயிருக்கின்றன இவரது கவிதைகள்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் :
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
16.ஆலமர இடையழகு
எழுத்தாளர் : எழில்வரதன்
பக்கம் :
விலை :
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
17.என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்
பனிக்குடம் உடைவதைப்போல உணர்ச்சிகளின் கருவறைக்குள்ளிருந்து ஈரமாய் குதிக்கின்றன கலைஇலக்கியாவின் கவிதைகள். ரசமிழக்காத காதலின் நிலைக்கண்ணாடியில் கண்ணீரும் புன்னகையுமாய் மாறிமாறி முகம் காட்டுகின்றன சொற்கள். யதார்த்தமும் கவிதையும் ஆடும் கண்ணாமூச்சியில் காலம் குளிர்கின்றது.
எழுத்தாளர் : கலை இலக்கியா
பக்கம் :96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd
18.பாலியல்
சாருநிவேதிதா - நளினி ஜமீலா ஆகிய இருவரும் உரையாடியவை நூல் வடிவில்.
உடலுறவு மட்டும் செக்ஸா?
மீசை இருப்பவனெல்லாம் ஆணா?
பெண்ணுக்கு ஸ்கலிதம் உண்டா?
பாலியல் தொழிலை ஒழிக்கக்கூடாதா?
பிம்ப்புகள் செய்வது சமூக சேவையா?
கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்.
எழுத்து வடிவம் : டி.அருள்எழிலன்
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
19.அரசியல்
நல்லகண்ணு - அ.மார்க்ஸ் ஆகிய இருவரும் அரசியல் தளத்தில் ஆக்கபூர்வமான விடயங்களில் உரையாடியதை நூல்
வடிவில் பதிவு செய்துள்ளார் திருமா வேலன்.
கட்சி தேவையா?
தமிழ்த் தேசியம் ஆபத்தானதா?
ஈழத்தில் நடப்பது மதப்பிரச்சனையா?
அணு ஆற்றல் இல்லாமல் இருக்க முடியாதா?
கட்சித் தலைமை மையப்படுத்துவதே வீழ்ச்சியா?
பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்டுக்கள் எதிரியா?
கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்
எழுத்து வடிவம் : ப.திருமா வேலன்
பக்கம் : 88
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd
2008 புத்தகத்திருவிழா - பொன்னி
கேள்வி கேட்பதன் மூலம் எந்தவிதப் புனிதத்தையும் விட்டு வைக்காதவர் இங்கர்சால். கடவுள்களையும் கோயில்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.
முதல் மடை திறந்த வெள்ளம்போல் இங்கர்சால் கருத்துக்களைத் தமிழில் ஒரு வேகத்தோடு தருகிறார் ஊடுருவி.
எழுத்தாளர் : ஊடுருவி
பக்கம் : 160
விலை : In Rs 70.00
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
2.அறியாமை உண்மை - இங்கர்சால்
இரத்தக்கறை படிந்த மதபீடங்களை அறியாமை, உண்மை கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்துகிறார் இங்கர்சால்.
இங்கர்சாலே தமிழில் எழுதினால் எப்படி விறுவிறுப்போடு இருக்குமோ அப்படியொரு இனிய நடையில் மொழிபெயர்த்துள்ளார் ஊடுருவி
எழுத்தாளர் : ஊடுருவி
பக்கம் : 152
விலை : In Rs 65.00
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
3.புரட்சிக்காரர் வால்டையர் - இங்கர்சால்
மதகுருக்களும், மாமன்னர்களும் மனித குலத்தைக் கூறுபோட்டு ஏழை எளிய மக்களைப் பழிவாங்கி இரத்தம் தோய நடந்த சம்பவங்களை எதிர்த்துப் போராடினார் வால்டையர்.
உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்ட்டார்களோ அங்கெல்லாம் மனிதாபிமான உதவிக்கரத்தையும், சட்ட உதவியையும் செய்தவர் புரட்சிக்காரர் வால்டையர். மதப்பொய்யையும், மன்னவர்களின் பித்தலாட்டத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்த வால்டையரின் வரலாற்றை பகுத்தறிவின் ஆற்றல்மிக்கப் போராளி இங்கர்சால் எழுதியுள்ளார். தமிழில் தருபவர் ஊடுருவி.
எழுத்தாளர் : ஊடுருவி
பக்கம் : 80
விலை : In Rs 35.00
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
4.வீழ்வோமென்று நினைத்தாயோ
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர் போராட்ட நினைவுகளை வரலாற்று அனுபவங்களோடு உரசிப் பார்த்து நேர்மையான பார்வையையும் பாதையையும் முன்வைக்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : புவிக்கோ
பக்கம் : 136
விலை : In Rs 65.00
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
5.நீ எழுத மறுக்கும் எனதழகு
இளம்பிறை பலவிதங்களில் முக்கியமானவர். கிராமத்தின் அணுக்களில் ஆன வெள்ளந்தி மனது எதிர்கொள்ளும் வஞ்சம், போட்டி, பொறாமை, ஏழ்மை, ஏமாற்று என்று எல்லாமே தணிக்கை செய்யப்படாமல் மிகவும் நேர்மையாக கவிதையாகின்றன அவர் உழைப்பில்.... கவிஞர் இளம்பிறை தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான கவிஞர். இன்னும் அவர் ஏராளம் படைக்க வேண்டும். படைப்பார்.
-கவிஞர் கந்தர்வன்-
எழுத்தாளர் : இளம்பிறை
பக்கம் : 272
விலை : In Rs 140.00
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
6.சிறை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் விடுதலை பெற்றிந்தியாவில் சிறைத்தண்டனை அனுபவித்தவர். வெள்ளையர் சிறையைப் பற்றிய நேருவின் விமர்சனம் இந்நூலில் இடம் பெற்றுள்ளதோடு விடுதலை பெற்ற இந்தியச் சிறைகளில் நிலவும் ஒடுக்குமுறை பற்றிய தோழர் நல்லகண்ணுவின் விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.
எழுத்தாளர் : இரா.நல்லகண்ணு
பக்கம் :
விலை :
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
7.தமிழில் இலக்கிய விமர்சனம்
எழுத்தாளர் : சி.சு.செல்லப்பா
பக்கம் :
விலை :
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
* * * * * * * * * *
8.வீரசுதந்திரம் வேண்டி நின்றார்
தலைவர் வ.உ.சி பற்றிய நினைவுக் கட்டுரைகள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மனிதர் (சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளை) இருவருக்கும் விதித்துள்ள தண்டனையைச் சிறிதும் ஆதரிக்க இயலாது. அடுத்த மெயிலில் அத்தீர்ப்பு என் பார்வைக்கு வரும். அத்தண்டனைகள் நிலைக்கா. கொடுமையான இக்காரியங்களை எக்காரணம் கொண்டும் நான் ஆதரிக்க முடியாது. இந்தப் பிழைகளையும் முட்டாள்தனங்களையும் நீங்கள் உடனே கவனிக்கவேண்டும். ஒழுங்கை நாம் நிலைநாட்டவேண்டியதுதான், ஆனால் கொடுமை மிதமிஞ்சிவிடின், ஒழுங்கென்பது நிலைக்குமா? மற்றும் வெடிகுண்டுக்கு அதுவே மார்க்கமார்க்கமாகும்.
-இந்திய மந்திரி லார்டு மார்லி. ராஜப்பிரதிநிதி லார்ட் மின்டோவுக்கு எழுதிய கடிதம்.
எழுத்தாளர் : இந்திராதேவி
பக்கம் : 136
விலை : In Rs 65.00
பதிப்பகம் : பொன்னி வெளியீடு