விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

புதிய புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'மஹாகவி'யின் ''பொருள் நூறு''

2009-03-25 by விருபா - Viruba | 0 கருத்துகள்
மஹாகவி - து.உருத்திரமூர்த்தி ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.



பாயிரம்
1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.

கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.

தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.
அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.சிற்பி பாலசுப்பிரமணியம்

மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.

வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.

படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.

தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.

தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.

சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.

இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.

எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.

நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.

இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.

கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.

சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்

சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...
‘‘ ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள்
வாழி அவளுக்கென் வாழ்த்து
’’
என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி

அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,
‘‘ பார்த்ததே பார்த்த பாங்கில்
பாவை கல்லாகி விட்டாள்
’’
எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,

சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.

‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.

‘‘ அன்று பிறந்து
இன்று இறப்பதுள்
ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்
அப்பனே மகனாகி
வளர்ந்து
உயிர் ஓய்தல் அற்று
உயர்வு ஒன்றினை
நாடலே உண்மை....
’’
என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.

கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும்.

மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.

மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.

‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்

மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;

‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’

நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.
‘‘ வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு
’’
இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.

எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.
‘‘ சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...
வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.
’’
உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.

புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.

அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ
எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு
கவிதை:

‘‘ அம்பு வில் நம் மூதாதையர் கருவி
ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
போயினான்.
எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
வீரவான் விழுந்தனன்.... விலாவில்
ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே
’’

காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.

கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.

கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.

‘‘ அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே
ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே
அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
இருபுறம் கூர் எடுத் தின்னா
புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே.
’’

அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்
சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.

இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.

‘‘ அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க
உறையின் நீங்கி உலகு வலம் வந்து
சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்
செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்
கைகளில்
தேவீ, கலையின் தெய்வமே நீ இக்
காவியம் முடிகிற வரை எம்
சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே.
’’
ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.

ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.

‘‘ மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்
ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
ஈற்றிலே இரண்டொரு நாவல்
தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே
’’

கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.

‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.

அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்:

‘‘ வழியெலாம் கற்கள் வைத்தார் தமது
சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
பெரிய
பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி
வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
கோயிலிலும் கல் குடியிருத் தினரே
’’
இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.

மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.
‘‘ எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்
சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்
அதிலே,
ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்
பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்
எச்சிறிது எப்பெரிதினுக்கும்
ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.
’’
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.

மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.

அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல
மஹாகவியும் பேசுவார்:
‘‘ இன்னவை தாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்..
’’

தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.
சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.
‘‘ இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்
’’
அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.

ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.
‘‘ ‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்
நன்று, நன்று!
என்று தன்
காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்
சென்றவன் மீண்டனன். சிரித்தான்
இன்று போனவன் நேற்று வந்தனனே
’’

மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.

நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,
பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.

மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.

இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.

ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். - சிற்பி பாலசுப்பிரமணியம்

முன்னீடு

ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.

இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.

அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.

நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!

குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.

'வரலாற்றில் வாழ்தல்’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’

அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.

என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.

குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.

கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.

நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.

அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.

கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.

பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.

இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - எஸ்.பொ


128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது.
இதன் விலை ரூ 100.00

து.உருத்திரமூர்த்தி, புதிய புத்தகம், பொருள் நூறு, மஹாகவி

மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்

2009-03-14 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.

காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.

தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.

அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\

2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்

பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை

'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்

25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...

பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.

“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.

“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது

பாரதி கேட்டார்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”

இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.


“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?

3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி

அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....

தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....

.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.

இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...

இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு..

வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091

அறிமுகம், புதிய புத்தகம்

2009 சென்னைப் புத்தகத்திருவிழா

2008-12-26 by விருபா - Viruba | 1 கருத்துகள்
2009 சென்னைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டுப் பதிப்பகங்கள் பல் வேறு புதிய புத்தகங்களை வெளியிடவுள்ளன.

கடந்த வருடத்தைப் போன்று, வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக சென்னைப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக வழங்கும் நோக்கில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளோம்.

2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்

முடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.

2009 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு

2008-09-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்
நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு

ஜோதிபாசு

புத்தக வெளியீடு

அழைப்பிதழில் இருந்து.....

வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புகழ்பெற்ற தலைவர்களில் இன்றும் நம்மிடையே வாழும் அரசியல் ஞானி (Stateman) ஜோதிபாசு ஒருவர் மட்டுமே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை, அதன்பின்பு காங்கிரஸின் அடக்குமுறையை, வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடி, மேற்குவங்க மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப்ப் பெற்றவர். கம்யூனிஸ்ட இயக்கத்தின் முன்னோடியாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல் வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவர்.

உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று உலக பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக 23 ஆண்டு காலம் செயற்பட்டவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறப்பு மிகு அத்தியாயமாக விளங்கும் அவரது அரசியல் வாழ்க்கை இப்போது உங்கள் முன்னே நூலாக விரிகிறது.

முன்னுரையிலிருந்து.....

சுரண்டலற்ற, வர்க்கபேதம் அற்ற ஒரு சமுதாயத்தை, அதாவது சோஷலிஸத்தை உருவாக்குவது என்ற நோக்குடன் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தோழர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் ஓரளவு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். இந்த சுரண்டலற்ற சமூகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்போவது முதலாளித்துவம் அல்ல ; சோஷலிஸம் மட்டும்தான். எங்களது பல ஆண்டு கால அனுபவமானது நமது தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிகரமாக இருக்குமென் நம்புகிறேன். பின்னாட்களில் மிகவும் செறிவானதொரு அனுபவத்தை நாங்கள் அடைந்தோம். ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் மிகக் குறுகியதாக இருந்தபோதும் கூட, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள் ......
- ஜோதிபாசு

500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ 125.00 இற்கு கிடைக்கும்.

தமிழிற்கு இந்நூலை மொழிபெயர்த்தவர் ; வீ.பா.கணேசன்

தமிழில் : நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு

பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்
421, அண்ணா சாலை,
தேனாம் பேட்டை,
சென்னை 600021

மின் அஞ்சல் ; thamizhbooks@gmail.com

தொலைபேசி ; 044 - 24332424

புதிய புத்தகம்

தோழமையின் புதிய வெளியீடுகள்

2008-07-29 by விருபா - Viruba | 0 கருத்துகள்
ஈரோடு புத்தகத்திருவிழாவிற்காக புதிதாக சில புத்தகங்களை தோழமை வெளியீடு வெளியிட்டுள்ளது.

1.பிரதியிலுருந்து மேடைக்கு....
பிரதியிலுருந்து மேடைக்கு....
இக்கட்டுரைகளில் நம்முடைய மரபுக் கலைகளின் அழிவு குறித்தும், காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று நாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியல் உணர்வுகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் குறித்தும், அதன் மூலம் சாத்தியப்படும் விரிவான உறவு நிலைகள் கி.பார்த்திபராஜா மேற்கொள்ளும் அவதானிப்புகள் ஒரு நம்பிக்கையூட்டும் எதிர்கால நாடகச் சூழலுக்கான அடித்தளமாக உள்ளன.
- வெளி ரங்கராஜன்
எழுத்தாளர் : கி.பார்த்திபராஜா
பக்கங்கள் : 112
விலை : 60.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

2.சூரனைத் தேடும் ஊர்
சூரனைத் தேடும் ஊர்
தீர்ந்துபோன நிழல். தொலைந்து கொண்டிருக்கும் கிராமம். வரமும் சாபமாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் உறவு. பன்முகங்கொண்ட பகையின் ஊற்று. நீக்கமறப் படிந்து கிடக்கும் சாதி... இடையிடையே வாழ்வின் சாறாய் வார்த்தைகள்.எளிய வாழ்வின் குறைவில்லா ஆற்றாமை. கனவுகள் சுமக்கும் கண்கள். இருத்தலைத் துயரறச் செய்வதற்கான எத்தனிப்புக்கள். உறவின் பிணைப்புகளைத் தகர்த்து, சுமைகளைத் துறந்து சிறகென உருமாறிட முனையும் மனத்தின் பறத்தல். காவுகொள்ளப்பெற்ற சூழலின் வனப்பை
மீண்டும் யாசிக்கும் ஆதிமனம் என்று இப்படைப்பின் விரல்கள் தொட்டுக் காட்டும் வெளி தீராத விசாலங்கொண்டது.
- கவிதா
எழுத்தாளர் : ஜனகப்ரியா
பக்கங்கள் : 144
விலை : 90.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

3.அக்கினி மூலை
அக்கினி மூலை
'குற்றம்' என்ற முதல் கதை 1971 இல் வெளியானது. அன்று தொடங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைபட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. இதுவரை எழுதப்பெற்ற கதைகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து வகைமாதிரிகளான படைப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. ஆதலால் இங்கு இடம்பெற்றதை விடவும் சிறப்பான வேறு கதைகள் இருந்தாலும் அவை சேர்க்கப்படவில்லை. நவீன யுகத்தில் நமது கிராமிய வாழ்வின் சோதனைகள், வீழ்ச்சிகள்,
நகரமயமாதலில் ஏற்பட்ட இன்னல்கள், நுகர்வுப் பண்டமாகவே இன்னும் நீடிக்கின்ற பெண்களின் நிலை போன்றவற்றைப் பேசுகின்ற வகைமாதிரிகளே இவை.
- களந்தை பீர்முகமது
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பக்கங்கள் : 184
விலை : 100.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

4.தலைநிமிர்ந்த தமிழச்சிகள்
தலைநிமிர்ந்த தமிழச்சிகள்
சமூகத்திற்காகவும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை மற்றும் கலை வடிவத்திற்காகவும் மகத்தான சாதனை புரிந்து சரித்திரமாகியுள்ளனர் ஆயிரமாயிரம் பெண்கள். ஆணாதிக்கத்தின் கைகளால் எழுதப்பெற்ற வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களில் அவ்வையார் தொடங்கி கடந்த நூற்றாண்டு வரையிலான சில சாதனைப் பெண்களின் சிறிய பதிவே இந்நூல்.

பத்திரிகையாளராக இருந்தாலும் அவ்வப்போது அவ்வப்போது சிறந்த எழுத்தாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் தோழர் பைம்பொழில் மீரானின் மற்றுமொரு அடையாளம்.
எழுத்தாளர் : பைம்பொழில் மீரான்
பக்கங்கள் : 288
விலை : 175.00 In Rs
பதிப்பு : திருத்திய முதற் பதிப்பு

5.அலசல்
அலசல்
சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மைப் பறவைகளாக்கிவிடுகின்றன. ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராக வெற்றி கண்டிருக்கிறார். தற்காலத் தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார். போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆளம் கண்டு எழுதியிருக்கிறார். ஒற்றை முத்தெடுக்க முக்கடலும் மூழ்க கொண்ட சேவியரின் இந்த நூல் ஒரு கட்டுரைத் தொகுப்புத்தான். ஆனால் அதனுள்ளே சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.

இவை கற்பனையின் விளைச்சல் அல்ல; கருத்துக்கள். எது குறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும். இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.
- சுந்தரபுத்தன்
எழுத்தாளர் : சேவியர்
பக்கங்கள் : 128
விலை : 70.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

6.இந்தச் சக்கரங்கள்
இந்தச் சக்கரங்கள்
கிருஷ்ணவேணியும் வந்து ஒரு வீடு பார்த்தாள், கொஞ்சம் ஊருக்கு ஒதுக்கமாக இருந்த ஒரு வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. அது ஓடு வேய்ந்த கொஞ்சம் பழைய வீடுதானென்றாலும் அதுதான் தன் அபிலாஷைகளுக்குச் சாதகமான இடம் என்று நினைத்தாள். காரணம், அந்த வீட்டிற்கு முன்னும் பின்னுமாக இருந்த காலியிடம். தூண்டில்காரனுக்கு மிதப்பில் கண், தன் ஜாதகப்படியும் மகன் ஜாதகப்படியும் இந்நேரம் ஓகோவென்று இருக்கவேண்டிய தன் வாழ்வைத் தடுத்து நிறுத்திவிட்ட ஏதோ ஒரு தரித்திர ஜாதகத்தை விட்டு விலகி வந்திருக்கிற நிலையில், இப்போதாவது அதற்கு வழி வகுக்கின்ற ஓர் இடமாகப் பார்க்க வேண்டுமல்லவா? இப்படி நிறைய இடம் இருந்தால், இரண்டு மாட்டைப் பிடித்து கொல்லையில் கட்டலாம்,
நாலு மூட்டை மிளகாய் வாங்கி வாசலில் காயப் போடலாம்; அள்ளலாம், வீடு ஒரு மாதிரிப் பழசாக இருந்தால் என்ன? கொஞ்ச நாளில் இதையே வாங்கிப் புதுப்பித்துக்கொண்டால் போகிறது...
- நாவலிலிருந்து....
எழுத்தாளர் : ஜெயந்தன்
பக்கங்கள் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

7.தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
புகழேந்தியின் நூல் அவரோடு நாமும் தமிழீழமெங்கும் பயணம் செய்கிற உணர்வைத் தருகிறது. அவர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தும்போதே அங்கங்கே வரலாறு பதித்துச் சென்ற வடுக்களையும் அறியத் தருகிறார்.

இந்தியப் படை ஆயினும் சிங்களப் படை ஆயினும், மக்களை வதைத்ததும் அழித்ததும் வரலாற்றின் ஒருபக்கம்தான். கொடுமைகளை எதிர்த்து அம்மக்களின் வீரப்புதல்வரும் புதல்வியரும் உறுதியாகக் களமாடியதும் தெளிவான வெற்றிகளைப் பெற்றதும் மறுபக்கம் ஆகும். புகழ் தனது நூலில் இரு பக்கங்களையுமே நமக்குக் காணத் தருகிறார்.
- தியாகு
எழுத்தாளர் : ஓவியர் புகழேந்தி
பக்கங்கள் : 384
விலை : 150.00 In Rs
பதிப்பு : மூன்றாம் பதிப்பு

8.பெரியார் சிந்தனைகள்
பெரியார் சிந்தனைகள்
தமிழ்ச் சமூகத்திற்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற சிந்தனையும் கருத்துக்களும் பகுத்தறிவுப் பாதையும் இன்றும் நாளையும் தமிழர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் குறைவான பக்கங்களில் வெளிவரும் இந்நூல், வாசிப்பதற்கு எளிதானது.

மிக நுட்பமாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட கருத்துத் தொகுப்பு.
தொகுப்பாளர் : சுந்தரபுத்தன்
பக்கங்கள் : 64
விலை : 35.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

9.மக்கள் தலைவர் காமராசர்
மக்கள் தலைவர் காமராசர்
இன்னும்கூட அரசியலில் காமராசரின் பெயர் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் காற்றிலே பறந்துவிட்டது. இப்போது வெளிநாட்டு சொகுசு கார்களில் மிதந்தபடி அரசியல் தலைவர்கள் காமராசர் ஆட்சி பற்றி பேசிவருகிறார்கள். காமராசர் ஆட்சி என்பது வெறும் வார்த்தையல்ல. அதுவொரு தனித்துவமான அரசியல் தத்துவம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் தொடர்புடையதாக இருந்தது அது. ஒப்பற்ற முதல்வராக காமராசர் எப்படி ஆட்சி புரிந்தார் என்பது பற்றிய தகவல்கள் இளம் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எளிமையான வாழ்வின் மூலம் அரசியல் வாழ்வில் ஓர் அரிய இலக்கணத்தை உருவாக்கிய காமராசர் கிங்மேக்கராகவும் உயர்ந்தவர். வந்தப் பச்சைத் தமிழர் அப்படி என்னதான் செய்தார்? என்ற கேள்விக்கும்,அவருக்கும் கூட ஏன் நெருக்கடிகள் நேர்ந்தன என்பதற்கும் சிறு விடையாக இந்நூல்.
தொகுப்பாளர் : சுந்தரபுத்தன்
பக்கங்கள் : 192
விலை : 110.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு

புதிய புத்தகம்

"நான் ஏன் எழுதுகிறேன்?" & "கண்ணியம்"

2008-03-28 by விருபா - Viruba | 0 கருத்துகள்
கண்ணியம்
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இலட்சியங்கள், எண்ணங்கள், கொள்கைகள் என பரந்துபட்ட பார்வை இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் எழுதுகிறார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் எழுத வைத்து, எழுத்தாளர்களின் எண்ணக் கருத்துக்களைத் தொடர்ந்து பல இதழ்களில் பதிவு செய்து வருகிறார் "கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன். 1990 முதல் இன்று வரையில் இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நான் ஏன் எழுதுகிறேன்?
இவ்வாறு "கண்ணியம்" இதழில் பதிவு செய்யப்பட்டவற்றை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற புத்தக வடிவில் முதலில் வெளியிட உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தவர் பேராசிரியர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன். மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளராக - ஒரு பதிப்பாளராக தான் செய்யாத அரிய பணியை செய்கின்ற "கண்ணியம்" குலோத்துங்கனை வெகுவாகப் பாராட்டிய ச.மெய்யப்பனின் வாழ்த்துக்களுடன் "நான் ஏன் எழுதுகிறேன்?" இதுவரையில் 13 தொகுதிகள் வெளிவந்துள்ளது. இதனை மணிவாசகர் பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறது.

"கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்களினது எழுத்துக்கான காரணத்தையும் "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் வெளியிட ஆர்வாமாக உள்ளார்.

சிற்றிதழ், புத்தகம், புதிய புத்தகம்

அகிலனின் "தனிமையின் நிழல் குடை"

2008-03-01 by விருபா - Viruba | 2 கருத்துகள்
தனிமையின் நிழல் குடை
தமிழ் வலைப்பதிவாளர்களின் இணைய எழுத்துக்கள் அச்சு வாகனமேறி புத்தக வடிவில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் - த.அகிலன். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, குறும்பட, ஆவணப்பட ஆர்வலரான அகிலன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது சென்னையில்.

"கனவுகளின் தொலைவு" என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வரும் இவரின் முதலாவது கவிதை நூல் நேர்நிரை மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

"எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது" என்று கவித்துவம் பேசும் அகிலன் தனது நூலிற்கு "தனிமையின் நிழல் குடை" என பெயரிட்டுள்ளார்.

"நம்மைக் கடந்த நிலையில் வலிய காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பெருஞ்சுழலாக அது நம்மை அதற்குள் இழுத்துப் போட்டு விடுகின்றது. அகிலன் இதெல்லாவற்றையும் சரியாகவே அடையாளப்படுத்துகிறார். அவருடைய உலகம் கசப்புகளாலும் நிராகரிப்புகளாலும் ஆனவை. கனிவும் கருணையும் அன்பும் நிரம்பிய இதயத்தை நிராகரிக்கும் காலம் விரிந்திருப்பதை அகிலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கவிதைகள் கொந்தளிப்பாகவே இருக்கின்றன. அகிலனின் மொழிதல் எளிமையும் தீவிரமும் கூடியது" என்று இவருடைய புத்தகத்திற்கான அறிமுகத்தை தந்திருப்பவர் கருணாகரன்.

அகிலன்.த, புதிய புத்தகம்

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

2008-02-02 by விருபா - Viruba | 0 கருத்துகள்
காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "காந்திஜியின் இறுதி 200 நாட்கள்" என்ற நூலின் அறிமுக விழா, காந்திஜியின் அறுபதாவது நினைவு நாளான 2008.01.30 அன்று மாலை சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திரு. ஞாலன் சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, திரு.ஆர்.முத்துசுந்தரம் தலைமையேற்க திரு.ஆர். ரவிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நூலை அறிமுகம் செய்த பேரா. அ.மார்க்ஸ் தமது உரையில் "எங்களைப் போன்றவர்களின் காந்தியைப் பற்றிய வாசிப்பு என்பது காந்திஜியின் மரணத்திற்குப் பின் தான் துவங்குகிறது. இந்து மதத்தின் உயர்வுகளைப் பேசிக்கொண்டிருந்த காந்தி, இந்துமத அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்பட்டார். இது ஏன்? என்ற கேள்விக்குறியோடுதான் நாம் காந்தியை அணுகினோம். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தை மிக மோசமாக விமர்சித்து இருந்தாலும், அவர்கள் இந்து மத அடிப்படைவாதிகளால் கொல்லப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தால் ஒடுக்ப்பட்ட மக்களிடையே, அவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்டனர், காந்தியோ மக்களை ஒடுக்கியவர்களிடம் பேசினார்.

மேலும் தெய்வத்தின் குரல் எழுதிய சங்கராச்சாரியார் காந்திக்கு எதிராக சிறு பிரசுரம் எழுதி வெளியிட்டுள்ளார். காந்திக்கு 'இந்து மதத்தில் தீண்டாமை இல்லை, அது பிற்காலத்தில் வந்தது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது, இந்து மதத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்று நம்பினார்."

அடுத்து நூலை அறிமுகம் செய்த டெல்லி IIT யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.சுவாமிநாதன் தமது உரையில் "இந்த கட்டுரை நான் டெல்லியில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்து பத்திரிகையில் வெளியானது. அங்கு இந்து சில இடங்களில்தான் கிடைக்கும், எழுத்தாளர் ப்ரேம்சந்தின் பேரனும் நானும் தொடர்ந்து படித்து விவாதம் செய்வோம். கட்டுரையின் கனத்தை வைத்து இக்கட்டுரைக்காக இதன் ஆசிரியர் இராமமூர்த்தி அதிக அளவில் ஆய்வுகளை, தேடல்களை செய்துள்ளமை உணரக்கூடியதாக இருந்தது. இந்த காந்திஜியின் இறுதி 200 நாட்கள் என்பது காந்தியின் வாழ்வில் முக்கியமானதோ இல்லையோ தெரியாது ஆனால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. மிக முக்கியமான ஆவணம்" என்றார். இந்துவில் வெளியான இக்கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெட்டி ஒட்டி வைத்திருந்த ஒரு தொகுப்பை காண்பித்தார்.

இந்து பத்திரிகையில் காந்திஜியின் இறுதி 200 நாட்கள் தொடர் கட்டுரையை எழுதிய வி.ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற இந்திய அரசு ஆட்சிப் பணியாளர் (I.A.S), வானொலியில் cricket போட்டிகளை வர்ணணை செய்தவர். கராச்சியில் பிறந்த இவர், பிரிவினையின் போது தனது பன்னிரண்டாவது வயதில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இங்கு வந்தவர். அவர் தனது சிறப்புரையில் "காந்தியின் தேவை இன்றைக்கும் இருக்கிறது. காந்திஜியின் வாழ்க்கை முழுவதும் பல வித சோதனைகளும், சுவாரஸ்யங்களும், குறும்புகளும், ராஜ தந்திரங்களும் நிரம்பியவை, அவருடைய வாழ்க்கை மிகவும் துல்லியமாக ஆவணமாக்கப்பட்டுள்ள ஒன்று. இன்றைக்கும் உலகம் முழுமைக்கும் காந்திஜியின் தேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நூல் நல்ல மொழிபெயர்புடன், நல்ல தயாரிப்புடன் வெளிவந்திருக்கிறது" என்றர்.

வரவேற்புரை வழங்கிய ரவிராஜன் பாரதி புத்தகாலயத்தின் பதிப்புச் சேவையை விதந்து பாராட்டினார். தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகின்ற இக்காலத்தில் தேசபிதா பற்றிய ஒரு தக்க ஆவணத்தை தமிழில், அதுவும் 900 பங்களில் தருவது என்பது மிகப் பெரிய பணி என்பதை குறிப்பிட்டார்.

1997,1998 காலப்பகுதியில் இந்து நாளிதழில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். 1947 ஜூலை 15 முதல் 1948 ஜனவரி 30ம் நாள் வரையிலான 200 நாட்கள் தேசபிதா காந்திஜி மத நல்லிணக்கத்திற்காக போராடிய நாட்களாகும். இந்து முஸ்லிம் மத வெறியர்களுக்கு எதிராக தன் உயிரைப் பணயம் வைத்த நாட்கள் இவை. எந்த அளவிற்குத் துயரமும் வலியும் நிரம்பியவையாக காந்திஜியின் இந்த 200 நாட்களும் இருந்தன என்ற விரிவாகவும் தெளிவாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல்.

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
தமிழாக்கம் : கி.இலக்குவன்
விலை : ரூ 350.00
பக்கம் : 900

காந்திஜி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்

2008-01-17 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.இந்திய வரலாறு
இந்திய வரலாறு
இந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது. இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது.

அடிமை முறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன.

இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை... ஆகியவற்றை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது இந்நூல்.

எழுத்தாளர் : இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில் : பி.ஆர்.பரமேஸ்வரன்
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

2.குழந்தைகளை கொண்டாடுவோம்
குழந்தைகளை கொண்டாடுவோம்
இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும்.

எழுத்தாளர் : ஷ.அனமஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
பக்கம் : 158
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

3.கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்
தன் பிறப்பு தனக்குரிய சமூக வாழ்க்கை இவற்றைக் கடந்து தனக்காக தன் சொந்த முயற்சியால் இன்னொரு உலகதைதைப் படைத்துக் கொள்ள விரும்பிய ஒரு பழங்குடி இளைஞனின் கதை. புதுப்பிறப்பெடுக்க விரும்பிய அவனது முயற்சியை சமகால சமூகம் முறியடித்த கதை.

எழுத்தாளர் : மகாசுவேதா தேவி
தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி
பக்கம் : 176
விலை : 90.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

4.கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி
கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி
மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச் சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரம்ப கல்விக்கு கொடுக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் முதல்தலைமுறையினராக இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்விமுறை கல்வியின் உள்ளடக்கம் மற்றும் பயிற்று முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காணக்கூடிய மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.

எழுத்தாளர் : வசீலி சுகம்லீன்ஸ்கி
தமிழில் : முனைவர் அ.வள்ளிநாயகம் & வ.அம்பிகா
பக்கம் : 144
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

5.புதிய உலகம்
புதிய உலகம்
இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.

எழுத்தாளர் : முத்து மீனாட்சி
பக்கம் : 88
விலை : 35.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

6.மலர்ந்து மலராத
மலர்ந்து மலராத
விடலைப் பருவத்தினருக்கான வழிகாட்டி.

பழமையான கலாச்சாரத்தில் ஊறியவர்கள் இப்புத்தகத்தை அவ்வளவாக வரவேற்காமலிருக்கக் கூடும். அவர்களது எண்ணங்களை மதித்து நாம் அவர்களுக்கு கூற விரும்புவது."இப்புத்தகம் அறிவியல் ரீதியானதே. இதில் கொடுக்கப்ட்டுள்ள உண்மைகள் யாவும் இயற்கை நிகழ்வுகள் பற்றியனவே. இந்த உண்மைகளைப் பற்றி விடலைப் பருவத்தினர் ஆரோக்கியமான முறையில் அறிவது நல்லதல்லவா?, அதுமட்டுமன்று பல பாலியல் பற்றிய விவரங்களை, திரித்தும் கவர்ச்சியூட்டும் வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதத்தில் சிறு புத்தகங்களாக வெளியிட்டு பல்வேறு சமூக விரோதிகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது நடைமுறையில் இருக்கும் வருந்தத்தக்க ஒன்றாகும்."

மேற்கூறிய காரணங்களால் அறிவியல் பூர்வமாக இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து வெளியிட்டுள்ளோம்.

ஆக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழுவினர்
பக்கம் : 80
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - குமரன் புத்தக இல்லம்

2008-01-16 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.கைலாசபதி முன்னுரைகள்
கைலாசபதி முன்னுரைகள்
கலாநிதி க.கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. இவை 1967 ஆம் ஆண்டுமுதல் 1981 ஆம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வுநூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை. இலக்கிய ஆர்வலர்களால் நீண்டகாலம் நினைவிற்கொண்டு போற்றப்படும் சிறந்த முன்னிரைகளை அவ்வப்போது கைலாசபதி எழுதி வழங்கினார். நாவல் என்ற இலக்கிய வகையின் இயல்புகள் பற்றியும், யதார்த்தவாதம் பற்றியும் கோட்பாடு முறையிலான ஆய்வுகள் வெளிவராத காலத்தில் "செவ்வானம்" (1967) போன்ற நாவல்களுக்கு அவர் வழங்கிய முன்னுரைகள் அவரிற்கு தமிழ் இலக்கிய உலகில் நிலையான ஓர் இடத்தை தேடிக்கொடுத்தன. இந்நூலில் இடம்பெறும் முன்னுரைகளிற் சில அவரது நெருங்கிய நண்பர்களதும், மாணாக்கர்களினதும் நூலிற்கு அவர் எழுதி வழங்கியவை.பெரும்பாலானவை இலக்கியப்பிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்ற பெருவட்டத்தைச் சேர்ந்த பலரின் ஆக்கங்களிற்கு அந்நூல்களை ஆக்கியோரது வேண்டுகோளின்படி எழுதி வழங்கப்பட்டவை. குறித்த இலக்கியவகையின் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் முறையிலும் சமூக வரலாற்றுப் பின்னணியில் குறித்த ஆக்கத்தை மதிப்பிடும் வகையிலும் இம்முன்னுரைகள் அமைந்துள்ளன.

எழுத்தாளர் : க.கைலாசபதி
பக்கம் : 202
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்

2.தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா (பாடவிமர்சனவியல் நோக்கு)
தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா
தமிழ்நூற் பதிப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவரான உ.வே.சாமிநாதையவர்களை மையப்படுத்தி அவரது பணிகளையும், அவர் காலத்திலே முக்கிய இடம் பெற்றிருந்த சி.வை.தாமோதரம்பிள்ளை பற்றியும் இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஆறுமுகநாவலரின் பதிப்புப் பணி பற்றியும் இச்சிறு நூல் எடுத்துரைக்க முயல்கிறது. அத்துடன் தமிழ்நூற்பதிப்புப் பணியினை இவர்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் இவர்களுக்குப் பின் தமிழ்நூற் பதிப்புப் பணியிற் பேரிடம் பெறவேண்டிய வையாபுரிப் பிள்ளையின் பதிப்புப் பணிகளையும் இது குறிப்பிட்டுச் செல்கிறது. "Testual Critisim" எனும் பதத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பு 'பாடவிமர்சனவியல்' என்பதே என நிறுவி அத்துறையின் வரையறைக்குள் நின்றுகொண்டு மேற்கூறிய அறிஞர்கள் பற்றிய சிற்றாய்வினை இந்நூல் மேற்கொள்கிறது.

எழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பக்கம் : 58
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்

3.தொல்காப்பியமும் கவிதையும்
தொல்காப்பியமும் கவிதையும்
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதைப்பற்றி (பா) கூறுவனவும் அவை தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளன என்பது பற்றியும் விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகளை இந்நூலிலே காணலாம். தமிழிற் கவிதை வளர்ச்சிப்பற்றிய தொடக்க நிலைச் சிந்தனைகளை இந்நூல் ஆராய்கின்றது.

எழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பக்கம் : 58
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்

4.ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்
தமிழ் நாடகத்துறையிலே ஏறத்தாழ ஐம்பது வருடங்களாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தலைசிறந்த வானொலி நடிகர், மேடை நடிகர், நாடக நெறியாளர், தயாரிப்பாளர், நாடகப் பதிப்பாளர், நாட்டுக்கூத்தின் மீட்சிக்காக பேராசிரியர் வித்தியானந்தனுடன் சேர்ந்து உழைத்தவர். நாடகத்தை தனது மேற்படிப்புக்கான கற்கையாகத் தெரிவு செய்து கற்றவர். நாடகத்தை பல்கலைக்கழக உள்வாரி மாணவருக்கும் பாடசாலைக்கும் உரிய கற்கை நெறியாக ஆக்கி அவற்றுக்கான பாடத்திட்டத்தை தயாரித்தவர். அந்தவகையிலே ஈழத்து அரங்கத்துடனும் அரங்க வரலாற்றுடனும் இணைந்துகொண்டவர். இன்றைக்கு இலங்கையிலே நாடகத்தைப் பற்றிப் பேசுகின்ற எழுதுகின்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவரோடு ஆசிரிய - மாணவத் தொடர்பு அல்லது நட்புத் தொடர்பினை உடையவர்களே. அவரோடு முரண்படுபவர்களும் இதில் அடக்கம். இவ்வாறாக நீண்டகாலமாக நாடக அரங்கில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் , ஈழத்திலெழுந்த தொண்ணூறு வீதமான நாடகம் பற்றிய நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். எழுதும்படி வேண்டப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக அவர் எழுதிய முன்னுரைகள் ஈழத்துத் தமிழ் அரங்கின் வளர்ச்சியையிம் அதில் உழைத்தவர்களையும் பற்றிப் பேசுவனவாய் உள்ளன. எனவே ஈழத்து அரங்க வரலாறு பற்றியறிவதற்கு இவை மிகுந்த பயனளிப்பன. நாடகம் என்றால் என்ன? எனத்தொடங்கி, கற்கைநெறியாக 'அரங்கு' என்ற நூலுக்கான முன்னுரைவரை வெளிவந்த இருபது முன்னுரைகளையும் பேராசிரியர் சிவத்தம்பியின் நாடகப்பணிகள், பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகப் பணிகள், மலையக அரங்கு பற்றிய ஒரு சிந்திப்பு ஆகிய கட்டுரைகளையும் தொகுத்து வாசிக்கும்மோது இதனை அறிந்து கொள்ளமுடியும்.

தொகுப்பாசிரியர் : கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
பக்கம் : 180
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - தமிழ்மண்

2008-01-15 by விருபா - Viruba | 1 கருத்துகள்
1.தமிழர் வரலாறு (கி.பி 600 வரை)
தமிழர் வரலாறு (கி.பி 600 வரை)
"தமிழர் வரலாறு" என்னும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய ( History Of The Tamils ) நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளை சுருக்கித் தந்தும், அறிஞர் பி.இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். மூலநூல் ஆங்கிலத்தில் இருப்பதனால், தமிழ் ஆய்வாளர்கள் தாம் ஆய்வு செய்யும் போது, இத்தகைய நூல்களையும் கற்றறிந்து, தக்க சான்றுகளுடன் எழுதாமல் தவிர்த்து விடுகின்றனர்.

இக்குறையைப் போக்கும் வகையில், தக்கார் ஒருவரைக்கொண்டு தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 270
விலை : 185.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்

2.தொன்மைச் செம்மொழி தமிழ்
தொன்மைச் செம்மொழி தமிழ்
தமிழ், முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும் வகையில் அதன் தொன்மையையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கியுள்ள இந்நூல், செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களைத் தாங்கியுள்ளது.

நூலாசிரியர் பி.இராமநாதன் மொழியல், வரலாறு, அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்.

எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்

3.நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்
நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்
நா.மு.வே.நாட்டார் அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களும் 24 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது

எழுத்தாளர் : நா.மு.வேங்கடசாமி நாட்டார்
விலை : 4800.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - NCBH

2008-01-14 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.மீதமிருக்கும் சொற்கள்மீதமிருக்கும் சொற்கள்
1930-2004 வரையிலான 75 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் தேர்த்தெடுத்த கதைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டுள்ள இந்நூல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தமிழின் முதல் வரலாற்று ஆவணமாகும்.

நவீன தமிழ் இலக்கியத்தின் புது ஊற்றாகப் புறப்பட்டிருக்கும் பெண்ணிய படைப்புக்களில் உற்சாகம் பீறிடுகிறது. இளைய தலைமுறையினரின் உத்வேகம் இலக்கிய வெளிக்குப் புதுமுகத்தைத் தருகிறது. இப்புது உத்வேகத்தால் உந்தப்படும் இளைய படைப்பாளிகள் தங்கள் வேர்களைத் தேடிப் பயணிக்கிறார்கள். அப்படியான தீராத் தேடலின் மிகச் சிறிய பதிவே இத்தொகுப்பு.

உரத்து ஒலிக்கும் தமிழ்ப் பெண் கவிதைகளில் அ.வெண்ணிலாவின் குரல் தனித்துவமானது. மனிதத்திற்கான பேரன்பு சுரக்கும் ஈரத்துடன் புனையும் அ.வெண்ணிலா, இத்தொகுப்பின் மூலம் தொகுப்பாசிரியராகி உள்ளார்.

எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் :
விலை :
வெளியீடு : NCBH


2.என் இனிய ஹைக்கூ
என் இனிய ஹைக்கூ
தமிழ் ஹைக்கூ கவிஞர்களில் முக்கியமானவர் மு.முருகேஷ். கால் நூற்றாண்டாக கவிதைத் தளத்தில் இயங்கிவரும் ஆர்வமிக்க கவிப்பயணி."இனிய ஹைக்கூ" கவிதை இதழின் வழி தமிழ் ஹைக்கூவை உலகெங்கும் கொண்டு சென்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் 'நிலா முத்தம்' என்னும் பெயரில் மலையாளத்தில் நூலாக வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் : மு.முருகேஷ்
பக்கம் :
விலை :
வெளியீடு : NCBH



( NCBH நிறுவனம் பல புதிய புத்தகங்களைக் 2008 கண்காட்சிக்காக பதிப்பித்துள்ளது, அவற்றின் தகவல்கள் இன்னமும் எமக்குக் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் இதே பக்கத்தில் சேர்த்துக்கொள்ளபடும்.)

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - எதிர்

2008-01-12 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.சச்சார் குழு அறிக்கைசச்சார் குழு அறிக்கை
அறிமுகம் சுருக்கம் விமர்சனம்

சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டமே கவனம் குவித்து அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சச்சார் குழுவின் ஆய்வு முறை, முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.

எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 140
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு

2.காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு

இந்து மதத்திற்கென அடிப்படையான சாத்திர நூல் எதுவும் இல்லை. இந்து மத மரபு என்பதற்காக பகுத்தறிவிற்கு பொருந்தாத எதையும் ஏற்க இயலாது. சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிடமுடியும் எனக் கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது.

இந்து சனாதனத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியில் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார் அ.மார்க்ஸ்.

காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்தியபொழுது, அதற்கு எதிராக தமிழ்ச்சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்தி எழுதிய 'தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)' இங்கே முழுமையான மீள்வெளியீடு செய்யப்படுகிறது.

எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 160
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - யாழினி முனுசாமி

by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.தலித் இலக்கியமும் அரசியலும்
தலித் இலக்கியமும் அரசியலும்
சிற்றிதழ், குறும்படம், கவிதை என இயங்கிக்கொண்டிருக்கும் யாழினி முனுசாமி, இந்நூலில் பல்வேறு தலித் கவிஞர்களின் தலித் கவிதைகள் குறித்தும், முனைவர் கோ.கேசவன் மற்றும் அ.மார்க்ஸ் போன்றோரது தலித்திய சிந்தனைகள் குறித்தும், எழுத்தாளர் சிவகாமியின் 'பழையன கழிதலும்...' நாவல் குறித்தும், கே.ஏ.குணசேகரனின் 'வடு' குறித்தும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து 'தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : இருவாட்சி

2.தேவதையல்ல பெண்கள்
தேவதையல்ல பெண்கள்
நஙீன கவிஞர்களில் தனித்துவமான குறிப்பிடத்தக்க கவிஞர் யாழினி முனுசாமி. வாழ்வின் முரண்பாடுகள் போதாமைகள் சார்ந்து துக்கம் இக்கவிதைகளில் ததும்பி நிற்கின்றது.

எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 72
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : உயிர்மை

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - அகநி

2008-01-10 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.பெண் எழுதும் காலம்
பெண் எழுதும் காலம்
பெண்வெளியில் புதிய அலையென எழும் பெண் எழுத்தின் பதிவாக சமூகம், கலை, இலக்கியம், பெண்ணியம் என சிந்தனைத்தளத்தில் மீள்சிந்தனைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கட்டுரைகள்.

எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : அகநி வெளியீடு

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - நேர்நிரை

2008-01-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1.வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
பன்னெடுங்கால பாரம்பரியமுள்ள தமிழ் யாவற்றையும் தன்னுள் ஜீரணித்துக் கொள்வதற்கு ஏதுவான சக்தியைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு படைப்பாளனின் பதிவுகளையும் சேமித்து சேமித்து தானியக் கிடங்குபோல தமிழ் தன்னையொரு இலக்கியக் கிடங்காக்கிக் கொண்டுள்ளது. திரையிசைப் பாடலாசிரியராக சிறந்த கவிஞராக தன்னை முன்நிறுத்தும் யுகபாரதி உரைநடைத் தமிழுக்கும் உழைத்திருக்கிறார் எனக் காட்டும் தொகுப்பு இது. இலக்கியபீடம் மாத இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் நுனிப்புல் மேய்ந்தவையல்ல. விஷயங்களை வேராகவும் வேரடி மண்ணாகவும் அலசிப்பார்த்த ஆதாரம்.
- வசந்தா பரமசிவம்

எழுத்தாளர் : யுகபாரதி
பக்கம் :
விலை :
பதிப்பகம் : நேர்நிரை வெளியீடு

2.ஒரு மரத்துக் கள்
ஒரு மரத்துக் கள்
கவிதையின் சாத்தியாமான அத்தனை வடிவங்களிலும் எழுதிப் பார்க்கும் கவிஞரின் அறுசீர் விருத்தப் பாக்கள்.
அழகியலும் ஓசை நயமும் ஒருங்கே அமைந்த இந்நூல், உண்மையில் மரபுக் கவிதைகளின் மீட்டுருவாக்கம் போல அமைந்துள்ளது.
நவீன கவிஞர்கள் மரபுப் பயிற்சி அற்றவர்கள் என்பதை பொய்யாக்குவதைப்போல் வெளிவரும் இக்கவிதைகள் தேர்ந்த புலமையின் தெளிவான சாட்சி. புதுமையும் மரபும் கைகோர்த்து நடந்துவரும் ஆறுகால் மண்டபம்.

எழுத்தாளர் : யுகபாரதி
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : நேர்நிரை வெளியீடு

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - KK Books

by விருபா - Viruba | 0 கருத்துகள்
சென்னையைச் சேர்ந்த KK Books Pvt Ltd, "தென்திசை", "காதை", "படையல்" என்ற உப நிலைகளில் புதிய புத்தகப் பதிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

"தென்திசை"
அரசியல், சமூகம், வரலாறு... நூல்வரிசைகள் தென்திசையில் கிடைக்கும். தமிழக அரசியலின் மறைக்கப்பட்ட பகுதிகள் தொடர்புத்தகங்களாக வெளிவர உள்ளன.


'தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற தொகுப்பு நூல் வரலாற்று நோக்கத்தையும் தாண்டி அரசியல் உள்நோக்குடன் வெளிக் கொணரப்படுவதாக சொல்கிறார் அதன் ஆசிரியர், விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள் புரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ப.திருமா வேலன்.

1.இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?(தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 1)

1930களின் தொடக்கத்தில் சமதர்ம கொள்கைகளை பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பீதியை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சியை இந்திய மண்ணில் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பமாக இதை அரசாங்கம் கணித்தது. அதற்கு முட்டுக்கட்டை போடவும் முடக்கவும் நினைத்து. இதன்படி குடியரசு தலையங்கத்தை சட்டவிரோதமானதாக அறிவித்து பெரியாரையும், கண்ணம்மாவையும் கைது செய்தது. வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கும் அளவுக்கு எழுதிய தலையங்கத்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சப்பையான காரணம் காட்டுகிறார்களே என்று பெரியார் கிண்டலடித்த காலமே இந்நூல்.

எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 144
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

2.காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும். காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்(தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 2)

இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச் சட்டை போடாத ஈ.வெ.ராமசாமியாக சில பத்திரிகைகளால் முத்திரை குத்தப்பட்டவர். இதையே காரணம் காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ் பிரமுகர்களாலேயே அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதை விமர்சித்து திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கம் அரசாங்கத்தால் ஜாமீன் கேட்கப்பட்டது. நீதிமன்றத்தின் படியேறிய அண்ணா, தனது எழுத்தில் வகுப்புவாதம் இல்லை எனத் தீர்ப்பு பெற்ற காலத்தை விவரிக்கிறது இந்நூல்.

எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 144
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

3.காந்தியார் சாந்தியடைய காந்தியார் சாந்தியடைய(தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 3)

காந்தி ஒழிக்கப்பட்ட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதிவந்தவர் பெரியார். ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே "இருந்தது ஆரிய காந்தி; இறந்தது நம் காந்தியார்" என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக, ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்பு வாதத்தை தூண்டக்கூடியதாக தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.

எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 176
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

4.சூரிய நடனம்சூரிய நடனம்(விளிம்புநிலைப் பிரதிகள்)

எழுத்தாளர் : சா.தேவதாஸ்
பக்கம் : 192
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

5.உலக சினிமா வரலாறு உலக சினிமா வரலாறு
மௌனயுகம் : டிசம்பர் 1895 முதல் அக்டோபர் 1927 வரையிலான காலப்பகுதியில் உலக சினிமாவைப்பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் நூல்.

சினிமாவைப் பற்றிப் பல நூல்களை தமிழுக்குத் தந்திருக்கும் அஜயனின் இன்னும் ஒரு முக்கியமான நூல்தான் உங்கள் கையிலிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள, மிகமிகப் பிரயோஜனமான அற்புதமான புத்தகம்.
- பாலு மகேந்திரா -

எழுத்தாளர் : அஜயன் பாலா
பக்கம் : 176
விலை : 150.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

6.சந்திப்பு சந்திப்பு
அரசியல் அரங்கம் விசித்திரங்களின் வேதாள உலகம். அங்கே சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்ய நிருபர்கள்தான் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த உலகின் இரும்புக் கதவை அன்பின் சாவியால் திறந்து புதிர்களையெல்லாம் பூங்கொத்தாக வாங்கி வந்தவர் மைபா. வாடாத முகம், வீழாத குணம் அவர் வழக்கம். அத்தனை தலைவர்களும் மைபா பேனாவுக்கு பழக்கம்.

எழுத்தாளர் : மைபா (மை.பா.நாராயணன்)
பக்கம் : 128
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

7.பறவையியல் அறிஞர் சாலிம் அலி பறவையியல் அறிஞர் சாலிம் அலி
சில இளம் இயற்கை விரும்பிகளாலும், முதிர்ந்த இயற்கை நேயர்களாலும் மட்டுமே உணரப்பட்ட சாலிம் அலியை,பொதுப்பரப்பிற்கு விரிவுபடுத்தும் நோக்குடன், அவரைப்போலவே காணுயிர்களோடு ஓருயிராக வாழ்ந்துவரும் ச.முகமது அலி செய்துள்ள அறிமுகம் - தமிழ்ச்சூழலில் இயற்கையியலை வளர்த்தெடுக்கும்.

எழுத்தாளர் : ச.முகமது அலி
பக்கம் : 80
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

8.அரவானிகள் சமூக வரைவியல் அரவாணிகள் சமூக வரைவியல்
பொதுவெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப்பிறந்து உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வை உணர்ந்து பெண்ணாகிப் போன அரவானிகளை அடையாளப்படுத்துகிறார் பிரியா பாபு.

எழுத்தாளர் : பிரியா பாபு
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

"படையல்"
ஆன்மீகம், ஓவியம், கலைகள் தொடர்பான புத்தகங்கள் "படையல்" மூலம் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆளுமைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.


9.இஸ்லாமிய ஃபக்கீர்கள்இஸலாமிய ஃபக்கீர்கள்
தெருக்களில் மக்களிடத்து இரவல் கேட்டு வாங்கி உண்ணுகின்ற இரவலர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களுள் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்கள் சற்று வேறுபட்ட, தம் சமயம் சார்ந்த நீதிக் கருத்துக்களை மக்களுக்கு நினைவூட்டும் பொருட்டு தெருக்களில் பாடிச் சென்று இரப்பவர்களாக இருக்கிறார்கள். தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை, செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு, எடுத்துச் செல்வதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ஃபக்கீர் பாடல்கள் அமையும். அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ரஹ்மத்துல்லாவின் உழைப்பு நீக்குகிறது.

எழுத்தாளர் : வ.ரஹ்மத்துல்லா
பக்கம் : 144
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : படையல் - KK Books Pvt Ltd

"காதை"
தமிழக எழுத்துச் சூழலை ரம்யமானதாக்கும் படைப்பாளிகளின் புதிய படைப்புகள் "காதை"யில் கிடைக்கும். பெண் எழுத்துக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

10.ஒளிரும் நீரூற்று ஒளிரும் நீரூற்று
படைப்பாக்கத்தின் ஒரு ஆகச்சிறிய கணத்தில் அனுபவம் தன்னைத் தானே புனைந்துகொள்ளும் கவிதையில். கவிதையின் ஒரு வரியாய், ஒரு பொறியாய், அல்லது முழுக்கவிதையாய், கனவுக்குச் சட்டகங்கள் ( Frame of Reference) இல்லாததுபோல் கவிதையும் சட்டக வரையறைக்கு உட்படாதது. அது ஒரு கணத்திலிருந்து மூன்று காலங்களுக்கும், ஒரு தளத்திலிருந்து வெளியின் எந்தத் திக்குக்கும் பயணிக்கும், அழைத்துச் செல்லும். அப்படி அழைத்துப் போகின்ற கவிதைகளாக தாரா கணேசனின் கவிதைகள் அமைந்துள்ளன.
-கலாப்ரியா

எழுத்தாளர் : தாரா கணேசன்
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

11.ஆதிராவின் அம்மாவை நான் தான் ஏன் காதலித்தேனோ? ஆதிராவின் அம்மாவை நான் தான் ஏன் காதலித்தேனோ?
எங்கு இழந்தோமோ அல்லது எங்கு அவமானப்படுத்தப்பட்டோமோ அங்கிருந்தே துவங்கும் கவிதைகள் காலபைரவனுடையது. தொன்மையான உறவின் வழியாக ஏற்படும் சங்கடங்களையும் துக்கங்களையும் நேரடியாக அர்த்தப்படுத்த முடியாத தொனியில் எழுதப்பட்டிருப்பவை. பொதுப்பார்வைக்கு தனிமையின் குரலாகக் கூடியதும், நுட்பமான வழியில் நாம் எளிமைப்படுத்தவோ மறுக்கவோ முடியாத ஒரு கலைஞனின் பதிவாக காலபைரவனின் கவிதைகள் இருப்பது அவருடைய படைப்பின் உச்ச நிலையாகக் கருதமுடிகிறது.
-கண்டராதித்தன்

எழுத்தாளர் : காலபைரவன்
பக்கம் : 64
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

12.ஒரு அமர கதை - ஸ்ரீகுமார் ஒரு அமர கதை.... நான் அறிந்தவரை நிகழ்கால வாழ்க்கையை தாந்த்ரீக மரபுடன் தொடர்புபடுத்தி இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் தாந்த்ரீக நாவல் என்று ஸ்ரீகுமாரின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்.
-மலையாள முன்னுரையில் ராமச்சந்திரன்

தமிழில் : குளச்சல் யூசுப்
பக்கம் : 256
விலை : 140.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

13.கருவறை - எம்.சுகுமாரன் கருவறை
கருவறை, இறுதிச் சடங்கு ஆகிய இரண்டு குறுநாவல்களிலும் கேரள கம்யூனிஸ்ட் கட்சி குறித்து எம்.சுகுமாரன், சில கனத்த விமர்சனங்களை எழுப்புகிறார். இவர் கம்யூனிசத்திற்கு எதிரி அல்ல. அதற்கு எதிரான கட்சிகளின் அனுதாபியோ, ஆதரவாளரோ அல்ல. கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு கண்மூடித்தனமான விமர்சனங்களை முன்வைக்கவும் இல்லை. இதை முழுக்க முழுக்க கற்பனை என்றோ, முழுக்க யதார்த்த வாழ்வியல் மற்றும் நடைமுறை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கற்பனையும் யதார்த்தமும் பிரித்தறிய முடியாத விதத்தில் ஒன்றிக் கலந்திருப்பதாலேயே இந்தக் குறுநாவல்கள் தனித்தன்மை பெறுகிறது.

தமிழில் : சிவன்
பக்கம் : 160
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

14.இருள்வ மௌத்திகம் இருள்வ மௌத்திகம்

எழுத்தாளர் : கோணங்கி
பக்கம் : 383
விலை : 212.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

15.கனவைப் போலொரு மரணம் கனவைப் போலொரு மரணம்
உறவுகளின் இடைவெளியில் நழுவியோடும் புரிதலின்மையை கடக்கும் முயற்சியாய் மனிதர்கள் மீது துளிர்ந்துகொண்டேயிருக்கும் அன்பில் செழிக்கின்றன் அ.வெண்ணிலாவின் கவிதைகள். முரண்களையும், சிக்கல்களையும் தீரா அன்பில் உயிர்ப்பித்துவிட முடியும் என இடைவிடாமல் வலியோடு சொல்லிக்கொண்டேயிருக்கின்றன இவரது கவிதைகள்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் :
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

16.ஆலமர இடையழகு ஆலமர இடையழகு

எழுத்தாளர் : எழில்வரதன்
பக்கம் :
விலை :
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

17.என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்
பனிக்குடம் உடைவதைப்போல உணர்ச்சிகளின் கருவறைக்குள்ளிருந்து ஈரமாய் குதிக்கின்றன கலைஇலக்கியாவின் கவிதைகள். ரசமிழக்காத காதலின் நிலைக்கண்ணாடியில் கண்ணீரும் புன்னகையுமாய் மாறிமாறி முகம் காட்டுகின்றன சொற்கள். யதார்த்தமும் கவிதையும் ஆடும் கண்ணாமூச்சியில் காலம் குளிர்கின்றது.

எழுத்தாளர் : கலை இலக்கியா
பக்கம் :96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

18.பாலியல்
பாலியல்
சாருநிவேதிதா - நளினி ஜமீலா ஆகிய இருவரும் உரையாடியவை நூல் வடிவில்.

உடலுறவு மட்டும் செக்ஸா?
மீசை இருப்பவனெல்லாம் ஆணா?
பெண்ணுக்கு ஸ்கலிதம் உண்டா?
பாலியல் தொழிலை ஒழிக்கக்கூடாதா?
பிம்ப்புகள் செய்வது சமூக சேவையா?

கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்.

எழுத்து வடிவம் : டி.அருள்எழிலன்
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

19.அரசியல்
அரசியல்
நல்லகண்ணு - அ.மார்க்ஸ் ஆகிய இருவரும் அரசியல் தளத்தில் ஆக்கபூர்வமான விடயங்களில் உரையாடியதை நூல்

வடிவில் பதிவு செய்துள்ளார் திருமா வேலன்.

கட்சி தேவையா?
தமிழ்த் தேசியம் ஆபத்தானதா?
ஈழத்தில் நடப்பது மதப்பிரச்சனையா?
அணு ஆற்றல் இல்லாமல் இருக்க முடியாதா?
கட்சித் தலைமை மையப்படுத்துவதே வீழ்ச்சியா?
பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்டுக்கள் எதிரியா?

கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்

எழுத்து வடிவம் : ப.திருமா வேலன்
பக்கம் : 88
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தனிநாயக அடிகளார் (2)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For