விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

பட்டறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மறுப்பு - விருபா தமிழில் முதலாவது தரவு தளம் இல்லை.

2007-12-12 by விருபா - Viruba | 0 கருத்துகள்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் 09.12.2007 அன்று ஒழுங்கு செய்த பட்டறையை சிறப்புற நடாத்திய அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுடைய "தமிழில் இணைய இதழ்கள்" கட்டுரையில் காணப்படும் \\ தமிழில் முதலாவது தரவுதளமாக www.viruba.com உள்ளது.\\ என்ற வாசகத்திற்கான மறுப்பு.

ஒரு திருத்தம்,

பல விடயங்களில் "இணையத் தமிழின் முதல் ......" என்ற அடைமொழிக்காகப் பல்வேறு சர்ச்சைகள் நிலவும் நிலையில், விருபா தளம் முதலாவது தரவு தளம் இல்லை என்பதை நாம் தெளிவுடன் தமிழ் வலைப்பதிவு நண்பர்களுக்கும், நன்னடத்தை வகுப்பாளர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எமக்குத் தெரிந்தவரையில் அமெரிக்காவில் வசிக்கும் உலகப்பன் மாணிக்கம் என்பவருடைய www.Thiraipadam.com என்ற தமிழ்த் திரைப்படங்களுக்கான தரவு தளமானது 1999-05-21 அன்று பதிவு செய்யப்பட்டு,




2001-03-02 அன்று முதல் இயங்கிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

ஆரம்ப நாட்களில் www.thiraipadam.com தளம்

விருபா தளமானது ( www.viruba.com ) 2003-04-16 அன்று முதன் முதலாக பதிவு செய்யப்பட்டு 2005-10-13 அன்று முதல் இயங்குகின்றது.




விருபா தளத்தில் இணைக்கப்பட்ட முதலாவது புத்தகம் "தமிழன் வழிகாட்டி" ஆகும். தளத்தில் இதன் எண் : VB0000001.

ஆரம்ப நாட்களில் www.viruba.com தளம்


எனவே தளத்தின் பெயர் பதிவிலும், இணையத்தில் இணைக்கப்பட்ட நாளிலும் www.Thiraipadam.com தளமே விருபா தளத்தை விட முன்னணியில் உள்ளது.

இணையத் தமிழின் இன்றைய நிலையில் "கட்டற்ற சுதந்திரம்" என்பது உரிய முறையில் பலாரால் உள்வாங்கப்படாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், தமிழைக் கற்று, கற்பித்து, ஆய்வு செய்து, உழைத்து முன்னேறி சமூகத்தில் உயரிய மட்டத்தில் உள்ள 'செல்வாக்கு மிக்க ஓசைகளை' நோக்கி (பேச்சு வழக்கில் சொல்வதானால் Sound Party), வலைப்பதிவில் மிகவும் இலகு வேலையான சத்தங்களை இணைப்பதை மட்டுமே மாபெருந் தகுதியாக நினைத்துக்கொண்டு செயற்படும் 'செல்லா ஓசைகள்' (இங்கேயும் Sound Party தான்), அற்பமான காரணங்களுக்காக அதுவும் வேறொருவன் சிந்தனையில் முதலில் தோன்றியதை ஆர்ப்பாட்டமாக கூச்சலெழுப்புதலை நாம் காண்கின்றோம்.

இவ்வாறான மலின தந்திரக்காரர்கள் வாய்க்கு அவல் கொடுக்காமல் உள்ளதை உள்ளபடி கூறல் நன்றே.


முனைவர் மு.இளங்கோவன் அவர்களுடைய கட்டுரையில் உள்ள விடயம் என்றாலும் தொடர்புடைய நாம் இதனை இன்று மறுக்காமல் இருந்தால், பிற்காலத்தில் சர்ச்சைகள் வரலாம், இதனைத் தவிர்க்கும் முகமாக எமது மறுப்பை வலைப்பதிவில் தனிப்பதிவாக இட்டுள்ளோம்.


திருத்தம், பட்டறை, மறுப்பு

தமிழ்99 - எ-கலப்பை - பட்டறை - கணிச்சுவடி

2007-08-10 by விருபா - Viruba | 7 கருத்துகள்
இணையத்தில் தமிழில் எழுதும் பலருக்கும் சில தவறான புரிதல்கள் உள்ளன. வலைப்பதிவு(Blog) எழுதுகிறேன் என்றால் தமிழ்மணத்தில் எழுதுகிறீர்களா? என்று கேட்கும் அளவிற்கு வலைப்பதிவும் - தமிழ் மணமும் ஒரே பொருள்படும்படி பலராலும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

இந்நிலைமை கடந்த மூன்று வருடங்களாக உள்ளது. இதற்கு முன்னரும் இது போன்ற பல நிகழ்வுகள் இணையத்திற்கு வெளியேயும் உள்ளது. உதாரணமாக போட்டோக் கொப்பி இயந்திரத்தின் நிறுவனப் பெயரான Xerox என்பது இன்று அச்செயலையே சுட்டுவதாக தமிழகத்தில் வழக்கில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழ்99 விசைப்பலகையை தீவிரமாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளை ரவி வலைப்பதிவுலகில் முன்னெடுத்துள்ளார்.இது உண்மையில் வரவேற்கத் தக்க ஒரு முயற்சியே. 1999 இல் பல அறிஞர்கள் கூடி ஆய்வு செய்து, தமிழக அரசின் ஆதரவுடன் தமிழ்99 விசைப் பலகையை உருவாக்கி, அறிமுகப்படுத்தியிருந்தனர். ஆனால் இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தாமாக இதனைப் பயன்படுத்தத் தொடங்கியவர்களே அதிகம்.

இந்நிலையில் ரவி குழுவினரது பரப்புரைகளால் பலர் தமிழ்99 விசைப்பலகையை புதிதாக பயன்படுத்தத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியாதாக இருந்தது. அண்மையில் சென்னைப் பல்கலைக் கழக பவழ விழா மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் வழங்கப்பட்ட கணிச்சுவடி என்னும் கையேட்டில்கூட தமிழ்99 விசைப்பலகை பற்றியதாக சில அறிமுகங்களை சக வலைப்பதிவரான சிந்தாநதி தந்துள்ளார். இவை யாவும் தமிழ்99 விசைப்பலகையின் பயன்பாட்டினை அதிகப்படுத்தும் என்பதில் மிக்க மகிழ்ச்சியே.

ஆனால்.....

பலர் தமிழ்99 விசைப்பலகையின் சிறப்பம்சமாக பேசுகின்ற விடயங்கள் உண்மையில் தமிழ்99 விசைப்பலகைக்கு உரித்துடையவை அல்ல.

எடுத்துக்காட்டாக ரவி, சிந்தாநதி உட்பட பலர் குறிப்பிடும் முதல் விடயம்

\\ ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும்
அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். \\ (கணிச்சுவடியில் பக்கம் 20 இரண்டாவது பந்தி)

அடுத்ததாக.....

\\அதேசமயம் ஒரே எழுத்தை மூன்று முறை தட்டினால் முதல் எழுத்து மட்டுமே புள்ளியிடப்படும் புத்திசாலித்தனமும் இந்த விசைப்பலகை
முறைக்கு உள்ளது. இந்த இலக்கண முறையிலான குறுக்கு வழிகள் தமிழ்99 விதிப்படி எ-கலப்பையில் இணைக்கப்பட்டுள்ளதால்...\\
(கணிச்சுவடியில் பக்கம் 21 இரண்டாவது பந்தி)

இவை இரண்டும் தமிழ்99 விசைப்பலகையின் இயல்புகளே அல்ல.

இவை யாவும் எ-கலப்பையின் இயல்புகள்.

இதனை உறுதிப்படுத்துவதற்கு, உங்கள் கணனியில் உள்ள எ-கலப்பையை அகற்றிவிட்டு முரசு அஞ்சலை நிறுவிக் கொள்ளவும். அதன் பின் நீங்கள் வழமைபோல் Note Pad இல் அல்லது Microsoft Word இல் அல்லது ஏதாவதொன்றில் தமிழ்99 விசைப் பலகையை பாவித்து தட்டச்சிட்டுப் பார்த்தால், மேற்கூறிய இரண்டு இயல்புகளும் அங்கு செயல்படாது. ஏனெனில் முரசு அஞ்சலில் இந்த சிறப்பு இயல்புகள் இல்லை.

இந்த மாதிரியான ஒரு மயக்கமான புரிதல் பல வலைப்பதிவாளர்களுக்கு ஏற்படக் காரணம், அவர்களுக்கு தமிழ்99 இற்கு முன்னராக எ-கலப்பை அறிமுகமானமை ஆகும். பலரும் எ-கலப்பை யை நிறுவி முதலில் பயன்படுத்தியது Phonetic விசைப்பலகையைத்தான்.

பின்னர்தான் Phonetic விசைப்பலகையில் இருந்து தமிழ்99 விசைப்பலகைக்கு மாறியுள்ளனர்.

இதனால்தான் எ-கலப்பையின் இயல்புகளை தமிழ்99 இன் இயல்புகளாக எண்ணும் போக்கு உருவாகியுள்ளது.

எ-கலப்பை, கணிச்சுவடி, தமிழ்99, பட்டறை

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தனிநாயக அடிகளார் (2)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For