விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

சிற்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

2008-09-16 by விருபா - Viruba | 0 கருத்துகள்
வடக்கு வாசல்
எளிமை, தெளிவு, உறுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தலைநகரிலிருந்து உலகத்தமிழர்களுக்குகாக 2005 செப்டம்பரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழான "வடக்கு வாசல்" நான்காம் ஆண்டு துவக்க விழாவை 2008.09.14 அன்று புது டெல்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.

இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பின் பிரதம ஆலோசகரான ய.சு.ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விழாவில் வடக்கு வாசல் இதழின் இணையதளம் http://www.vadakkuvaasal.com தொடங்கப்பட்டதுடன். "வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008" உம் வெளியிடப்பட்டது. 124 பக்கங்களுடன் கூடிய இலக்கிய மலரின் விலை In Rs 50.00 ஆகும். இச்சிறப்பு மலரை பெற விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள முகவரியில் தொடர்கு கொள்ளவும். மேலதிக தகவல்களை http://www.vadakkuvaasal.com/eidhal.php என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளவும்.

Vadakku Vaasal Publications
5A/11032, Second Floor,
Gali No.9, Sat Nagar,
Karol Bagh
New Delhi-110 005.
Telefax- 011-25815476
Phone: (+91)11-65858656
Mobile: (+91) 9211310455
e-mail: vadakkuvaasal@gmail.com

வடக்கு வாசல் இதழின் முந்தைய வெளியீடுகளின் உள்ளடக்கம் விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம், இணையம், சிற்றிதழ்

"நான் ஏன் எழுதுகிறேன்?" & "கண்ணியம்"

2008-03-28 by விருபா - Viruba | 0 கருத்துகள்
கண்ணியம்
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இலட்சியங்கள், எண்ணங்கள், கொள்கைகள் என பரந்துபட்ட பார்வை இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் எழுதுகிறார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் எழுத வைத்து, எழுத்தாளர்களின் எண்ணக் கருத்துக்களைத் தொடர்ந்து பல இதழ்களில் பதிவு செய்து வருகிறார் "கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன். 1990 முதல் இன்று வரையில் இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நான் ஏன் எழுதுகிறேன்?
இவ்வாறு "கண்ணியம்" இதழில் பதிவு செய்யப்பட்டவற்றை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற புத்தக வடிவில் முதலில் வெளியிட உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தவர் பேராசிரியர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன். மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளராக - ஒரு பதிப்பாளராக தான் செய்யாத அரிய பணியை செய்கின்ற "கண்ணியம்" குலோத்துங்கனை வெகுவாகப் பாராட்டிய ச.மெய்யப்பனின் வாழ்த்துக்களுடன் "நான் ஏன் எழுதுகிறேன்?" இதுவரையில் 13 தொகுதிகள் வெளிவந்துள்ளது. இதனை மணிவாசகர் பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறது.

"கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்களினது எழுத்துக்கான காரணத்தையும் "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் வெளியிட ஆர்வாமாக உள்ளார்.

சிற்றிதழ், புத்தகம், புதிய புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - தமிழினி

2008-01-17 by விருபா - Viruba | 0 கருத்துகள்
தமிழினி

\\தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வழித்துணை வருகின்ற பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்றி வைக்கவும் 'தமிழினி' தன்னை நேர்ந்து கொள்கிறது. கேளிக்கயன்று இதன் பொதுநோக்கு;சமூக நலன்\\

என்ற வாசகத்துடன் புதிதாகக் களம் இறங்கியுள்ளது 'தமிழினி' என்னும் கலை இதழ்.


ஆசிரியர் : நா.விஸ்வநாதன்
தொடர்புமுகவரி : 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014
தொலைபேசி : +91 9884196552
விலை : ரூ 20.00

  • ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை - கரு. ஆறுமுகத்தமிழன்
  • வலைப்பதிவுலகம் : வலைக்கும்மி - ஹரன் பிரசன்னா
  • ஆய்வுக் கட்டுரை : உலகமயமாக்கல் ; அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்
  • 89362 : அகில்
  • நாடோடித் தடம் : குஜராத் நினைவுகள் - ராஜ சுந்தரராஜன்
  • மோடி விலாசம் - அகில்
  • கட்டுரை : 2000 நாட்கள் ; பழங்குடி மக்களின் சமர் - அ.முத்துக்கிருஷ்ணன்
  • விளையாட்டு : மின்னல் வீரன் - எம்.கோபாலகிருஷ்ணன்
  • நாஞ்சில் நாடன் 60
  • ஆளுமைச் சித்திரம் : தாடகை மலை அடிவாரத்தில் - ஜெயமோகன்
  • சிறுகதை : யாம் உண்பேம் - நாஞ்சில் நாடன்
  • ஆய்வுக் கட்டுரை : கூத்தில் ஓர் தோய்வு - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
  • தமிழறிஞர் வரிசை : ஆ.முத்துசிவம் ; விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் - அ.கா.பெருமாள்
  • விமர்சனம் : இயல் விருதின் மரணம் - ஜெயமோகன்
  • இலையுதிர் காலத்தில் ஒரு விருது - தேவசகாய குமார்
  • சிற்பவியல் : ரதி - செந்தீ நடராஜன்
  • நூல் விமர்சனம் : வெண்ணிலையும் வேணுகோபாலும் - தேவதேவன்
  • நகுதற் பொருட்டன்று : காரோடும் வீதி - மகுடேஸ்வரன்
  • உரைவிளக்கம் : கவிதையின் பன்முகப் பரிமாணங்கள் - இரா.குப்புசாமி
  • திரை விழிவு : ராஜ சுந்தரராஜன்
  • மனநிழல் : எச்சரிக்கை ; இது பொதுவழி அல்ல - பாதசாரி

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, சிற்றிதழ், புதிய இதழ்

2008 புத்தகத்திருவிழா - 'தை'

2008-01-10 by விருபா - Viruba | 0 கருத்துகள்
தை- 3
2006 ஆம் ஆண்டு தை மாதத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கவிஞர் அறிவுமதி அறிமுகப்படுத்திய கவிதைகளுக்கான "தை" இதழின் மூன்றாவது வெளியீடு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளிவந்துள்ளது. கண்காட்சியில் அன்னம் - அகரம் (கடை எண் :157-158) பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கவிதைகள்
  • அ.அருள்மொழி
  • அப்துல் கதீம்
  • அப்துல் ரகுமான்
  • அமுதினி
  • அழகுநிலா
  • அன்பன் சிவா
  • ஆகாசம்பட்டு சேஷாசலம்
  • ஆசிப் மீரான்
  • ஆதவன் தீட்சண்யா
  • இசாக்
  • இந்திரன்
  • இரா.ஆனந்தி
  • இரா.தனிக்கொடி
  • இளம்பிறை
  • இளையபாரதி
  • ஈரோடு தமிழன்பன்
  • எழில்பாரதி
  • எஸ்.ஏ.ராஜ்குமார்
  • கண்மணி குணசேகரன்
  • கமலாதாஸ் (தமிழில் சமீரா)
  • கரிகாலன்
  • கல்யாண்ஜி
  • கலாப்பிரியா
  • கலைஞர்
  • கவிமதி
  • கவின்
  • கி.சரவணகுமார்
  • கோசின்ரா
  • கோபு
  • சசி
  • சிற்பி
  • சிறீ.நான்.மணிகண்டன்
  • சுபவீ
  • செல்வகுமாரி
  • செழியன்
  • சேர பட்டணம் அ.மணி
  • சோ.பத்மநாதன்
  • சோதியா
  • தணிகைச் செல்வன்
  • தமிழச்சி
  • தமிழ்த் தம்பி
  • தாமரைதேவதச்சன்
  • தேவேந்திரபூபதி
  • நண்பன்
  • நந்தலாலா
  • நா.முத்துக்குமார்
  • நீலமணி
  • நெல்லை ஜெயந்தா
  • பழ.புகழேந்தி
  • பழனிபாரதி
  • பிரேம் ரமேஷ்
  • ம.மதிவண்ணன்
  • மாலதி மைத்ரி
  • மு.சத்யா
  • முனி.சிவசங்கரன்
  • யாழ்மதி
  • யூமா.வாசுகி
  • ரவி சுப்பிரமணியம்
  • ரா.பார்த்திபன்
  • ரோகிணி
  • லாவண்யா பாரதி
  • லிங்குசாமி
  • வ.ஐ.ச.ஜெயபாலன்
  • வே.இராமசாமி
  • ஜெ.பிரான்சிஸ் கிருபா
  • ஜெஸிலா ரியாஸ்


கட்டுரைகள்

  1. கோபயாஷி இஷா ; கனவு காணும் பட்டாம்பூச்சி - எஸ்.ராமகிருஷ்ணன்
  2. கோஃபி அவூனோர் ; குறிப்பும் மொழிபெயர்ப்பும் - பிரம்மராஜன்
  3. புதுவை இரத்தினதுரையின் பூவரசம்வேலியும் புலூனிக்குஞ்சுகளும் கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி சில குறிப்புகள் - யதீந்திரா
  4. வாழ்வேன் என் எழுத்தில் ; கவிஞர் சு.வில்வரத்தினம் - வீ.அரசு

2008 புத்தகத்திருவிழா, சிற்றிதழ்

உழைப்பவர் ஆயுதம்

2007-12-24 by விருபா - Viruba | 0 கருத்துகள்
உழைப்பவர் ஆயுதம்

திருவண்ணாமலை நகரிலிருந்து வெளிவரும் இலக்கியப் பண்பாட்டு மாத இதழ் உழைப்பவர் ஆயுதம் ஆகும்.

இதன் ஆசிரியர் : த.ம.பிரகாஷ்.

2005 நவம்பர் முதல் இவ்விதழ் வெளிவருகின்றது.

சிற்றிதழ்

யுகமாயினி

2007-11-13 by விருபா - Viruba | 0 கருத்துகள்
முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் - கலகத்தில் மலரும் சுதந்திரம் என்ற வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு சென்னையில் இருந்து வெளிவரும் மாத இதழ் "யுகமாயினி"


யுகமாயினி

நிறுவக ஆசிரியர் - எஸ்.பொ

பொறுப்பாசிரியர் - சித்தன்

ஆசிரியர் குழு :
ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூர்
நிலா - லண்டன்
மதிஅழகன் - டொரண்டோ
ரெ.கார்த்திகேசு - மலேசியா
ராஜ்ஜா - புதுச்சேரி
தமிழச்சி - சென்னை
பாலு தென்னவன் - சென்னை
பழமலய் - விழுப்புரம்
கழனியூரான் - திருநெல்வேலி
கம்பீரன் - திருச்சி

ஆலோசனைக் குழு :
இந்திரா பார்த்தசாரதி
இன்குலாப்
சிற்பி
வா.மூர்த்தி
தர்மகுலசிங்கம் (டென்மார்க்)
வி.கே.டி.பாலன்

சிற்றிதழ்

எஸ்.பொ 75 - மாயினி - யுகமாயினி

2007-09-26 by விருபா - Viruba | 8 கருத்துகள்
எஸ்.பொன்னுத்துரை
ஈழ எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் பவள விழா நிகழ்வாக 30.09.2007 அன்று சென்னை மயிலையில் இலக்கிய நிகழ்வும் புத்தக வெளியீட்டரங்கமும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. காலை 10:00 மணி முதல் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பாபு பரத்வாஜ் சிறப்பு முன்னிலை வகிக்க, பல தமிழ் இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் இந் நிகழ்வின் நிகழ்ச்சி நிரலை இங்கு பார்வையிடலாம்.
அழைப்பிதழ்

நிகழ்ச்சி நிரல்

விழாவின் இறுதி அங்கமாக எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'யுகமாயினி' என்னும் தமிழ் இலக்கிய மாத இதழும், 'எஸ்.பொ' வின் புதிய நூல்கள் மூன்றும் வெளியிடப்படவுள்ளன.

"முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம், கலகத்தில் மலரும் சுதந்திரம்" என்ற வாசகத்தை மையப் பொருளாகக் கொண்டு 'யுகமாயினி' இதழ் வெளிவரும். சித்தன் இதன் பொறுப்பாசிரியராக உள்ளார். இதழ் வெளியீட்டிற்கு முன்னோடியாக, வெளிவரும் இதழ் எந்தத் தாளுடன், தன்மையுடன் வெளிவருமோ அதே போன்ற தன்மையுடன் 50 மாதிரி இதழ்கள், முதல் இதழின் உள்ளடக்கங்களுடன் அச்சிடப்பட்டு, இலக்கிய தொடர்புடையோர் பலரிடம் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளன.

மாதிரி இதழ்

"பெருவணிகப் பத்திரிகைகள் மிக வேகமாக இலக்கியத்தை அற்ப நுகர்பொருளாக மாற்றி விட்டன. மொழியும், படைப்பு வீறும் விதையடிக்கப்படுகின்றன. புதிய படைப்புக்களுக்கும் பிரசுர களங்கள் அருகிவிட்டன. தரமான இலக்கியத்தை முன்னெடுப்பதாகப் பரப்புரை செய்யும் சிறு பத்திரிகைகள், குழுநலம் பேணி சுய அரசியலில் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்க் கலை - இலக்கிய நிகழ்வுகள் உலகளாவியதாக விசாலித்துள்ள நிலையில், அவை பற்றிய பதிவுகள் தமிழ்ச் சுவைப்புக்கும் அக்கறைக்கும் கிடைப்பதில்லை.
இலக்கியம் பற்றிய உண்மையின் தேடலாக அமையும் சிந்தனைகளையும், விவாதங்களையும், விமர்சனங்களையும் முன்னெடுக்கும் முனைப்புகள் மறைந்து வருகின்றன. உலகளாவியதாக விரிந்துள்ள தமிழ்ப் படைப்புகளுக்கு பிரசுர களமாக புத்தாயிரத்தின் பொற்பதங்களை உள்வாங்கி, கலை-இலக்கியம் சம்பந்தமான குழுசாராத, ஆரோக்கியமான, நேர்மையான எழுத்துச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு நடுப் பத்திரிகையாக, உலகளாவிய தமிழ் கலை-இலக்கிய நிகழ்வுகளின் வரலாற்று ஆவணமாக ஒரு பத்திரிகை வெளிவருதல் அவசியம் என உணரப்படுகின்றது.

முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம், கலகத்தில் மலரும் சுதந்திரம் கருத்துத் திணிப்பு அல்ல - கருத்துப் பகிர்தல்.
இலக்கியப் படைப்பின் பரப்பையும் சுவைப்பையும் அகலித்தல்.

இவற்றைத் தமிழ் செய்ய யுகமாயினி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
"

என்கிறார் முதல் இதழில் இதன் நிறுவக ஆசிரியர் எஸ்.பொ.


யுகமாயினி ஆசிரியர் குழு.

ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூர்
நிலா - லண்டன்
மதிஅழகன் - டொரண்டோ
ரெ.கார்த்திகேசு - மலேசியா
ராஜ்ஜா - புதுச்சேரி
தமிழச்சி - சென்னை
பாலு தென்னவன் - சென்னை
பழமலய் - விழுப்புரம்
கழனியூரான் - திருநெல்வேலி
கம்பீரன் - திருச்சி

யுகமாயினி ஆலோசனைக் குழு
இந்திரா பார்த்தசாரதி
இன்குலாப்
சிற்பி
வா.மூர்த்தி
தர்மகுலசிங்கம் (டென்மார்க்)
வி.கே.டி.பாலன்

புதிய நூல்கள் பற்றிய பதிப்பாளரின் அறிமுகக் குறிப்புகள்.

1. மாயினி
மாயினி
தமிழில் முதல் அரசியல் நாவல்.

இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்நாவலில் நடமாடுகிறார்கள்.1996 இல் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் நடைபெற்ற வன்னிப் புலப்பெயர்வை இந்நாவல் பிரதான களமாகக் கொண்டுள்ளது. விந்தையான சித்த வைத்திய சூரணம் ஒன்றின் மூலம் சென்ற காலத்தினூடாக பயணிப்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று நூற்றாண்டுகளை அடக்கிய பண்டார நாயக்கா குடும்ப வரலாறு அரிய பல தகவல்களுடன் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்த் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அடுத்தடுத்து சிங்கள அரசியல் வாதிகள் மேற்கொண்ட தமிழினத் துடைப்புச் சட்டங்களின் எதிர்வினையாகவே தமிழர் தேசியம் தோன்றியது என்றும், இந்நாவல் கூறுகிறது. அரசியல்வாதிகள் சிலருடைய அந்தரங்க வாழ்கையின் நிகழ்வுகள் பல துடிச்சலுடன் இதில் கையாளப்பட்டுள்ளது. தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வாளர்களுக்கும், உபாசகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்நூல் சமர்ப்பணமாகியுள்ளது.

தீ என்ற தனது முதலாவது நாவல் மூலம் இலக்கிய உலகில் சலசலப்பு ஏற்படுத்திய எஸ்.பொ, மாயினி மூலம் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணமாக ஸ்ரீமாவோவிற்கும் மகன் அனுரவிற்கும் நடை பெறும் உரையாடலைச் சொல்லலாம் 'நீ என் மகன் ஆனால் பண்டார நாயக்காவின் மகன்தானா என்பதை அறுதியிட்டுச் சொல்லதுடியாது'. இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த பொழுது நடைபெற்ற நிகழ்வுகள் பல இந்நாவலிலே நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

2.மணிமகுடம்
மணிமகுடம்
இலங்கைத் தீவின் கரையோர மாகாணங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பின்னரும் 300 ஆண்டுகள் சுதந்திரத்தை காப்பாற்றிய வீர வரலாறு கொண்டது கண்டி நாடு. இக் கண்டி நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதிலே கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களுடைய பங்களிப்பு சிறப்பானது. கண்டியின் சிங்களப் பிரதானிகளுடைய சூழ்ச்சிகளாலும், அன்னியருடைய ஆட்சியை அவாவிய துரோகத்தினாலும் தான் கண்டி நாடு தன் சுதந்திரத்தை இழந்தது.

இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் 1814 ஆம் ஆண்டு நடை பெற்ற சரித்திர நிகழ்வுகளின் ஓர் ஆவணமாக மணிமகுடம் திகழ்கின்றது. இவ்வரலாற்று நாவலின் பிறிதொரு சிறப்பம்சம் என்னவென்றால் நவரசங்களின் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வோர் அத்தியாயத்தில் முதன்மைப் படுத்தும் வகையில் ஒன்பது அத்தியாயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரகவி இ.நாகராஜன் மூன்று அத்தியாயங்களையும், ரசிகமணி கனக செந்திநாதன் மூன்று அத்தியாயங்களையும் எழுத, கடைசி மூன்று அத்தியாயங்களை எழுதி எஸ்.பொ இந் நாவலை முழுமைப்படுத்தியுள்ளார்.

இன்று சிங்கள இன அரசியலால் திருத்தி சரித்திரம் எழுதப்படும் நிலையில், கண்டி அரசின் அஸ்தமன நாட்கள் உரிய முறையில் அறிந்து கொள்வதற்கு இந்த நாவல் உதவுகின்றது. ஈழத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய கூட்டு முயற்சிகளின் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந் நூல் தமிழிற்குக் கிடைத்துள்ளது.

3.தீதும் நன்றும்
தீதும் நன்றும்
கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முதல் வரியை அறியாத தமிழர் இல்லை எனலாம். இதனையே தனிநாயகம் அடிகளார் உலகத் தமிழ் அக்கறைகளின் மையக் கோஷம் ஆக்கினார். சர்வதேசிய ஆய்வு அரங்குகளில் இவ்வாசகம் மையப்படுத்தப்படுகிறது. இக்கவிதையின் இரண்டாவது வரி 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதாகும்.

ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரனுடன் எஸ்.பொ நடத்திய இலக்கிய உரையாடலே 'தீதும் நன்றும்' என்ற மகுடத்தில் வெளிவந்துள்ளது.எஸ்,பொவின் 'வரலாற்றில் வாழ்தல்' என்னும் சுயசரிதை சுமார் 2000 பக்கங்களிலே வெளிவந்துள்ளது. அந்நூலில் அவர் குறிப்புட்டுள்ள பல கருத்துக்கள் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டிருந்தன, இலக்கிய சேமம் கருதி இந்த சந்தேகங்களுக்கு நேரிய விடைகள் தேவை, இந்த விடைகளைக் காணும் ஒரு இலக்கிய முயற்சியாகவே 'தீதும் நன்றும்' நூல் அமைந்துள்ளது. இதனை ஒரு நேர்காணலாக எஸ்.பொ வகைப்படுத்தவில்லை. எழுப்பப்டும் வினாக்களுக்கு விளக்க விடைகள் அளிக்கும் ஒரு இலக்கிய முயற்சியாகவே அவர் கணிக்கின்றார்.

பிறிதொரு வகையில் 'வரலாற்றில் வாழ்தல்' குறித்த இலக்கிய உரையாடலாகவும் இது தரிசிக்கப்படலாம். 20 நூற்றாண்டின் ஈழ தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய விரும்பும் ஆய்வு மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் 'தீதும் நன்றும்' ஒரு கையேடாக பயன்படவல்லது.

ஈழம், எழுத்தாளர், எஸ்.பொ, எஸ்.பொன்னுத்துரை, சிற்றிதழ், புத்தகம்

வல்லினம்

2007-08-17 by விருபா - Viruba | 0 கருத்துகள்
வல்லினம்
புதுச்சேரி - இலாசுப்பேட்டையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ் "வல்லினம்" ஆகும்.

இதன் ஆசிரியர் : மகரந்தன்

பொறுப்பாசிரியராக மு.சுதர்சனும், ஆசிரியர் குழுவில் கே.பழனிவேல், அ.சதீஷ், பா.ஜெயகணேஷ் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

வெளியிடுபவர் : G.புனிதா

2007 ஜூன் - ஆகஸ்டு இதழானது எழுதா இலக்கியச் (நாட்டுப்புறவியல்) சிறப்பிதழாக 120 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

சிற்றிதழ்

மனம் ஒளிர்ந்திட

2007-08-01 by விருபா - Viruba | 1 கருத்துகள்
நாகர் கோவிலில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "மனம் மலர்ந்திட" மாத இதழ் பெயர் மாற்றமடைந்திருக்கிறது. 2007 ஜூலை முதல் "மனம் ஒளிர்ந்திட" என்ற பெயரில் வெளியாகிறது. இத்தகவலை இதன் ஆசிரியர் எஸ்.எட்மண்ட் எமக்குத் தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார்.

மனம் ஒளிர்ந்திட


"மனம் ஒளிர்ந்திட" புதிய முகவரியில் இருந்து வெளியாகிறது. இதன் வெளியீட்டுத் தகவல்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

சிற்றிதழ்

புதுகைத் தென்றல்

2007-07-14 by விருபா - Viruba | 0 கருத்துகள்
புதுகைத் தென்றல்
சென்னை வடபழனியில் இருந்து வெளிவரும் சமுதாய, இலக்கிய, பண்பாட்டு மாத இதழ் புதுகைத் தென்றல் ஆகும். இதன் ஆசிரியர் புதுக்கோட்டையைச் சேர்ந்த மு.தருமராசன் ஆவார். முன்னாள் இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரியான மு.தருமராசன் இவ்விதழை கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வருகிறார். இதழ் வெளியீட்டுடன் அவ்வப்போது சில நூல்களையும் மு.தருமராசன், "புதுகைத் தென்றல் வெளியீடு" மூலம் வெளியிட்டு வருகிறார்.

சிற்றிதழ்

கவிதை உறவு

2007-06-26 by விருபா - Viruba | 0 கருத்துகள்
கவிதை உறவு


சென்னை அண்ணா நகரிலிருந்து வெளிவரும் மனிதநேய இலக்கியத் திங்களிதழ் "கவிதை உறவு" ஆகும். ஏர்வாடியார் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் வங்கி அதிகாரியான எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியில் இவ்விதழ் வெளிவருகின்றது. இதழின் சார்பில் ஒவ்வொரு மாதமும் "கவிதை இரவு" என்ற கவிஞர்களின் ஒன்றுகூடல் நடைபெறுகின்றது. இக் "கவிதை இரவு" நிகழ்வானது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.

"கவிதை உறவு" இதழானது கடந்த 35 ஆண்டுகளாக வெளிவருகின்றது. அண்மையில் இவ்விதழின் ஆசிரியரான கலைமாமணி ஏர்வாடியாரின் மணிவிழாவும், இதழின் 35 ஆவது ஆண்டுவிழாவும் சென்னையில் நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

அண்மையில் வங்கிப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் ஆசிரியர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் "கவிதை உறவு" இதழின் வெளியீட்டில் முன்னைவிட அதிக பங்களிப்பினை ஆற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிற்றிதழ்

யாதும் ஊரே

2007-06-21 by விருபா - Viruba | 0 கருத்துகள்
யாதும்  ஊரே
பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்க ஆதரவில் வெளிவரும் பல்சுவை மாத இதழ் "யாதும் ஊரே" ஆகும். நூற்றிக்கு மேற்பட்ட பக்கங்களுடன் கனதியான ஆக்கங்களுடன் வெளிவருவது இவ்விதழின் சிறப்பாகும். கடந்த பதினொரு வருடங்களாக இவ்விதழ் ஒவ்வொரு மாதமும் 11ம் 12ம் திகதிகளில் வெளிவருகிறது.

இதன் ஆசிரியர் : நா.வை.சொக்கலிங்கம்

சிற்றிதழ்

தலித் முரசு

2007-06-18 by விருபா - Viruba | 0 கருத்துகள்
தலித் முரசு

சென்னை சூளைமேட்டில் இருந்து வெளிவரும் சமூக நீதித் திங்கள் இதழ் தலித் முரசு ஆகும். இவ்விதழ் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிவருகிறது. ஏ.பி.வள்ளிநாயகம், அழகியபெரியவன் போன்ற பல சமநீதி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இவ்விதழில் தொடர்ந்து வெளிவருகின்றன.

இதன் ஆசிரியராக புனித பாண்டியன் உள்ளார்.

இவ்விதழின் வெளியீடுகள் www.dalithmurasu.com என்னும் இணைய முகவரியில் கிடைக்கின்றன.

சிற்றிதழ்

செம்பருத்தி

2007-06-08 by விருபா - Viruba | 0 கருத்துகள்
செம்பருத்தி
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் மாத இதழ் செம்பருத்தி ஆகும். உனதுரிமையை இழக்காதே! பிறருரிமை பறிக்காதே! என்பதை அடிப்படையாகக் கொண்டு மலேசிய வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல கட்டுரைகளை செம்பருத்தி வெளியிட்டுள்ளது.


இதன் ஆசிரியர் வெ.முத்து ஆவார்.

சிற்றிதழ்

நடவு

2007-05-12 by விருபா - Viruba | 0 கருத்துகள்
நடவு
திருமுதுகுன்றம் நகரில் இருந்து தனிச்சுற்றுக்கு மட்டும் வெளிவரும் கலை இலக்கிய ஆய்விதழ் "நடவு" ஆகும். டெம்மி அளவில் 100 பக்கங்களுடன், அறியப்பட்ட எழுத்தாளர்களின் கனதியான படைப்புகளுடன் இவ்விதழ் வெளிவருகிறது. கடந்த நான்கு வருடங்களாக இவ்விதழ் வெளிவருகிறது. தமிழில் வெளியான நூல்களுக்கு அதிக கவனத்துடன் தரமான மதிப்புரைகளை இவ்விதழ் வழங்குகின்றது.

இதன் ஆசிரியராக கோ.தெய்வசிகாமணிஉள்ளார்.

ஆசிரியர் குழுவில் தமிழ்ச்சேரன், அரசிளங்குமரன், கவிஞர் தமிழரசன், மற்றும் புகழ்மாங்கான் ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றர்.

இவ்விதழின் 2006 Oct - Dec வெளியீட்டிற்குரிய உள்ளடக்கங்களை இங்கு காணலாம்.

சிற்றிதழ்

நோக்கு

2007-04-27 by விருபா - Viruba | 0 கருத்துகள்
நோக்கு

  1. தமிழாய்வை மேம்படுத்துதல்.

  2. தமிழ் இலக்கியங்களைப் பரப்பல்.

  3. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு சார்ந்த மரபுச்செல்வங்களைப் பரப்பல்.

  4. இந்நோக்கில் இதழ், நூல் முதலியன வெளியிடல்.

  5. கருத்தரங்கு, கவியரங்கு முதலியன் நடத்தல்.

  6. பேச்சு, எழுத்துத் திறன்களை இளைஞர்களிடையே வளர்த்தல்.

  7. தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு நல்கிய தக்க அறிஞர்களுக்குப் பட்டமளித்துப் பாராட்டல்.

  8. மாணவர்களுக்கு கல்வி உதவி நல்கல்.

  9. இளைஞர்களுக்கு தமிழ் உணர்வும் அறிவும் ஊட்டல்.

  10. நூல் வெளியீட்டிற்கு உதவல்.



மேற்கூறியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு, சென்னைப் பலைகலைக் கழகத்தின் தமிழ் மொழித்துறையின் கீழ் இயங்கும், சென்னைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள, பதிவு பெற்ற நிறுவனமான தமிழாய்வு மன்றத்தின் ஆதரவுடன் "நோக்கு" என்னும் காலாண்டு இதழானது தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் இதழ் சித்திரை மாதத்தில் வெளிவந்துள்ளது.

மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, மெய்யியல், அறிவியல் சார் பன்னாட்டுக் காலாண்டிதழாக இவ்விதழ் அமையும்.

இவ்விதழின் ஆசிரியராக ஈரோடு தமிழன்பன் அவர்களும், இணையாசிரியராக (மதிப்புறு நிலை) வ.ஜெயதேவன் அவர்களும் பொறுப்பேற்றுளனர்.

சிலம்பொலி சு.செல்லப்பன், கா.செல்லப்பன், இரா இளவரசு, பொன் செல்வகணபதி, நா.முத்துக்குமார், பத்மாவதி விவேகானந்தன், இரா.பிரேமா, பா.இரவிக்குமார் ஆகிய தமிழ் அறிஞர்கள் ஆசிரியர் குழுவில் இணைந்து இவ்விதழின் வெளியீட்டில் பங்கு பெறுகிறார்கள்.

இவ்விதழின் மேம்பாட்டிற்கான அறிவுரைக் குழுவில் பின்வருவோர் இணைந்துள்ளனர். அ.அறிவுநம்பி, சி.மா.இரவிச்சந்திரன், இராதா செல்லப்பன், ஆறு.இராமநாதன், கம்பம் சாகுல் அமீது, தி.கமலி, கி.நாச்சிமுத்து, க.பஞ்சாங்கம், துரை.பட்டாபிராமன், தொ.பரமசிவம், பாலா அ.பிச்சை, இ.மறைமலை, இரா.மோகன், பெ.மாதையன், டேனியல் சங்கீதம்.

இவ்விதழின் பதிப்பாளர் இரா.பன்னிருகைவடிவேலன் ஆவார். பதிப்புக்குழுவில் ப.குமார், வை.சிவநேசன், கோ.வெற்றிச்செல்வி, கி.காவேரி, அ.செந்தில் நாராயணன், கு.சுபாஷினி, ஏ.கோதண்டராமன் ஆகியோர் செயலாற்றுகின்றனர். பதிப்புதவி - விழிகள் தி.நடராசன்.


"நோக்கு" 2007 ஏப்பிரல் இதழின் உள்ளடக்க விபரங்கள் இங்கே கொடுக்கப்படட்டுள்ளன.


சிற்றிதழ்

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தனிநாயக அடிகளார் (2)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For