1.வெள்ளிப் பாதசரம்
இலங்கையர்கோன் பிற நாட்டு நல்ல சிறுகதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு உதவினார். இலங்கைச் சரித்திரக் கதைகளையும், பழங்காலப் புராணக் கதைகளையும் மெருக்கிட்டுப் புதிய சிறுகதைகளாக்கினார். சரித்திர நாடகங்களையும், இலக்கிய நாடகங்களையும் எழுதினார். நாடகங்களின் தன்மைக்கு ஏற்ப செய்யுள் நடையையும், சாதாரண வழக்கு நடையையும் கையாண்ட புதுமையை இவரது எழுத்துக்களிலே காணலாம். காலத்திற்கு காலம் வளர்ச்சித் தடத்திலே மிடுக்குடன் நடந்து இறக்கும்வரை எழுதிக்கொண்டேயிருந்த பெருமை இலங்கையர்கோனைச் சாரும். 'வஞ்சம்' அவரது நல்ல கதைகளில் ஒன்றாகும். 'தேசிய இலக்கியம்', 'மண்வளம்' என்று பிற்காலத்தில் எழுப்பப்பட்ட 'கோஷங்'களுக்குப் பொருத்தமான சிறுகதையாகத் திகழும் 'வெள்ளிப் பாதசர'த்தை 1942 ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார்.
எழுத்தாளர் : இலங்கையர்கோன்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
2.வேடந்தாங்கல் - கவிதைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
3.சூரியப் பொருளாதாரம் - கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
இவ்விரு நூல்களின் ஆசிரியர், அ.இளங்கோவன் சுற்றுச் சூழலியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் வணிகவியல் பேராசிரியர். புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பணி புரிகிறார். 'அஃறினைக் காதல்' என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியுள்ளார். மேலும் "காற்றின் ஜாலம்" என்ற இசைக் குறுந்தகட்டை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.
* * * * * * * * * * * * * *
4.உனையே மயல் கொண்டு
"உனையே மயல் கொண்டு" என்பது டாக்டர் நடேசனின் மூன்றாவது தமிழ் நூல். அவர் தமிழ்ச் சுவைப்புக்குத் தரும் இரண்டாவது நாவல்.
இந்நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கிக் கொள்வதற்கான காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம் பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பதும் பதிவு செய்யப்படுகிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன் -
எழுத்தாளர் : டாக்டர் என்.எஸ்.நடேசன்
பக்கம் : 152
விலை : 80.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
5.காவேரி கதைகள் - 1
எழுத்தாளர் : காவேரி
பக்கம் : 312
விலை : 250.00 In Rs
வெளியீடு : மித்ர
6.காவேரி கதைகள் - 2
'காவேரி' என்ற புனைப் பெயரில் எழுதிக்கொண்டு வரும் லக்ஷ்மி கண்ணன், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எழுதி வருகிற எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இவரது இலக்கிய வானம் மிக விரிந்து செல்கின்றது. இவரது உரைநடையின் இயல்பான
வீச்சில்கூட ஒரு கவிதை ஈயம் தொனிப்பதை ஸ்பரிசிக்க முடிகிறது.
தாய்மொழி தமிழும், கன்னடத்து மண்வாசமும், தில்லியில் பல்வேறு தேச கலாச்சார பாதிப்புகளும், இவற்றிற்கு ஈடுகொடுத்து நின்று, சக மானுட ஜீவிகளுக்காகவும், தனக்காகவும் ஒரு ஆத்ம தேடலை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது 'ஆத்துக்குப் போகணும்' ஆத்ம பரிசோதனையின் உன்னத உயரத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பு.
இதுவரை பதினெட்டு நூல்களைப் படைத்திருக்கிறார். இதில் சில படைப்புகள் இந்தி, மராத்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலத்துடன் பிரஞ்சு, ஸ்பேனிஸ், ஜெர்மன், அரபிக் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெங்குவின் பதிப்பகம், யாத்ராவுடன் இவரது தமிழ்க் கவிதைத் தொகுதியை இந்தியில் பிரசுரித்தார்கள்.
* * * * * * * * * * * * * *
7.பெருவெளிப் பெண்
'பெருவெளி' எல்லைகளற்றது. குறுக்குக் கோடுகளற்றது. சுதந்திரமானது. விடுதலையின் பஞ்சுப்பொதி நிரம்பியது. வார்த்தைகளுக்கு அவசியமற்ற மௌனத்தை அப்பிக் கொண்டிருப்பது. எடையற்றுப் பறத்தலை சாத்தியமாக்குவது. விசயலட்சுமிக்கும் தன் கவிதைப் பயணமே அந்தப் பறத்தலைச் சாத்தியமாக்குகிறது. எடையற்று இல்ல - பெண் மீதான கலாச்சார, நிறுவன, மதங்களின் எடையுடன், பறத்தலை. அப் பறத்தல், கையறுநிலையில் தீனமானதொரு மென்குரலாக அல்லாமல், ஒரு சீற்றத்தை உள்ளடக்கிய உரத்த குரலாக இருப்பதுதான் இங்கே கவனிப்பிற்குரியது.
- தமிழச்சி தங்கபாண்டியன் -
பெருவெளிப் பெண்ணின் குரல் மானுட சமூகத்தின் மனசாட்சியாய்ப் பேசுகிறது. இதன் அலை நீளம் அண்டங்களைக் கடந்து செல்லும் அதிர்வுகளை அகச்சுவர்களில் எதிரொலிக்கும் காலங்கள் இதனுள் கரைந்து போகும். மாயபிம்பங்கள் மாற்றிக் காட்டும் சமூகத்தின் சுயம் காட்டும் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கிறது.
- இரா.கனகராசு -
எழுத்தாளர் : ச.விசயலட்சுமி
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
8.பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்
யாழினி முனுசாமி நவீன இலக்கியம் சார்ந்து இயங்குபவர். இவரது விமர்சனங்கள் சிறுபத்திரிகைச் சூழலில் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய பார்வை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், கல்வெட்டுப் பேசுகிறது, தாமரை முதலான பல இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நிகழ்த்துக்கலை தொடர்பான நூல்கள் குறித்து இவர்
எழுதியுள்ள விமர்சனங்களின் தொகுப்பாக இந்நூல் வெளி வருகிறது. ஆய்வரங்கங்களில் படித்தளிக்கப் பெற்ற சில ஆய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவர் எளிமையும் பாரபட்சமற்று எழுதும் போக்கையும் கொண்டவர்.
- ச.விசயலட்சிமி -
முனுசாமியின் மனம் மரபின் வேர் அறுந்துவிடாத நவீன மனம். அதனால்தான் சங்க இலக்கியம் தொடர்பான நூலாக இருந்தாலும், இயொனெஸ்கோவின் நாடகமாக இருந்தாலும், அவற்றைச் சரியானபடி உள்வாங்கிக் கொள்ளகிறது.
- பா.இரவிக்குமார் -
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
9.உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும்
சென்னை நகரைப் பாராட்டியவர்களை நான் பார்த்ததே இல்லை. சென்னையைப் பற்றி முனுசாமி எழுதியுள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. வாழும் இடத்தை வெறுக்கக் கூடாது. தமிழிலக்கியத்தில் மிகவும் முக்கியமாக விளங்கக் கூடிய கவிதை இது. இரயில் பயணம் பற்றிய கவிதைகள் முக்கியமானவை. இரயிலுக்குள் 'தொடர்வண்டிக்குள்
தொடர்வண்டியாய்' பாட்டுப் பாடிப் போகும் பார்வையற்றவர்கள் பற்றி எழுதியுள்ள கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
முனுசாமி கவிதைகளின் மையப்புள்ளி எது? புதுமைப்பித்தன் கதைகளின் மையப் புள்ளி வறுமை. மௌனி கதைகளின் மையப்புள்ளி கோயிலும் கோயில்சார்ந்தவையும். முனுசாமி கவிதைகளின் மையம் மனிதநேயம். சக மனிதர்கள் மீதான நேயம்தான் முனுசாமி கவிதைகளின் மையப்புள்ளியாக இருக்கிறது. இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும்.
-பிரபஞ்சன்-
ஜெ.கங்காதரன் தமிழிலக்கியத்தில் முதுகலையும் இளங்கல்வியியலும் முடித்தவர். சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். கோ.கேசவன் படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். இயக்கம் சார்ந்த ஈடுபாடு கொண்டவர். முரண்களரி அமைப்பின் மூலம்
தொடர்ந்து இலக்கியப் பணியாற்றி வருகிறார். இது இவரது முதல் நூலாக்கம்.
தொகுப்பாசிரியர் : ஜெ.கங்காதரன்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
10.எண்ணக் கோலங்கள்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகால நட்பு எங்களைக் கருத்தியல் ரீதியாகவும் அறிவுத் ஏடல் சார்ந்தும் இணக்கமான பொது வழிப் போக்கர்களாக மாற்றியுள்ளது. இந்த நெடுங்கால நட்பும் பகிர்வும் தந்த பாடங்கள்சிறப்பானதொன்று. நண்பர் சந்திரபோஸ் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் -
"கற்பதற்காகப் போராடு:
போராடுவதற்காகக் கல்."
இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கின்றபொழுது சந்திரபோஸ் அவர்களின் இந்நூல் தொகை, கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள், சிறுகதை, குறுநாடகம், ஆவணம் என ஒரு கதம்பமாக இருப்பதுஇயல்பே. ஆசானாகவும், ஆய்வாளனாகவும், இலக்கியவாதியாகவும் "அறிவுக்கு முதன்மை கொடுக்கும் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் விளங்க வேண்டும்" என்ற விருப்புடைய அறிவுசீவியாகவும் பரிணமித்துள்ள சந்திரபோஸின் பன்முகப்பட்ட வெளிப்படாஉகளை இந்நூல் காட்டுகிறது.
- கவிஞர் சேரன் -
எழுத்தாளர் : எஸ்.சந்திரபோஸ்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
11.பின்னிரவுப் பெருமழை
உணர்ச்சிக்குவியலான கவிதைகளின் தொகுப்பு.
எழுத்தாளர் : மு.ரிலுவான்கான்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக