2008 புத்தகத்திருவிழா - மாற்று
2007-12-28 by விருபா - Viruba |
0
கருத்துகள்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
தமிழின் முதல் பெண்நாவலாசிரியர், 1936 ஆம் ஆண்டில் வெளியான 'மதிகெட்ட மைனர் (அ) தாசிகளின் மோசவலை' எழுதியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். திராவிட இயக்கவரலாற்றில் பெரியாருடன் பணியாற்றியவர்களில் முதல் வரிசையில் இடம் பெறுபவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடன் சேர்ந்து தேவதாசி ஒழிப்பு பணிகளில் பங்குபற்றியவர்.
சுயமரியாதைக்காக போராடிய பெண்மணியின் வரலாறு. விரிவான தகவல்களுடன் முதல் முறையாக நூல் வடிவம் பெற்றுள்ளது.
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 150
எழுத்தாளர் : பா.ஜீவசுந்தரி
பதிப்பகம் : மாற்று
* * * * *
கிறுக்கி
தமிழர் நிகழ்த்துக்கலை மரபின் வரலாற்றைத் தேடல் என்பதும் அதைப் புரிந்து கொள்ளல் என்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அந்தத் தேடலின் இன்னொரு முயற்சியே இந்நூல். தெருக்கூத்து தொடர்பாக நடந்துவரும் உரையாடல்களின் நீட்சியாக "கிறுக்கி" என்ற பெயரில் வெளிவரும் கூத்துத் தொடர்பான இக்கட்டுரைத் தொகுதி வழி விழங்கிக் கொள்ள முடியும்.
இதில் அரசு.வீ, இராமசாமி.மு, சீனிவாசன்.இரா, சுந்தர்காளி, செல்வதுரை.ஏ.கே, பழனி.கோ, மங்கை.அ, முத்துசாமி.ந, ரவீந்திரன்.செ, ஜெயசங்கர்.சி ஆகியோரின் கட்டுரைகளும் பிஜி தெருக் கூத்துக் கலைஞர் ஆதிநாராயணனோடு இளைய பத்மாநாதனும், கண்ணப்ப சம்பந்தத்தோடு சி.முத்துகாந்தன் நிகழ்த்திய உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன.
விலை : 75.00
பக்கங்கள் : 160
பதிப்பாசிரியர் : கோ.பழனி
பதிப்பகம் : மாற்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக