1.என் கேள்விக்கு என்ன பதில்?
செக்ஸ் குறித்த கேள்விகளுக்கான தெளிவான பதில்களைத் தருகிறார் டாக்டர் டி. காமராஜ்
எழுத்தாளர் : டாக்டர் டி.காமராஜ்
பக்கங்கள் : 152
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
2.நலம் தரும் வைட்டமின்கள்
வைட்டமின்கள் என்றால் என்ன?
ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா?
வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
வைட்டமின் பற்றாக்குறையால் எந்தெந்த நோய்கள் உண்டாகும்?
வைட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு வருமா?
கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகள் தரப்படுவது ஏன்?
ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின்கள் எவை?
வைட்டமின்கள் பற்றிய பல தகவல்களும், உடலுக்குள் வைட்டமின்கள் செய்து கொண்டிருக்கிற வேலைகள் பற்றியும் சுவரஸ்யமாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எழுத்தாளர் : என்.சொக்கன்
பக்கங்கள் : 176
விலை : 75.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
3.நவீன சிகிச்சைகள். (A to Z வயிறு)
*உடல் பருமனாக உள்ளவர்கள் அறுவைச் சிகிச்சை உலம் 'சிக்' உடல்வாகு பெறமுடியுமா?
*'கீழாநெல்லி' சாப்பிட்டால் மஞ்சள் காமாலை சரியாகுமா?
*மது பழக்கத்தால் ஜிரண உறுப்புகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன?
*ஒரு முறை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிறகு அப்பெண்டிசைடிஸ் மீண்டும் வருமா?
வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தெளிவாக விளக்கி அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
1985 ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 32 தங்கப் பதக்கங்களுடன் வெளியே வந்தவர். இந்தியாவில் இருக்கும் லாபரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் முக்கியமானவர். நூலாசிரியரின் முதல் புத்தகமான?'ஒரு சாண் உலகம்', வெளிவந்த சில மாதங்களிலேயே 10,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியிருக்கிறது. ஜீரண மண்டலம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் அந்நூலின் இரண்டாம் பாகமாகவே இப்புத்தகத்தைக் கொள்ளலாம்.
எழுத்தாளர் : டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார்
பக்கங்கள் : 160
விலை : 75.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
4.பத்திய உணவுகள்
பத்திய உணவு என்பது என்ன?
நோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?
இதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?
பத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?
கர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?
ஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி விரிவான தகவல்களைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம்.
நூலாசிரியர் அருணா ஷ்யாம், சத்துணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில், சத்துணவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சிகளில், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
எழுத்தாளர் : அருணா ஷ்யாம்
பக்கங்கள் : 144
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
5.அம்மா அப்பா ஆகணுமா?
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?
குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?
கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை?
ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம்.மலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், 'எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்' என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர்.
நூலாசிரியர்கள், டாக்டர் டி. காமராஜ், டாக்டர் கே. எஸ். ஜெயராணி இருவரும் கருவாக்கம் மற்றும் பாலியல் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். சென்னையில் உள்ள இவர்களது ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். கருப்பை இல்லாத பெண்ணுக்கு செயற்கை
கருப்பையை உருவாக்கி குழந்தை பெறச் செய்து இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.
எழுத்தாளர்கள் : டாக்டர் டி.காமராஜ் - டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
பக்கங்கள் : 200
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
6.கரு முதல் குழந்தை வரை
கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?
கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்?
கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?
கர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?
கர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?
பிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?
கருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?
இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.
நூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார்.
எழுத்தாளர்கள் : டாக்டர் ஜெயராணி காமராஜ்
பக்கங்கள் : 232
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
7.நோய் தீர்க்கும் யோகாசனங்கள்
யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்?
ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?
ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்?
ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா?
பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?
யோக நித்திரை என்றால் என்ன?
யோகாசனம் மற்றும் அது தொடர்பான வேறு சில பயிற்சிகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன், பலன்கள் முழுமையாகக் கிடைக்கக்கூடிய வகையில் தவறு இல்லாமல், ஆசனம் செய்வது எப்படி என்பதையும் படங்களுடன் விளக்குகிறது இப் புத்தகம்.
நூலாசிரியர் டாக்டர் ர. மணிவாசகம், தன்னுடைய ஸ்ரீரமணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகாசன மையத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி அளித்துவருகிறார். பல தனியார் தொலைக்காட்சிகளில், யோகாசனம் பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கிஉள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழு(யு.ஜி.சி.) சார்பாக யோகா நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.
எழுத்தாளர்கள் : டாக்டர் ர.மணிவாசகம்
பக்கங்கள் : 232
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : நலம்
* * * * * * * * * *
8.டீன் - ஏஜ் பிரச்னைகள்
டீன்-ஏஜ் வயதில் ஆண்-பெண் உடலில் ஏற்படும் இயல்பான பருவ மாற்றங்கள் என்னென்ன?
பருவ வயதில் இருபாலரும் உடலளவில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி?
எதிர்பாலினரின் மீது கிளர்ச்சி ஏற்படுவது ஏன்?
வக்கிர எண்ணங்கள் ஏன் ஏற்படுகின்றன?
தவறான செக்ஸ் உறவில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
சுய இன்பப் பழக்கம் ஆண்-பெண் இருவருக்கும் இயல்பான விஷயமா?
இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதுடன் உளவியல் பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் விளக்குகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் டாக்டர் ஷாலினி, மன நல மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும், மகளிர் மனநலம் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் பெற்றவர். 'மனநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்ற அமைப்பை நடத்திவரும் இவர், 'மைண்ட் ஃபோகஸ்' என்ற நிறுவனத்தின் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை அளிக்கிறார். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
எழுத்தாளர்கள் : டாக்டர் ஷாலினி
பக்கங்கள் : 136
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : நலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக