ஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக் கருதப்படுகிறது. எழுத்தாளர்கள் பலரும் இவ்வாறு தாம் எழுதுவதையும், தன் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகன், அதனை உரியவாறு புரிந்துகொள்வான் என்பதையும் பெருமையுடன் கூறுவதும் உண்டு.
இவ்வறே தான் நவீன ஓவியங்களும். நேரடியான எழில் மிகு ஓவியங்களைவிட கோடுகள், கிறுக்கல்கள் மிகுந்த நவீன ஓவியங்கள் நேரடியாக எதையும் கூறாமல், மறை பொருளிலேயே அதன் வெளிப்படுகளைத் தருகின்றன.
எழுத்துக்கள், கவிதைகள், ஓவியங்கள் போலவே படங்களும் சில வேளைகளில் சொல்லாத சேதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக அமையலாம்.
இவ்வாறு அண்மையில் என் கண்ணில் பட்ட ஒரு மாத இதழின் அட்டைப்படத்தில் மறைபொருள் பல உள்ளதை என்னால் உணர முடிந்தது.
( படத்தை அழுத்துவதன் மூலம் மிகப் பெரிய படத்தை நீங்கள் பார்வையிடமுடியும்.)
இவ் இதழின் அட்டைப் படத்தில் காணப்படும் வாசகங்கள், இதழின் தலைப்பு, இதழின் பெருமை, புகைப்படம் ஆகிய விடயங்களைக் கொண்டு வாசகர்கள் உணரக்கூடிய மறை பொருள் யாவை.
மிகச் சிறந்ததும், மிகச் சரியானதுமான மறைபொருளை உணர்த்தும் வாசகருக்கு, விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள, 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பட்டியலில் இருந்து அவர் விரும்பும் புத்தகங்கள் இரண்டினை வழங்கவுள்ளோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக