1.முடிந்து போன அமெரிக்க கற்பனைகள்
இந்தியாவில் படித்த, நகர்ப்புற, மத்தியதர வர்க்கத்தில் பிறந்த இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அமெரிக்காவின் இதழ்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், இணையப் பக்கங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள் மேற்படிப்பிற்கும் வேலைகளுக்குமான வாய்ப்புகள் எனப் பல வாய்க்கால்கள் மூலம் அமெரிக்காவைப் பற்றிய வெவ்வேறு விதமான சித்திரங்கள் எழுப்பப்பட்டிடுக்கின்றன. அவை எவ்வளவு தூரம் மிகைப்படுத்தப்பட்டவை, ஒருசார்பானவை என்பதை அங்கு ஒரு நடை போய் வந்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் ஒரு எழுத்தாளராக, சமூக ஜீவியாக, ஆதிக்க மனோபாவங்களுகு எதிராகப் போராடுவதைத் தன் கடமையாகக் கருதும் பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் அங்கு சென்று, சில மாதங்கள் தங்கித் திரும்பும் போது கொண்டு வருகின்ற சித்திரங்கள் பிக்சர் போஸ்கார்டுகளாக இருப்பதில்லை. அவை அந்தச் சமூகத்தை, அந்த தேசத்தின் ஆளுகையை (Governance) ஊடுருவிப் பார்க்கின்ற வருடி உணர்ந்த அறிக்கைகளாக (Scan Report) நமக்குக் கிடைக்கின்றன.
- மாலன் -
விலை : 80.00 In Rs
பக்கங்கள் : 168
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பதிப்பகம் : தோழமை
* * * * *
2.அரவாணிகள்
ஆண்களாலும் பெண்களாலும் உற்றார் உறவினர்களாலும் குடும்பத்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தாலும் துரத்தியடிக்கப்பட்டு அகதிகளாக அநாதைகளாக அரவாணிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகத்தின் பொதுத் தளத்திலிருந்து வெளித் தள்ளப்பட்டு மிக மிகக் கீழ்மைப் படுத்மதப்பட்ட விளிம்பு நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அரவாணிகள் பெண்ணைப்போலவும் ஆணைப்போலவும் மனிதர்கள்தான் என்ற புரிதலை இந்தச் சமூகம்
பெற்றிருக்கவில்லை.
வெகுவாக கொணரப்பட்ட பெண் மய்யச் சிந்தனைகளும் தலித் மய்யச் சிந்தனைகளும் அவர்களைக் குறித்த தவறான மதிப்பீடுகளை விளக்கச் செய்திருப்பதோடு அவர்களின் விடுதலைச் செயற்பாடுகளையும் திவிரப்படுத்தியுள்ளன. அதேபோல் அரவாணிகள் மய்யமிட்ட சிந்தனைகளை பொதுத் தளம் நோக்கி வெகுவாகக் கொணரப்படும்போதுதான்
அரவாணிகள் குறித்த தவறான புரிதல்களை விளக்கவும் அரவாணிகளின் விடுதலை செயல்பாடுகளை தீவிரப்படுத்தவும் முடியும். அந்த வகையில் அரவாணிகளாலும் அரவாணி அல்லாத சமூக செயல்பாட்டாளர்களாலும் அரவாணி மய்யமிட்ட சிந்தனைகள் வெளிக் கொணரப்பட்டுவருகின்றன.
விலை : 175.00 In Rs
பக்கங்கள் : 368
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை
* * * * *
3.பாரதி - ஒரு சமூகவியல் பார்வை
இந்நூல் பாரதியார் பற்றியும், பாரதி ஆய்வு பற்றியும் சில அடிப்படையான பிரச்சனைகளைக் கிளப்புகின்றது.முக்கியமாக, வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் பாரதி அணுகப்படுகின்ற பொழுதும் தெளிவுப்படுத்துகின்ற பொழுதும் ஏற்படும் ஆய்வுச் சிக்கல்கள் பிரக்ஞை பூர்வமாகப் புலப்படுகின்றது. பாரதியின் மதக் கோட்பாடுகள், மார்க்சியப் பரிச்சயமின்மை ஆகியவற்றை இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. பாரதி பற்றிய ஆய்விற்கு இந்நூல் முக்கியப் பங்களிப்பு. வருகின்ற சந்ததிக்கு ஒரு மைல் கல்.
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர்கள் : பெ.மணியரசன், அ.மார்க்ஸ்
பதிப்பகம் : தோழமை
* * * * *
4.மரணம் - என் தேசத்தின் உயிர்
புலம்பெயர் ஈழத்து அறிவுஜீவிப் படைப்பாளிகளில் பலர் ஈழப் போர்ச் சூழல் குறித்த அவநம்பிக்கைகளையும், அவதூறான மதிப்பீடுகளையும் பரப்பி வருகின்றனர். ஆனால் இனியன் கவிதைகள் நம்பிக்கை குறித்துப் பேசுகின்றன. உண்மையைப் பேசுகின்றன. இன்றைய போர்ச் சூழலிலும் அயலகச் சூழலிலும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் என்னவாக இருக்கிறதோ அவ்வாழ்வியலைத்தான் இனியன் கவிதைகளாக்கியிருக்கிறார்.
விலை : 45.00 In Rs
பக்கங்கள் : 72
எழுத்தாளர் : இனியன்
பதிப்பகம் : தோழமை
* * * * *
5.காற்றின் பக்கங்கள்
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், திரைப்படம், உக்கிரமான நிகழ்வுகள் என்று பல்வேறு சமகாலத்தியச் செயல்பாடுகளை - ஆரவாரமில்லாத நடையில் ஆனால் உண்மை சார்ந்த பாசாங்கற்ற மொழியில் கேள்விகளை எழுப்புகின்றது மணாவின் "காற்றின் பக்கங்கள்" கட்டுரைத் தொகுப்பு.
விலை : 120.00 In Rs
பக்கங்கள் : 224
கட்டுரையாளர் : மணா
பதிப்பகம் : தோழமை
* * * * *
6.மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
பழ.நெடுமாறன் நேர்காணல்
தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன் அவர்களின் தேர்காணல்களின் பெரும் பகுதி புதிய பார்வையின் இரு இதழ்களில் தொடர்ந்து வெளியானது. அதையடுத்து மேலும் அவருடன் தனி அமர்வாக எடுக்கப்ட்ட நேர்காணலும் இணைந்து இத்தொகுப்பில் முழுமையாகத் தரப்பட்டுபட்டிருக்கிறது.
விலை : 50.00 In Rs
பக்கங்கள் : 96
நேர்காணல் : மணா
பதிப்பகம் : தோழமை
* * * * *
7.வசந்த காலத்திலே..... ஜார்ஜி குலியா
(Georgij Dmitrijevič Gulia)
மாக்ஸிம் கார்க்கி மிக நன்றாகச் சொன்னார். சோவியத் இலக்கியம் மருத்துவச்சியாகவும், கல்லறை தோண்டுபவனாகவும் ஒருங்கே வேலை செய்கின்றது என்று. ஆம் புதிய மனிதனை சிருஷ்டிக்க உதவுவதும், புதிய சமுதாயத்தைச் சமைப்பதில் மக்களின் நல்வாழ்விற்குத் தடையாக உள்ள எல்லாவற்றையும் அழிப்பதும்தான் சோவித் இலக்கியத்தின் இலட்சியம்.
ஜார்ஜி குலியாவின் இந்த நாவலை வாசியுங்கள், கார்கி கூறியது சரிதானா என்று சிந்தியுங்கள்.
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 120
தமிழில் : தி.க.சி
பதிப்பகம் : தோழமை
* * * * *
8.ஒரு கோப்பை தண்ணீர் த்துதவமும் காதலற்ற முத்தங்களும்பெண் விடுதலை குறித்த மார்க்சியப் பார்வைகள்
ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ளாமல், அச்சமூக மனிதர்களின் விடுதலையை வென்றெடுக்க முடியாது என்ற இயங்கியல் பார்வை பெண் விடுதலைச் செயற்பாட்டிற்கும் பொருந்தக் கூடியது. அவ்வகையில் சமூகத்தில் பெண்களின் தாழ் நிலைக்குக் காரணமானவற்றையும், அத்தாழ்நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கருத்தாடல்கள் பலராலும் பரவலாக முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும் மார்க்சியம்தான் பெண் விடுதலை குறித்த இயங்கியல் பார்வையைக் கொண்டிருக்கிறது.
பெண் விடுதலை குறித்த மாரக்சிய கருத்தாடல்கள் இனைறைய சமூகத் தேவையாக அமைந்திருக்கின்றன. அவை பெண் விடுதலையின் சரியான திசைவழியை அடையாளப்படுத்தும் அதேவேளையில் இன்றைக்கும் பரவலாகப் பேசப்படும் நவீன வகையிலான விடுதலைச் சிந்தனைப்பாடுகளை மார்க்சியப் பார்வையில் புரிந்து கொள்வதற்கும் துணை செய்கின்றன.
அந்த வகையில் லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் போன்றவர்களால் பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
பகிர்தலுக்கு நன்றி விருபா.
....
இயலுமாயின் தைமாதத்தில் சென்னையில் நடக்கும் புத்தகக்கண்காட்சியை முன்னிட்டு பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களின் முழுப்பட்டியலையும் பதிவிக்க முடியுமெனில் -தொலைவிலிருக்கும் எங்களைப் போன்றோர்களுக்கு- புது நூல்கள் குறித்தறிய உதவியாக இருக்கும். நன்றி.
\\முடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.\\
Please visit
2008 Book Fair
கருத்துரையிடுக