1084 ன் அம்மா
வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட மேல்தட்டு குடும்பத்து தாய், அந்த மூடச்சம்பிரதாயங்களையும், வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவர்களுக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்படட நாவல்.
ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னட, தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வங்கத்தில் 12 பதிப்புகள் வந்துள்ள இந்நாவல் இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த நிகலானியின் இயக்கத்தில் "ஹஜார் சௌராஸிகீமா" என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
விலை : 75.00
பக்கங்கள் : 152
பதிப்பகம் : பரிசல்
* * * * * * * * * * * *
கோபுரத் தற்கொலைகள்
தமிழ்நாட்டின் நிறுவன சமயங்களான சைவம், வைணவம் என்ற இரண்டும் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள மேற்கொண்ட செயல் முறைகளையும், இச்சமயங்களுக்குள் நிகழ்ந்த உள் முரண்பாடுகளையும் அவை வெளிப்பட்ட முறையையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பதிவு செய்துள்ளன.
ஆ.சிவசுப்பிரமணியன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
விலை : 50.00
பக்கங்கள் : 104
பதிப்பகம் : பரிசல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
நல்ல பதிவு வாங்க முயற்சி செய்கிறேன்
நன்றி
கருத்துரையிடுக