இந்த விவாதங்களில் வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைக்கப்போகிறது?
தோல்வியடைபவருக்கு என்ன கிடைக்கப் போகிறது?
ஒரு கோப்பை தேனீரும் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு அற்ப சந்தோசம். அவ்வளவுதான்.
சுய சிந்தனையுள்ளவர்களாக, பகுத்தறிவுள்ளவர்களாக நாம் நடப்போமே.
இன்று தமிழில் அல்லது தமிழ் நிலத்தில் இன்னமும் நிரப்பப்படாத பல தகவல் தொழில் நுட்ப தேவைகள் உள்ளன. எண்ணற்ற பல வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் முயற்சியில் இவ்வாறு வீணாகச் செலவாகும் மணித்துளிகளை செலவிடும் வேளைகளில் அவை தமிழ் சமூகத்திற்கு ஒரளவேனும் பயனுள்ள ஒன்றாக மாறலாம்.
யாரப்பா நீ இதைச் சொல்வதற்கு என்று கேட்பவர்களுக்காக...........
2005 இல் இப்படித்தான் வலைப்பதிவுகளில் ஈர்க்கப்பட்டு, இழுக்கப்பட்டு, வாதங்களில் ஈடுபட்டு எனது நேரத்தை வீணடித்துக்கொண்டிருந்த வேளைகளில், என் மனதில் தோன்றிய கேள்வி
இறுதியில் மிஞ்சப்போவது என்ன?......
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை......
ஒன்றுமேயில்லை.................
இதனை உணர்ந்தவுடன், வெட்டியான வலைப்பதிவை நிறுத்தி, தொடங்கியதுதான் விருபா இணைய தளம். இத்தளத்தின் மூலம் பல்வேறு கற்றவர்களின் நட்பும் பாரட்டும் கிடைத்திருக்கிறது. ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மன நிறைவு கிடைத்திருக்கிறது.
ஆக, கண் முன்னே உள்ள எடுத்துக்காட்டு விருபா தளம்.
அன்று என் சிந்தனையில் தோன்றியது போன்று ஏதாவது ஒரு புதிய எண்ணத்தை உங்கள் நுட்ப அறிவால் கொண்டுவர முடியாதா என்ன?
தமிழிற்கு அல்லது தமிழ் நிலத்திற்குத் தேவையானவற்றை மேற்குலகம் செய்து தரும்வரை காத்திருக்காமல், புதிய கருத்தாக்கங்களை மேற்குலகிற்கு நாம் தருகின்ற அளவிற்கு வளர வேண்டாமா?
சிந்திப்போம், செயற்படுவோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக