கவிதாசரண் - இதழாய் ஓர் எழுத்தியக்கம்.
சென்னை திருவெற்றியூரிலிருந்து வெளிவரும் இதழ் "கவிதாசரண்". இவ்விதழ் கடந்த 17 ஆண்டுகளாக வெளிவருகிறது. ஆரம்ப நாட்களில் படைப்பிலக்கிய மாத இதழாக வெளிவந்த கவிதாசரண், நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களைக் கண்டு தற்பொழுது நுண் அரசியல் பேசும் இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
இதன் ஆசிரியராக உள்ள கவிதாசரண் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார்.
இதழ் வெளியீடுடன் நின்றுவிடாது அரிய நூல்களை பதிப்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் கவிதாசரண். தற்பொழுது கால்டுவெல்லின் (Rt. Rev.Robert Caldwell) "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" நூலை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன் சிறப்புக்கள்:
*1875 இற்குப் பின்னர் முதல் முறையாக அடித்தல் திருத்தல் ஏதுமின்றி அப்படியே வெளியிடப்படுகிறது.
*உங்கள் மொழியைப்பற்றி உங்களுக்கொரு கர்வம் இருக்குமெனில் இந்த நூல் உங்கள் கைகளில் இருக் வேண்டும்.
*செம்மையாகத் தமிழை சேகரம் பண்ணுவோருக்கு இதுவே முன்னுரையும் மூலதனமும்.
*சிறுசிறு கருத்துச் சம்சயங்களைக்கூட விட்டுவிடாமல் கோர்த்துக் கோர்த்துக் குருக்கத்திக் கொடிபோல வளர்ந்து செல்லும் கால்டுவெல்லின் கவித்துவ மொழியழகு நூலின் அருஞ்செல்வம்.
864 பக்கங்களுடன் வெளிவரவுள்ள இந்நூலின் முன் வெளியீட்டு விலை ரூபா 360.00 அல்லது $ 16.00 ஆகும்.
A Comparative Grammar of the DRAVIDIAN
or
South Indian Family of Languages
by the
Rt. Rev.Robert Caldwell, D.D., LL.D.
Honorary Member of The Royal Asiatic Society,
Fellow Of The University Of Madras
Bishop In Tinnavelly
Southern India
(Full Calico Binding - Abooklet of critical Essays of rare contents supplimentened)
வாசகர்கள் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் இதனைப் பெறுவதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
கவிதாசரண்
31, டி.கே.எஸ் நகர் , சென்னை 600019.
தொலைபேசி : 91 44 25740199 அல்லது 91 9884950541
கவிதாசரண்
2007-07-10 by விருபா - Viruba |
0
கருத்துகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக