இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நரசய்யா அவர்கள், தமிழ் நாட்டின் தலைநகராமாக தற்போது விளங்கும் சென்னை நகரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். 1600 முதல் 1947 வரையிலான பல நிகழ்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. "மதராசபட்டினம்" (ஒரு நகரத்தின் கதை 1600 - 1947) என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகம் விரைவில் வெளியாவுள்ளது.
A4 அளவு தாளில் 250 பக்கங்களுடன், தரமான தாள்களுடன், நேர்த்தியான கட்டமைப்புடன் இப்புத்தகம் அமையவுள்ளது.
சென்னை தினமாக கொண்டாடப்படும் ஆகஸ்ட்டு 22 அன்று (2006.08.22) இதனை வெளியிடுவதென்று விருப்பத்துடன் இதனை எழுதத் தொடங்கிய எழுத்தாளர் நரசய்யாவின் தேட்டையில் கிடைத்த அளவிற்கதிகமான தகவல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதியதில் தாமதமாகியதாக கூறினார்.
"கடல்வழி வணிகம்" புத்தகத்தை பதிப்பித்த பழனிப்பா பிரதர்ஸ் நிறுவனமே இப்புதிய புத்தகத்தையும் வெளியிடவுள்ளது.