அகிலனின் "தனிமையின் நிழல் குடை"
2008-03-01 by விருபா - Viruba |
2
கருத்துகள்
தமிழ் வலைப்பதிவாளர்களின் இணைய எழுத்துக்கள் அச்சு வாகனமேறி புத்தக வடிவில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் - த.அகிலன். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, குறும்பட, ஆவணப்பட ஆர்வலரான அகிலன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது சென்னையில்.
"கனவுகளின் தொலைவு" என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வரும் இவரின் முதலாவது கவிதை நூல் நேர்நிரை மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
"எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது" என்று கவித்துவம் பேசும் அகிலன் தனது நூலிற்கு "தனிமையின் நிழல் குடை" என பெயரிட்டுள்ளார்.
"நம்மைக் கடந்த நிலையில் வலிய காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பெருஞ்சுழலாக அது நம்மை அதற்குள் இழுத்துப் போட்டு விடுகின்றது. அகிலன் இதெல்லாவற்றையும் சரியாகவே அடையாளப்படுத்துகிறார். அவருடைய உலகம் கசப்புகளாலும் நிராகரிப்புகளாலும் ஆனவை. கனிவும் கருணையும் அன்பும் நிரம்பிய இதயத்தை நிராகரிக்கும் காலம் விரிந்திருப்பதை அகிலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கவிதைகள் கொந்தளிப்பாகவே இருக்கின்றன. அகிலனின் மொழிதல் எளிமையும் தீவிரமும் கூடியது" என்று இவருடைய புத்தகத்திற்கான அறிமுகத்தை தந்திருப்பவர் கருணாகரன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அகிலனுக்கு வாழ்த்துக்கள்.
அகிலன் எனும் பெயர் எழுத்துலகில், புதிய பரிமாணத்தில் மீளவும் உச்சரிக்கப்படும் சாத்தியங்கள் இவர் எழுத்துக்களில் தெரிகிறது. அகிலனுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணிக்குப் பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக