1.தமிழர் வரலாறு (கி.பி 600 வரை)
"தமிழர் வரலாறு" என்னும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய ( History Of The Tamils ) நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளை சுருக்கித் தந்தும், அறிஞர் பி.இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். மூலநூல் ஆங்கிலத்தில் இருப்பதனால், தமிழ் ஆய்வாளர்கள் தாம் ஆய்வு செய்யும் போது, இத்தகைய நூல்களையும் கற்றறிந்து, தக்க சான்றுகளுடன் எழுதாமல் தவிர்த்து விடுகின்றனர்.
இக்குறையைப் போக்கும் வகையில், தக்கார் ஒருவரைக்கொண்டு தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 270
விலை : 185.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
2.தொன்மைச் செம்மொழி தமிழ்
தமிழ், முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும் வகையில் அதன் தொன்மையையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கியுள்ள இந்நூல், செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களைத் தாங்கியுள்ளது.
நூலாசிரியர் பி.இராமநாதன் மொழியல், வரலாறு, அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்.
எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
3.நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்
நா.மு.வே.நாட்டார் அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களும் 24 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது
எழுத்தாளர் : நா.மு.வேங்கடசாமி நாட்டார்
விலை : 4800.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
மிகவும் அரும்பாடு பட்டு
பாவாணர் தொகுப்புக்கள்,
தொல்காப்பியத் தொகுப்புக்கள்
போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.
தாங்கள் படித்தக் கல்லூரி நூலகங்கள்
மற்றும் வெளி நாட்டு நூலகங்களுக்கு
அன்பளிப்பு வழங்குவது பயன் தரும்.
கருத்துரையிடுக