1.தீண்டப்படாத நூல்கள்
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அயோத்திதாசர், ஜி.அப்பாத்துரையார் போன்ற பவுத்த மறுமலர்ச்சி முன்னோடிகள் உருவாக்கிய நவீன தமிழ் அறிவியக்கம் பற்றியும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற தலித் தலைவர்களின் பதிப்புப் பணிகள் பற்றியும் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
எழுத்தாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்
பக்கம் : 104
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
2.எசப்பாட்டு
இந்தியா டுடே இதழில் அரசியல், சமூகம், ஊடகம் போன்ற தளங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை விமர்சனபூர்வமாக தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கும் அதன் தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜனின் 60 பத்திகளின் தொகுப்பு. பரபரப்பான சூழல்கள் மீதான பாராபட்சமில்லாத உடனடி விமர்சனங்கள்.
எழுத்தாளர் : ஆனந்த் நடராஜன்
பக்கம் : 136
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
3.கல்யாண்ஜி : தேர்ந்தெடுக்கப்ட்ட கவிதைகள்
கடந்த 30 ஆண்டுகளாக தான் எழுதியுள்ள கவிதைகளில் 46 கவிதைகளை தேர்வு செய்து அவற்றைத் தன் சொந்தக் குரலில் வாசித்திருக்கிறார் கல்யாண்ஜி. இந்த ஒலிப் புத்தகத்துடன் இணைந்து வெளிவரும் கல்யாண்ஜி : தேர்ந்தெடுக்கப்ட்ட கவிதைகள் என்ற நூலில் அவரது புகைப்படங்கள் கவிதைகளுக்கு அழகூட்டுகின்றன.
எழுத்தாளர் : கல்யாண்ஜி
பக்கம் : 64
விலை : 45.00 In Rs & ஒலிப்புத்தகம் விலை : 90.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
4.காஷ்மீர்
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, ரத்தமும் ரணகளமுமாக சிவப்பேறிக் கிடக்கும் காஷ்மீர் வரலாற்றை மிகவும் விரிவாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியவரும் வணிக இதழில் தடம் பதித்தவருமான சந்திரன். காஷ்மீர் மக்களின் சிதைந்த கனவுகளையும் காஷமீர்ப் பிரச்சனையில் இந்தியா, பாகிஸ்தான்,
போராளிகள் என மூன்று தரப்பினரும் ஆடும் ஆடு புலி ஆட்டத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கிறார்.
எழுத்தாளர் : சந்திரன்
பக்கம் : 384
விலை : 195.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
5.மேன்ஷன் கவிதைகள்
நவீன தமிழ்க கவிதையுலகில் முக்கியமானவராக வளர்ந்துவரும் பவுத்த அய்யனாரின் கவிதைத் தொகுப்பின் இரண்டாவது பதிப்பு. ஒரு பெருநகர மேன்ஷன் வாழ்வைப் பற்றிய கவிதைகள் - அவரது வித்தியாசமான பதிவுகளுடனும் தீற்றல்களுடனும்.
எழுத்தாளர் : பவுத்த அய்யனார்
பக்கம் : 64
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
6.முட்டம்
தமிழ் வலைப்பதிவுலகில் பிரபலமாக எழுதிவரும் சிறில் அலெக்ஸின் முட்டம் : அலைகள், பாறைகள், மணல்மேடுகள் ஒரு சுவாரஸ்யமான படைப்பு. தான் பிறந்த மண்ணைப் பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் தம் ஒவ்வொருவரையும் அவரவர் இளம் பருவத்துக்கு அழைத்துச் சென்றுவிடக்கூடியவை. அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றும் சிறிலிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் இனி.
எழுத்தாளர் : சிறில் அலெக்ஸ்
பக்கம் : 64
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
7.ரஷோமான்
அகிரா குரோசவாவின் ரஷோமானின் திரைக்கதையின் திருத்திய பதிப்பு இது. திரைப்படம், தொலைக்காட்சி நாடகம்,மொழிபெயர்ப்பு என பல தளங்களில் செயற்பட்டுவரும் தி.சு.சதாசிவம் இதை ஒரு குரோசவா திரட்டாகவே தொகுத்திருக்கிறார். குரோசவா பற்றியும் அவரது பிற முக்கிய படங்கள் பற்றியும் இடம் பெற்றுள்ள விரிவான தகவல்கள்
இந்தப் புத்தகத்தின் பிரத்யேக அம்சமாகும்.
எழுத்தாளர் : தி.சு.சதாசிவம்
பக்கம் : 152
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
* * * * * * * * * *
8.கொதிக்கும் பூமி
இணைறைய உலகின் ஹாட் டாபிக் குளோபல் வார்மிங். அந்தப் பிரச்சனையை ஆதியோடு அந்தமாக விலாவாரியாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர். ஏகப்பட்ட புள்ளி விபரங்களோடு புவி வெப்பமடைதல்பிரச்சனையை எளிமையாகப் புரியவைத்திருக்கும் பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் தீர்வுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
எழுத்தாளர் : ஆதி வள்ளியப்பன்
பக்கம் : 104
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக