- தமிழாய்வை மேம்படுத்துதல்.
- தமிழ் இலக்கியங்களைப் பரப்பல்.
- தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு சார்ந்த மரபுச்செல்வங்களைப் பரப்பல்.
- இந்நோக்கில் இதழ், நூல் முதலியன வெளியிடல்.
- கருத்தரங்கு, கவியரங்கு முதலியன் நடத்தல்.
- பேச்சு, எழுத்துத் திறன்களை இளைஞர்களிடையே வளர்த்தல்.
- தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு நல்கிய தக்க அறிஞர்களுக்குப் பட்டமளித்துப் பாராட்டல்.
- மாணவர்களுக்கு கல்வி உதவி நல்கல்.
- இளைஞர்களுக்கு தமிழ் உணர்வும் அறிவும் ஊட்டல்.
- நூல் வெளியீட்டிற்கு உதவல்.
மேற்கூறியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு, சென்னைப் பலைகலைக் கழகத்தின் தமிழ் மொழித்துறையின் கீழ் இயங்கும், சென்னைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள, பதிவு பெற்ற நிறுவனமான தமிழாய்வு மன்றத்தின் ஆதரவுடன் "நோக்கு" என்னும் காலாண்டு இதழானது தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் இதழ் சித்திரை மாதத்தில் வெளிவந்துள்ளது.
மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, மெய்யியல், அறிவியல் சார் பன்னாட்டுக் காலாண்டிதழாக இவ்விதழ் அமையும்.
இவ்விதழின் ஆசிரியராக ஈரோடு தமிழன்பன் அவர்களும், இணையாசிரியராக (மதிப்புறு நிலை) வ.ஜெயதேவன் அவர்களும் பொறுப்பேற்றுளனர்.
சிலம்பொலி சு.செல்லப்பன், கா.செல்லப்பன், இரா இளவரசு, பொன் செல்வகணபதி, நா.முத்துக்குமார், பத்மாவதி விவேகானந்தன், இரா.பிரேமா, பா.இரவிக்குமார் ஆகிய தமிழ் அறிஞர்கள் ஆசிரியர் குழுவில் இணைந்து இவ்விதழின் வெளியீட்டில் பங்கு பெறுகிறார்கள்.
இவ்விதழின் மேம்பாட்டிற்கான அறிவுரைக் குழுவில் பின்வருவோர் இணைந்துள்ளனர். அ.அறிவுநம்பி, சி.மா.இரவிச்சந்திரன், இராதா செல்லப்பன், ஆறு.இராமநாதன், கம்பம் சாகுல் அமீது, தி.கமலி, கி.நாச்சிமுத்து, க.பஞ்சாங்கம், துரை.பட்டாபிராமன், தொ.பரமசிவம், பாலா அ.பிச்சை, இ.மறைமலை, இரா.மோகன், பெ.மாதையன், டேனியல் சங்கீதம்.
இவ்விதழின் பதிப்பாளர் இரா.பன்னிருகைவடிவேலன் ஆவார். பதிப்புக்குழுவில் ப.குமார், வை.சிவநேசன், கோ.வெற்றிச்செல்வி, கி.காவேரி, அ.செந்தில் நாராயணன், கு.சுபாஷினி, ஏ.கோதண்டராமன் ஆகியோர் செயலாற்றுகின்றனர். பதிப்புதவி - விழிகள் தி.நடராசன்.
"நோக்கு" 2007 ஏப்பிரல் இதழின் உள்ளடக்க விபரங்கள் இங்கே கொடுக்கப்படட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக