நாம் ஏற்கனவே www.விருபா.com என்ற இணைய முகவரியை பதிவு செய்து பயன்படுத்தினோம். அதனை உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறிய நிலையில் வேறு ஒருவர் அம்முகவரியினை பதிவு செய்துவிட்ட காரணத்தினால் தற்சமயம் www.நூல்தேட்டம்.com என்ற புதிய தமிழ் முகவரியை பதிவு செய்துள்ளோம்.
தமிழில் வலைப்பதிபவர்களுக்கு Unicode எப்படி இன்றியமையாததாக உள்ளதோ, அதே போல் தமிழில் இணைய முகவரியை பதிவு செய்து இயங்கவைப்பதற்கு Punycode என்னும் ஒரு மாற்றியின் தேவை உள்ளது. உங்களுடைய கணனியில் தமிழில் domain address or URL தெரிவதற்கு நீங்கள் http://www.idnnow.com/index.jsp என்ற இணைய முகவரியிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இணைய முகவரியை அமைத்துக் கொள்ள அனுமதி தரும் ICANN அமைப்பு முற்றிலுமாக தமிழில் இணைய முகவரியை அமைத்துக் கொள்ள அனுமதியை இன்னமும் வழங்கவில்லை.
இன்று முதல் www.நூல்தேட்டம்.com இணைய முகவரியிலும் எமது தளம் இயங்கும் என்ற தகவலை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் எமது தளத்தின் புதிய பாகம் (web 2.0 version) இம்முகவரியினூடாக வெளியிடப்படவுள்ளது.
தொடர்புடைய சுட்டி - தமிழில் இணைய முகவரி
1 கருத்துகள்:
நூல்தேட்டம் என்ற சொல் ஈழத்தின் மூத்த நூலகர் என்.செல்வராஜா அவர்களுடைய முயற்சியின் அடையாளமாக இருப்பதால், தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும் நோக்கில், நாம் www.நூல்தேட்டம்.com எனும் இணைய முகவரியை கைவிட்டு, www.நூற்றொகை.com எனும் புதிய முகவரியில் இயங்கி வருகிறோம்
கருத்துரையிடுக