பல ஆண்டுகளாக பல்வேறு அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்த பெருமை மிக்க திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக உரிமையாளர் தாமரைச்செல்வர் வ.சுப்பையா பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த பெருமைக்குரிய செந்தமிழ்த் திங்கள் இதழ் செந்தமிழ்ச் செல்வி ஆகும்.
தமிழகத்தில் வெளிவரும் இதழ்களில் அதிக வயதுடைய இதழ் இதுவேயாகும்.
தற்பொழுது வ.சுப்பையா பிள்ளை அவர்களின் மருமகனுமமாகிய இரா.முத்துக்குமாரசுவாமி அவர்கள் செந்தமிழ்ச் செல்வியின் ஆசிரியராக இருந்து இதழினை தரம்குறையாமல் சிறப்பாக வெளியிடுகின்றார்.
பொற்கோ என்று அன்புடன் அழைக்கப்படும் முனைவர் பொன்.கோதண்டராமன்,
முனைவர் தமிழண்ணல்,
முனைவர் க.ப.அறவாணன்,
முனைவர் கு.சுந்தரமூர்த்தி
இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரன்,
முனைவர் கவிமாமணி வேலூர் ம.நாராயணன்,
டாக்டர் புரட்சிதாசன்
ஆகியோரின் வழிகாட்டுதலில் இவ்விதழ் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.
3 கருத்துகள்:
நல்ல பதிவு!
இந்த இதழை பெறுவதற்கான முகவரி மற்றும் சந்தா விபரம் இருந்தால் கொடுங்களேன்..
நன்றி
சிவபாலன் வருகைக்கு நன்றி,
இதழின் படத்தை அல்லது "செந்தமிழ்ச் செல்வி" என்ற இணைப்பை அழுத்தினால் வேண்டிய தகவல்கள் உள்ள எமது பிரதான தளத்திற்கு இட்டுச் செல்லும் அங்கு நீங்கள் விரும்பும் தகவல்கள் உள்ளது.
மிக அருமையான வலைதளம்.. மிகவும் உபயோகமாக இருக்கிறது.. என்னை வாசகராக பதிவு செய்துள்ளேன்.. நன்றி!!
தொடரட்டும் உங்கள் மேலான பணி!!
கருத்துரையிடுக