"ஈ" பிரச்சனைக்குரியதா?
2006-12-10 by விருபா - Viruba |
1 கருத்துகள்
எமது தளத்திலும் தீர்வு காணப்படமுடியாத பிரச்சனை என்றால் அது "ஈ" பிரச்சனைதான். சுந்தரவடிவேலும் அண்மையில் "ஈ" பற்றி ஒரு விளக்கம் கேட்டிருந்தார். சரி அது அச்சில்/வடிவத்தில் உள்ள பிரச்சனை என்றால், நாங்கள் பாதிக்கப்படுவது இணைய "ஈ" ஒழுங்காக வரிசையில் வர மறுக்கும் அதன் பிடிவாத குணத்தால்.
நாங்களும் எங்கள் தளத்தில் யாரையும் முன்னிலைப்படுத்தாமல் அகர வரிசையில் எல்லாவற்றையும் பட்டியலிட்டுள்ளோம். ஆனால் இந்த "ஈ" எங்களின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் தான் விரும்பும் இடத்தில் போய் நின்றுகொள்கிறது. பல தடவைகள் எங்கள் செயலியின் அகர வரிசை ஆணையை பல வடிவங்களில் மாற்றி அமைத்தாலும் "ஈ" சரிவர இயங்க மறுத்து தன் விருப்பப்படியே இயங்குகின்றது. அத்தோடு "ஈ" தன்னுடன் சேருபவர்களையும், உதாரணமாக "க" சேரும் போது உருவாகும் "கீ", "சீ",..... போன்றவர்களையும் கெடுக்கின்றது.
புத்தகங்களைத் தேடும் பகுதியிலும், வாசகர் கருத்துக்கள் பகுதியிலும் உள்ள இந்தப் பிரச்சனைக்கு யாரவது தீர்வு தருவீர்களா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
எனக்கு வெறும் கேள்வியாயிருந்த ஈ உங்களைத் தொந்தரவு செய்கிறது! என்னிடம் விடையில்லை. ஆனால் முனைவர் அருட்பெருங்கோ போன்றவர்கள் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு வைத்திருக்கலாம். விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.
கருத்துரையிடுக