அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் இதன் முதற்பிரதியை கவிஞர் த.பழமலய் அவர்கள் வெளியிட, கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிகழ்வில்,
சித்தன்
யாழூர் துரை
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
முனைவர் பா.ரவிக்குமார்
"புதிய பார்வை" இணையாசிரியர் மணா
கவிஞர் வைகைச் செல்வி
"நிழல்" ஆசிரியர் ப.திருநாவுக்கரசு
ஜெ.முனுசாமி
பொன்.இந்ர
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
ஒரு பதிப்பாளரின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இன்னொரு பதிப்பாளர் அழைக்கப்படுவதும், அதற்கு மற்றைய பதிப்பாளர் உடன்பட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பதுமான, ஒரு ஆரோக்கியமான விடயத்தை தொடக்கிவைத்த இரு பதிப்பாளர்களையும் நாம் பாராட்டுகிறோம்.
இவ் விழாவிற்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், போர் மேகங்கள் சூழ்ந்த யாழ் மண்ணில் இருந்து விழாவின் நாயகனாக செங்கை ஆழியான் சென்னை வந்து விழாவில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
தொடர்புடைய சுட்டிகள் :
http://viruba.blogspot.com/2006/07/blog-post_20.html
http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=58
0 கருத்துகள்:
கருத்துரையிடுக