கரிசல் இலக்கியத்தின் பிதாமகனும், இன்றைய மூத்த எழுத்தாளருமான கி.ராஜநாராயணன் அவர்களால் கதை சொல்லி 1996 இல் ஆரம்பிக்கப்பட்டது.
கரிசல் மண்ணில் நான்கு மாதப் பயிரிற்கு கந்தாயப் பயிர் என்று வழங்கப்படுவதைப் போல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் கதைசொல்லி ஒரு கந்தாய இதழ் ஆகும்.கிராமியப் பரப்பிற்கு எடுத்துச் செல்லும் அரிய இதழாக இது விழங்குகிறது.
கி.ராஜநாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கழனியூரான் பொறுப்பாசிரியராக இருந்து இவ்விதழ் வெளிவருகிறது.
இந்த இதழிற்கு மூத்த இலக்கிய கர்த்தாவான தி.க.சி, ஆய்வாளர் வல்லிக்கணண்ணன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், இரசிகமணி டி.கே.சி இன் பேரன் தீப.நடராசன், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுப.கோ.நாராயணசாமி, ஜெயபாரதன், கிருஷி போன்றோருடைய ஆலோசனைகளிலும், பங்களிப்பிலும் இவ்விதழ் மிளிர்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக