தமிழ்ச் சான்றோர்களின் படைப்புக்கள், கருத்துக்கள், அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில், தமிழக அரசு அவர்களுடைய புத்தகங்களை அரசுடமையாக்கி வருகின்றது. 1967 இல் மகாகவி பாரதியின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்ட நிகழ்வுடன் தொடங்கிய இம்முயற்சி இன்றும் நடைமுறையில் உள்ளது. புத்தகங்களுக்குரிய பதிப்புரிமைக்காக, அரசு பரிவுத் தொகை வழங்குவதால், அக்குறிப்பிட்ட தமிழ்ச் சான்றோரின் மரபுரிமையாளர்கள் பலன் பெறுகின்றார்கள், அதே நேரம் அரசுடமையாக்கப்பட்ட சான்றோர்களின் புத்தகங்களைப் பல்வேறு பதிப்பகங்களும் பதிப்பிப்பதால் அவை பொதுமக்களுக்கு இலகுவில் கிடைக்கின்றன.
2008 - 2009 நிதியாண்டில் தமிழக அரசு 27 தமிழறிஞர்களின் புத்தகங்களை அரசுடமையாக்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு 1967 முதல் 2008 வரையில் 94 அறிஞர்களின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
விருபா இணைய தளத்தில் அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களுக்குரிய எழுத்தாளர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
உலகப் புத்தக தின சிறப்பு மலர்
2008-05-04 by விருபா - Viruba |
0
கருத்துகள்
பாரதி புத்தகாலயம் உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. அப்பண்ணசாமி தலைமையில் பலரின் கூட்டு உழைப்பில், தமிழில் வாசிக்கப்பட வேண்டிய 5000 புத்தகங்களின் பட்டியல்களுடன் மலர் வெளிவந்துள்ளது.
உலகைக் குலுக்கிய புத்தகங்கள்
கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி! - இரா.ஜவகர்
கார்ல் மார்க்ஸின் மூலதனம் - வெ.பா.ஆத்ரேயா
உயிரினங்களின் தோற்றம் - சாமிக்கண்ணு
ரூசோவின் 'சமுதாய ஒப்பந்தம்' - தஞ்சை மருதவாணன்
வால்டேர் எழுத்து - தஞ்சை இரா.இரத்தினகிரி
இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல் - திருவேங்கடம்
'டாவின்சிப் புதிரும்' காலனித்துவக் கடவுளின் இறுதிச் சடங்கும் - இரா.நடராசன்
அரிஸ்டாட்டிலின் நிக்கோமாசின் எதிக்ஸ் - விடுதலை இராசேந்திரன்
தலைவர்களை வசீகரித்த புத்தகங்கள்
லெனினைக் கவர்ந்த ஜாக் லண்டனின் 'உயிராசை' - கிருஷி
நேருவை வசீகரம் செய்த கவிஞன் ராபர்ட் ஃப்ரோஸ்ட் - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
சுவாரஸ்யமான புத்தகங்கள்
உலகைச் சுற்றி 80 நாட்களில் - முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
ரிப் வேன் விங்கிள் - பெ.விஜயகுமார்
மதங்களைத் தெரிவோம்
விவிலியம் (பைபிள்) - ஆ.சிவசுப்பிரமணியம்
பகவத் கீதை - ந.முத்துமோகன்
குர்ஆன் - ஹெச்.ஜி.ரசூல்
தமிழ் வாசிப்பு
தொல்காப்பியம் - பா.ஜெய்கணேஷ்
சிலப்பதிகாரம் - ப.சரவணன்
திருக்குறள் - ஈரோடு தமிழன்பன்
வீரசோழியம் - கா.அய்யப்பன்
காந்தியம்
இந்திய சுயராஜ்ஜியம் - ராமாநுஜம்
நிலைத்த பொருளாதாரம் - க.பழனிதுரை
பொதுக் கட்டுரைகள்
சேக்ஸ்பியர் - சா.தேவதாஸ்
தென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக் வேண்டிய நூல்கள் - அமரந்தா
நவீன ஆபிரிக்க இலக்கிம் : ஒரு பருந்துப் பார்வை - ஜி.குப்புசாமி
நோபல் இலக்கியம் சில தகவல்கள் - சுகுமாரன்
தமிழில் மார்க்சிய செவ்விலக்கிய நூல்கள் - என்.குணசேகரன்
ரஸ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள் - தமிழ்மகன்
திராவிட இயக்கப் புத்தகங்கள் - க.திருநாவுக்கரசு
சங்க இலக்கிய வாசிப்பு - அ.சதீஷ்
தமிழில் வாசிக் வேண்டிய தலித் புத்தகங்கள் - அழகிய பெரியவன்
தமிழர்கள் வாசிக் வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள் - ஆ.செல்லபெருமாள்
தமிழர்கள் வாசிக் வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்த புத்தகங்கள் - கி.பார்த்திபராஜா
பெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள் - அனுராதா
இளைஞர்களுக்கான சில புத்தகங்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
'நம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்' - எஸ்.கண்ணன்
மேற்குறிப்பிட்ட கட்டுரைகளின் வழியே பல புத்தகங்கள் பற்றிய செய்திகள் ஒருங்கே குவிக்கப்ட்டுள்ளன. இவைதவிர தனியான புத்தகப் பட்டியல்களாக பின்வருவன தரப்பட்டுள்ளது.
தமிழில் வாசிக்க வேண்டியவை - 1
ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியிலில் பல்வேறு உப தலைப்புக்களில் புத்தகங்களின் தகவல்கள் தரப்பட்டுள்ளன. புத்தகத்தின் பெயர், அதனை எழுதியவர் பெயர், வெளியான நகரம், புத்தகம் வெளியான ஆண்டு போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தமிழில் வாசிக்க வேண்டியவை - 2
'உலக இலக்கியம்' என வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பட்டியலில் அரபி, ஆங்கிலம், இத்தாலி, கிரேக்கம், சிங்களம், சீனம், டேனிஷ், துருக்கி, நார்வேஜியன், பார்மியன், பல்கேரிய,பிரெஞ்சு, போலிஷ், யுகோஸ்லாவியா, ரஷியன், ருமேனியா, ஜப்பான், ஜெர்மன், லத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ், ஸ்பெயின் ஸ்பானிஷ், ஸ்விஸ், ஸ்வீடிஸ், ஹங்கேரி ஆகிய மொழிகளில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் கவிதை, தொகுப்பு, நாவல், நாடகம், சிறுகதை எனத் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலிலும் தமிழில் பதிப்பித்த பதிப்பகம், மொழி பெயர்த்தவர் பெயர், வெளியான நகரம், புத்தகம் வெளியான ஆண்டு மற்றும் மூல மொழியில் புத்தகத்தை எழுதியவரின் பெயர் போன்ற தகவல்கள் தரப்படுள்ளன.
ந.முருகேச பாண்டியன் தொகுத்த தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் என்ற புத்தகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட அட்டவணை என்ற அடிக்குறிப்பும் உள்ளது.
தமிழில் வாசிக்க வேண்டியவை - 3
கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூற்பட்டியிலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நூல் அட்டவணை என்ற அடிக் குறிப்புடன் உள்ள இப்பட்டியல் உப தலைப்புகளில் பல்வேறு நூல்களைப் பட்டியலிடுகிறது. புத்தகத்தின் பெயரும் எழுதியவரின் பெயரும் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக
மனிதனைத் தேடுகிறேன் - முடியரசன்
மேலதிக தகவல்களை, நாம் தேட வேண்டிய ஒரு அரைகுறைப் பட்டியல் என்றே இதனைக் கூறலாம். தவிரவும் இப்படியலில் கூறப்பட்டுள்ள புத்தகங்கள் மீண்டும் வருவதாகவும் உள்ளது.
பொதுவில் ஒரு தீவிர வாசகனுக்குத் துணைபுரியும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இம்மலரைப் பரிந்துரைக்கலாம்.
அரிதினும் அரிதான இப்பணியைச் செய்த குழுவினரையும், பாரதி புத்தகாலயத்தினையும் விருபா இணைய தளம் மனம் நிறைவுடன் பாராட்டுகிறது.
120 பக்கங்களுடன் 21*28 cm அளவு தாளில் வெளிவந்துள்ள இம்மலரின் விலை ரூ 60.00 மட்டுமே.
கிடைக்குமிடம் :
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை
தொலைபேசி - 044 - 24332924
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)