2006-08-31
இன்று உலக வலைப்பதிவுகள் தினம்
இன்று உலக வலைப்பதிவுகள் தினம், அனைத்து தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
வலைப்பதிவாளர் தினத்தின் சிறப்பாக 5 வலைப்பதிவுகள் அறிமுகப்படுத்தல் வேண்டும்.
1.http://www.venkatarangan.com/blog/default.aspx
2.http://www.fotothing.com/maiylah
3.http://laktek.blogspot.com
4.http://mazhalaitalk.blogspot.com
5.http://www.sailblogs.com
கடந்த வருடம் வலைப்பதிவாளர்கள் தினத்தைப்பற்றி பதிவு இட்ட மதி கந்தசாமி அவர்களுக்கு, எமது wordpress வலைப்பதிவின் template ஐ மேம்படுத்தி தந்தமைக்காக இன்று நன்றி கூற விரும்புகிறோம்.

2006-08-27
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
கலைமகள், கணையாழி, வீரகேசரி போன்ற இதழ்களில் பிரசுரமான, பரிசு பெற்ற செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற தலைப்பில் புதிய புத்தகமாக, எஸ்.பொ அவர்களின் மித்ர வெளியீடாக வருகிற வெள்ளிக்கிழமை (01.09.2006) அன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்படவுள்ளது.
அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் இதன் முதற்பிரதியை கவிஞர் த.பழமலய் அவர்கள் வெளியிட, கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிகழ்வில்,
சித்தன்
யாழூர் துரை
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
முனைவர் பா.ரவிக்குமார்
"புதிய பார்வை" இணையாசிரியர் மணா
கவிஞர் வைகைச் செல்வி
"நிழல்" ஆசிரியர் ப.திருநாவுக்கரசு
ஜெ.முனுசாமி
பொன்.இந்ர
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
ஒரு பதிப்பாளரின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இன்னொரு பதிப்பாளர் அழைக்கப்படுவதும், அதற்கு மற்றைய பதிப்பாளர் உடன்பட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பதுமான, ஒரு ஆரோக்கியமான விடயத்தை தொடக்கிவைத்த இரு பதிப்பாளர்களையும் நாம் பாராட்டுகிறோம்.
இவ் விழாவிற்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், போர் மேகங்கள் சூழ்ந்த யாழ் மண்ணில் இருந்து விழாவின் நாயகனாக செங்கை ஆழியான் சென்னை வந்து விழாவில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
தொடர்புடைய சுட்டிகள் :
http://viruba.blogspot.com/2006/07/blog-post_20.html
http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=58

2006-08-25
நாளை விடியும் ; பொதிகை மின்னல்
திருச்சிராப்பள்ளியில் இருந்து வெளிவரும் இதழ் "நாளை விடியும்". இவ்விதழ் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பி.இரெ.அரசெழிலன் ஆவார்.
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்து வெளிவரும் இதழ் "பொதிகை மின்னல்" இவ்விதழ் பல துணுக்கு செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. இதன் ஆசிரியராக வசீகரன் உள்ளார்.
2006-08-21
தமிழில் இணைய முகவரி

எமது தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு www.viruba.com என்ற ஆங்கில இணைய முகவரியில் இயங்கிவருவது அனைவருக்கும் தெரிந்ததே.
தற்சமயம் முற்றுமுழுதாக எந்த ஒரு தளத்தையும் ஆங்கிலம் தவிர்ந்த மொழியில் இணைய முகவரியை அமைத்துக்கொள்ள ICANN அனுமதியை தராத நிலையில், இதுவரைக்கும் அனுமதிக்கப்பட்ட பாதி தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் அமைந்த இணைய முகவரியை நாம் விருபா.comபதிவு செய்துள்ளோம்.
இன்று முதல் அப்புதிய இணைய முகவரியிலும் எமது தளம் இயங்கும் என்ற தகவலை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்க கொள்கிறோம்.
முன்னர் திசைகள் இன் திசைகள்.வணி மற்றும் பாரதி.அமை என்று சில இணைய தளங்கள் தமிழ் இணைய முகவரியுடன் இயங்கியதாக சொல்கிறார்கள், இதனைப்பற்றி தெரிந்தவர்கள் விபரம் கூறினால் உதவியாக இருக்கும்.
Labels: இணையம்
2006-08-19
பிராமின் டுடே
2006-08-08
கதை சொல்லி
கரிசல் இலக்கியத்தின் பிதாமகனும், இன்றைய மூத்த எழுத்தாளருமான கி.ராஜநாராயணன் அவர்களால் கதை சொல்லி 1996 இல் ஆரம்பிக்கப்பட்டது.
கரிசல் மண்ணில் நான்கு மாதப் பயிரிற்கு கந்தாயப் பயிர் என்று வழங்கப்படுவதைப் போல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் கதைசொல்லி ஒரு கந்தாய இதழ் ஆகும்.கிராமியப் பரப்பிற்கு எடுத்துச் செல்லும் அரிய இதழாக இது விழங்குகிறது.
கி.ராஜநாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கழனியூரான் பொறுப்பாசிரியராக இருந்து இவ்விதழ் வெளிவருகிறது.
இந்த இதழிற்கு மூத்த இலக்கிய கர்த்தாவான தி.க.சி, ஆய்வாளர் வல்லிக்கணண்ணன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், இரசிகமணி டி.கே.சி இன் பேரன் தீப.நடராசன், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுப.கோ.நாராயணசாமி, ஜெயபாரதன், கிருஷி போன்றோருடைய ஆலோசனைகளிலும், பங்களிப்பிலும் இவ்விதழ் மிளிர்கிறது.
2006-08-05
சிற்றிதழ் - பயில் நிலம்
பொ.கோபிநாத் அவர்களின் தலமையில் பல இளம் படைப்பாளர்களின் துணையுடன் கொழும்பில் இருந்து வெளிவரும் இதழ் பயில் நிலம்
2006-08-04
உங்கள் பாரதி, கலை, மனிதநேயம்
புதுவையில் இருந்து வெளிவரும் காலாண்டிதழ் உங்கள் பாரதி.
இதன் ஆசிரியராக பாரதிவாணர் சிவா உள்ளார்.
அம்பத்தூரில் இருந்து வெளிவரும் மாத இதழ் கலை.
இதன் ஆசிரியர் - மணிமுடி.
மதுரையிலிருந்து பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உடல், உள்ள, ஆன்மநல மாத இதழ் மனிதநேயம் ஆகும்.