2006-06-27
ஞானம் - கொழும்பிலிருத்து வெளிவரும் இதழ்

தி.ஞானசேகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கொழும்பில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழ் "ஞானம்". 2000 ஜூன் முதல் இவ்விதழ் தவறாமல் மாதாந்தம் வெளி வருகிறது.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பத்திகள் ஞானத்தில் வெளிவருகின்றன. இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களை ஞானத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்விதழை இணையத்தில் www.gnanam.info என்ற முகவரியில் படித்துக்கொள்ளலாம்
2006-06-24
எழுத்தாளர் சிட்டி சுந்தரராஜன் காலமானார்

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளரான சிட்டி சுந்தரராஜன் சென்னையில் நேற்றுக் காலமானார்.
அவருக்கு வயது 96.
தமிழில் பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கும், உயரிய விருதுகளுக்கும் உரியவர்.
இவர் எழுத்தாளர் நரசய்யா அவர்களின் தாய் மாமனார் ஆவார்.
2006-06-23
மல்லிகை - இலங்கையில் அதிக வயதுடைய இதழ்

இலங்கயில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இதழ் மல்லிகை ஆகும். பலப் பல இன்னல்களுக்கு மத்தியில் கடந்த 41 வருடங்களாக வெளிவரும், தமிழ் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற இதழ்.
இலங்கை நாடாளுமன்றத்தினால் விதந்து பாராட்டப்பட்ட ஓரே இலக்கிய சஞ்சிகை. இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான "ஹன்ஸாட்" இதனை பதிவு செய்துள்ளது.
மல்லிகை இதழின் நிறுவனர்,ஆசிரியர் டொமினிக் ஜீவா
2006-06-22
கவிதைக் காலாண்டிதழ் - "தை"

கவிஞர் அறிவுமதி அவர்களின் முயற்ச்சியில் பல கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வெளிவரும் கவிதைக் காலாண்டிதழ் "தை"
2006 தை முதல் "தை" வெளிவருகிறது
2006-06-12
சிற்றிதழ் - சோலைக்குயில்

விழுப்புரம் மாவட்டம் தென்கீரனூரில் இருந்து வெளிவரும் சிற்றிதழ் சோலைக்குயில் ஆகும். இதன் ஆசிரியர் கல்லைக் கவிமுரசார்.
2006-06-11
சிற்றிதழ்கள் மூன்று

சீனு தமிழ்மணி அவர்களை ஆசிரியராகக்கொண்டு துளிப்பா / நகைப்பாக் காலாண்டிதழாக புதுச்சேரியில் இருந்து வெளியாகும் சிற்றிதழ் கரந்தடி

தமிழ்நெஞ்சன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு சிறார்களுக்காக புதுச்சேரியில் இருந்து வெளியாகும் இரு மாத சிற்றிதழ் பட்டாம்பூச்சிகள்

சுப்பையா மதியழகன் மற்றும் அன்பாதவன் அவர்களுடைய முயற்சியில் மும்பையிலிருந்து புதிதாக கவிதையும் கவிதைச்சார்ந்தும் வெளிவந்துள்ள சிற்றிதழ் அணி

