- Web Portal for Tamil Books - http://www.viruba.com

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு - Web Portal for Tamil Books - http://www.viruba.com

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்,

தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களை தருவதற்காக ஆரம்பித்துள்ள விருபா - தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு (www.viruba.com) தளத்தைப் பற்றிய, தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருடைய கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.

இன்னமும் சில வேலைகள் முடிக்கப்படாமல் உள்ள இந்த நிலையில், தமிழ் வலைப்பதிவாளர்களின் கருத்துக்கள் எமக்கு கிடைக்குமாயின், அவைகளையும் நாம் கவனத்திற் கொண்டு எமது இறுதிக்கட்ட வேலைகளை செய்து, தளத்தை மென்மேலும் சிறப்பாக அமைக்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவரின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

எமது நோக்கம்

எமது நோக்கம் முற்றும் முழுதாக தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் இணையத்தினூடாக தருதல் மட்டுமே. தமிழர்களால் எழுதப்பட்ட மற்றைய மொழிப் புத்தகங்களையோ, அல்லது தமிழர்களுக்கு பயன்தரக்கூடிய வேறு எந்த மொழிப் புத்தகங்களையும் எமது தளத்தில் இணைக்கப் போவதில்லை. தமிழ்ப்புத்தகம் தொடர்பில்லாத எந்த ஒரு விடயத்தையும் நாம் எமது தளத்தில் இணைக்கப்போவதில்லை. இதனை ஒரு குறுகிய மனப்பான்மை நிலை என்று எவரும் நினைக்க வேண்டாம். எமது முதலும் இறுதியுமான நோக்கம் தமிழ்ப் புத்தகங்களும் அதனுடன் தொடர்புடைய விடயங்களும் மட்டுமே.

பல சேவைகளை ஆரம்பித்து, எதிலும் வெற்றியை அடையாமல் இருப்பதைவிட, ஒரு விடயத்தை மட்டுமே எடுத்து அதில் பூரண வெற்றியை அடையவே நாம் விரும்புகிறோம்.

அந்த ஒரு விடயம் புத்தகம்.

இன்று பல தமிழ் ஊடகங்கள் தங்களுடைய வெளியீடுகளில், புத்தகங்களுக்கு மதிப்புரைகளை வெளியிடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளன. இதற்காக அவ்வூடகங்கள் சிறந்த கல்விமான்களிடமும், துறை சார்ந்த வல்லுனர்களிடமும் மதிப்புரைகளைப் பெற்று வெளிடுகின்றன. இதற்காக சில மணிநேரங்கள் செலவிடப்படுகிறது. ஆனாலும் அவ் வெளியீடு வெளியாகி அதிகபட்சமாக இரண்டு வாரங்களின் பின்னர் அது இலகுவில் கிடைக்காது. அதே நேரம் ஒரே புத்தகத்திற்கு பல ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் ஒரே பார்வையில் பார்க்கவும் முடியாது.

நாம், இதர தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளை சேகரித்து, அவ் ஊடகங்கள் அனுமதியுடன், விருபா தகவல் தளத்தில் காண்பிப்பதற்கு தயாராக உள்ளோம். இதன்மூலம் சிறந்த கல்விமான்களும், துறை சார்ந்த வல்லுனர்களும் வழங்கிய மதிப்புரைகள் ஓரிடமாக, நீண்ட நாட்களுக்கு இணையத்தில் வைத்திருப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையான வாசகர்களைச் சென்றடையயும்.

நாங்கள் எந்த பதிப்பகத்தையோ அல்லது எழுத்தாளரையோ சார்ந்தவர்கள் இல்லை. நாங்கள் பதிப்புத் துறையை சாராதவர்கள். எந்த ஒரு பதிப்பகத்தையோ அல்லது எழுத்தாளரையோ முன்னிலைப்படுத்துவதோ, விளம்பரப்படுத்துவதோ எமது நோக்கம் அல்ல.

எங்கள் தளத்தில் யாவும் அகர வரிசையில் அல்லது இணைக்கப்பட்ட திகதியின் அடிப்படையில் மட்டுமே வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

விருபா தளத்தில் புத்தக விற்பனை இல்லை.

அதேபோல் புத்தகங்களுக்கு மதிப்புரை அல்லது பரிந்துரை செய்வதும் இல்லை.

புத்தகங்களப் பற்றிய தகவலை தருதல் மட்டுமே.

அறிமுகம்

வணக்கம்,

தமிழ்ப் பதிப்புலகத்தினர், மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கணினி யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளொரு வடிவமும் பொளுதொரு விடயமாக, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கணினி பயன்பாட்டின் மேம்படுத்தப்பட்ட அதி உன்னத வடிவமான இணையத்தில் ஏராளமான விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அள்ள அள்ள குறையாத தகவற் சுரங்கமாக இணையம் இருந்தாலும், எமது தாய் மொழியாகிய தமிழில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்ற நிலை இன்னமும் உருவாகவில்லை.

தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய பூரண ஒருங்கிணப்பட்ட ஒரு தகவல் தரவு தளம் இல்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் முகமாக நாம் விருபா தமிழ்ப் புத்தக தகவல் தளத்தை உருவாக்கியுள்ளோம்.

விருபா தளத்தினூடாக நாம் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தரவுள்ளோம்.

நாங்கள் இங்கு அனைத்து என்று குறிப்பிட்டதில் பினவரும் விடயங்கள் அடங்குகின்றன.

1.புத்தகம்
a.) புத்தகத்தின் பெயர்
b.) விலை
c.) அட்டைப்படம்
d.) பதிப்பு விபரம்
e.) பிரிவு
f.) பெற்ற விருது(கள்)
g.) பக்கங்களின் எண்ணிக்கை
h.) அளவு
i.) தன்மை

2.புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின்
a.) பெயர்
b.) புகைப்படம்
c.) முகவரி
d.) தொலைபேசி இலக்கம்
e.) மின்னஞ்சல் முகவரி
f.) வலைப்பதிவு
g.) கல்வித்தகுதி / பணிவிபரம்
h.) பெற்ற சிறப்புப் பட்டங்கள்

3.புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தின்
a.) பெயர்
b.) விற்பனைச் சின்னம் (Logo)
c.) முகவரி
d.) தொலைபேசி இலக்கம்
e.) மின்னஞ்சல் முகவரி
f.) வலைப்பதிவு / இணையதளம்
g.) ஆரம்பித்தவர் / உரிமையாளர்
h.) நிர்வாக ஆசிரியர்

4.புத்தகத்திற்கு இதர தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்
5.விற்பனை நிலவரம்
6.புத்தகத்தைப் பற்றிய வாசகர் கருத்துகள்

இவற்றுடன் புத்தக வெளியீட்டு விழாக்கள், புத்தகக் கண்காட்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என்று ஒரு புத்தகத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் நாம் விருபா தளத்தினூடாக தரவுள்ளோம்.

www.viruba.com

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு

http://www.viruba.com

Read this doc on Scribd: About Viruba.com


தொடர்பு கொள்ள;

து.குமரேசன்
இலக்கம் : 32 அஸ்ட லக்ஷ்மி கார்டன்,
பெசண்ட் நகர்,
சென்னை 600 090

தொலைபேசி : 91 9840254333